ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
213. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு அடியார், (அல்லாஹ்விடம்) நரகத்தை விட்டு காப்பாற்றும்படி ஏழுதடவை பிரார்த்தித்தால், “என் இறைவா! உன்னுடைய இன்ன அடியார் என்னை விட்டு காப்பாற்றும்படி உன்னிடம் கேட்கிறார். எனவே என்னை விட்டு அவரைக் காப்பாற்றுவாயாக!” என நரகம் கூறுகிறது.
ஒரு அடியார், அல்லாஹ்விடம் ஏழுதடவை சொர்க்கத்தைக் கேட்டு பிரார்த்தித்தால், “என் இறைவா! உன்னுடைய இன்ன அடியார் என்னை உன்னிடம் கேட்டுள்ளார். எனவே அவரை என்னுள் நுழையச் செய்வாயாக!” என்று சொர்க்கம் கூறுகிறது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
مَا اسْتَجَارَ عَبْدٌ مِنَ النَّارِ سَبْعَ مَرَّاتٍ إِلَّا قَالَتِ النَّارُ: يَا رَبِّ إِنَّ عَبْدَكَ فُلَانًا اسْتَجَارَكَ مِنِي فَأَجِرْهُ، وَلَا يَسْأَلُ اللَّهَ الْجَنَّةَ سَبْعَ مَرَّاتٍ إِلَّا قَالَتِ الْجَنَّةُ: يَا رَبِّ إِنَّ عَبْدَكَ فُلَانًا سَأَلَنِي فَأَدْخِلْهُ
சமீப விமர்சனங்கள்