Category: முஅத்தா மாலிக்

Muwatta-Malik-2744

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2744.


دَخَلْتُ مَسْجِدَ دِمَشْقَ، فَإِذَا فَتًى شَابٌّ بَرَّاقُ الثَّنَايَا، وَإِذَا النَّاسُ مَعَهُ، إِذَا اخْتَلَفُوا فِي شَيْءٍ أَسْنَدُوا إِلَيْهِ، وَصَدَرُوا عَن قَوْلِهِ، فَسَأَلْتُ عَنهُ، فَقِيلَ: هَذَا مُعَاذُ بْنُ جَبَلٍ، فَلَمَّا كَانَ الْغَدُ، هَجَّرْتُ، فَوَجَدْتُهُ قَدْ سَبَقَنِي بِالتَّهْجِيرِ، وَوَجَدْتُهُ يُصَلِّي، قَالَ: فَانْتَظَرْتُهُ حَتَّى قَضَى صَلاَتَهُ، ثُمَّ جِئْتُهُ مِنْ قِبَلِ وَجْهِهِ، فَسَلَّمْتُ عَلَيْهِ، ثُمَّ قُلْتُ: وَاللَّهِ إِنِّي لأُحِبُّكَ لِلَّهِ، فَقَالَ: آللَّهِ؟ فَقُلْتُ: آللَّهِ، فَقَالَ: آللَّهِ؟ فَقُلْتُ: آللَّهِ، فَقَالَ: آللَّهِ؟ فَقُلْتُ: آللَّهِ، قَالَ: فَأَخَذَ بِحُبْوَةِ رِدَائِي، فَجَبَذَنِي إِلَيْهِ، وَقَالَ: أَبْشِرْ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ يَقُولُ: قَالَ اللهُ تَبَارَكَ وَتَعَالَى: وَجَبَتْ مَحَبَّتِي لِلْمُتَحَابِّينَ فِيَّ، وَالْمُتَجَالِسِينَ فِيَّ، وَالْمُتَزَاوِرِينَ فِيَّ، وَالْمُتَبَاذِلِينَ فِيَّ.


Muwatta-Malik-457

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

457. ஸஃது இப்னு உபாதா (ரலி) அவர்களது வீட்டில் இருந்த எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களே! உங்கள் மீது ஸலவாத் கூறும்படி அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். நாங்கள் எப்படி ஸலவாத் கூறுவோம் என்று அவர்களிடம் பஷீர் இப்னு ஸஃது (ரலி) அவர்கள் கேட்டார்கள். அவர் இதைக் கேட்டிருக்கக் கூடாது என்று நாங்கள் எண்ணும் அளவுக்கு நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். பின்பு அவர்கள், ”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லய்த அலா இப்றாஹீம வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்றாஹீம ஃபில் ஆலமீன், இன்னக்க ஹமீதுன் மஜீத்””, என்று கூறுங்கள். ஸலாம் கூறுவது, நீங்கள் அறிந்தது போல் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூமஸ்ஊத் அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


أَتَانَا رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ فِي مَجْلِسِ سَعْدِ بْنِ عُبَادَةَ، فَقَالَ لَهُ بَشِيرُ بْنُ سَعْدٍ: أَمَرَنَا اللهُ أَنْ نُصَلِّيَ عَلَيْكَ يَا رَسُولَ اللهِ، فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ؟ قَالَ: فَسَكَتَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، حَتَّى تَمَنَّيْنَا أَنَّهُ لَمْ يَسْأَلْهُ، ثُمَّ قَالَ: قُولُوا: اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، فِي الْعَالَمِينَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَالسَّلاَمُ كَمَا قَدْ عَلِمْتُمْ.


Muwatta-Malik-456

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 107

நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவது

456. இறைத்தூதர்(ஸல்) அவர்களே! (தொழும் போது) நாங்கள் உங்கள் மீது ஸலவாத் கூறுவது எப்படி? என நபித்தோழர்கள் கேட்டார்கள். ”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அஸ்வாஜிஹி, வ துர்ரியாத்திஹி, கமா ஸல்லய்த அலா இப்றாஹீம வ பாரிக் அலா முஹம்மதின் வ அஸ்வாஜிஹி. வ துர்ரியத்திஹி கமா பாரக்த அலா ஆலி இப்றாஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத்”” என்று கூறுங்கள் என்று கூறினார்கள்.


أَنَّهُمْ قَالُوا: يَا رَسُولَ اللهِ، كَيْفَ نُصَلِّي عَلَيْكَ؟ فَقَالَ: قُولُوا: اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَأَزْوَاجِهِ، وَذُرِّيَّتِهِ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَأَزْوَاجِهِ، وَذُرِّيَّتِهِ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.


Muwatta-Malik-2743

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2743. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு அடியானை அல்லாஹ் நேசிக்கும் பொழுது ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்!’ என்று கூறுவான். எனவே, ஜிப்ரீல் (அலை) அவர்கள் விண்ணகத்தில் வசிப்பவர்களிடம், ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான்; நீங்களும் அவரை நேசியுங்கள்’ என்று அறிவிப்பார்கள். உடனே, விண்ணக்கத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்கு பூமியிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.

ஒரு அடியானை அல்லாஹ் வெறுக்கும் பொழுது ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, ‘அல்லாஹ் இன்னாரை வெறுக்கிறான். எனவே, நீங்களும் அவரை வெறுங்கள்!’ என்று கூறுவான். எனவே, ஜிப்ரீல் (அலை) அவர்கள் விண்ணகத்தில் வசிப்பவர்களிடம், ‘அல்லாஹ் இன்னாரை வெறுக்கிறான்; நீங்களும் அவரை வெறுங்கள்!’ என்று அறிவிப்பார்கள். உடனே, விண்ணக்கத்தாரும் அவரை வெறுப்பார்கள். பிறகு அவருக்கு பூமியிலும் அந்நிலை ஏற்படுகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

மாலிக் அவர்கள், “ஒரு அடியானை அல்லாஹ் வெறுக்கும் பொழுது” என்ற வாசகத்திற்கு முதல் பகுதியில் உள்ளது போன்றே ஸுஹைல் பின் அபூஸாலிஹ் கூறினார் என்று கருதுகிறேன் என்று கூறுகிறார்.


إِذَا أَحَبَّ اللهُ الْعَبْدَ، قَالَ لِجِبْرِيلَ: قَدْ أَحْبَبْتُ فُلاَنًا، فَأَحِبَّهُ، فَيُحِبُّهُ جِبْرِيلُ، ثُمَّ يُنَادِي فِي أَهْلِ السَّمَاءِ: إِنَّ اللهَ قَدْ أَحَبَّ فُلاَنًا، فَأَحِبُّوهُ، فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ، ثُمَّ يُوضَعُ لَهُ الْقَبُولُ فِي الأَرْضِ، وَإِذَا أَبْغَضَ اللهُ الْعَبْدَ.


Muwatta-Malik-2803

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2803. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினர் இல்லாமல் மேற்கொள்வது கூடாது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ، تُسَافِرُ مَسِيرَةَ يَوْمٍ وَلَيْلَةٍ، إِلاَّ مَعَ ذِي مَحْرَمٍ مِنْهَا.


Muwatta-Malik-2451

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2451.


سُئِلَ رَسُول الله صَلى الله عَليه وسَلم عَنِ الْبِتْعِ؟ فَقَالَ: كُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهُوَ حَرَامٌ.


Muwatta-Malik-2707

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2707. என் தந்தை ஸஹ்ல் பின் ஹுனைப் (ரலி) அவர்கள் கர்ரார் எனும் இடத்தில் குளித்தார்கள். அவர்கள் அணிந்திருந்த ஆடையை கழற்றிய போது ஆமிர் பின் ரபீஆ பார்த்துக் கொண்டிருந்தார். ஸஹ்ல் வெண்மை நிற அழகிய தோல் உள்ள மனிதர் அப்போது ஆமிர் “இன்று நான் பார்த்ததைப் போன்று வேறு எப்போதும் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணின் தோலைக் கூடப் பார்த்ததில்லை என்று கூறினார். உடனே அவ்விடத்தில் ஸஹ்ல் (ரலி) அவர்களுக்கு முடியாமல் போனது. அவருக்கு காய்ச்சல் கடுமையானது. இறைத் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று ஸஹ்ல் அவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர் உங்களுடன் வர முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

உடனே அவரிடம் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். ஆமிர் நடந்து கொண்ட விதம் பற்றி ஸஹ்ல் (ரலி) அவர்கள் இறைத் தூதரிடம் தெரிவித்தார்கள். அப்போது இறைத் தூதர் (ஸல்) அவர்கள் உங்களில் ஒருவர் ஏன் தன் சகோதரனை கொல்ல வேண்டும்? நீங்கள் (அவரிடம் விரும்பத்தக்க விஷயத்தைப் பார்க்கும் போது அவருக்காக) பரக்கத்தை வேண்டியிருக்கக் கூடாதா? கண்ணேறு என்பது உண்மையே. (ஆமிரே) நீங்கள் உளூச் செய்து அந்த நீரை ஸஹ்ல் இடம் கொடுங்கள் என்று கூறினார்கள். ஆமிர் (ரலி) அவர்கள் உளூச் செய்து அந்நீரை ஸஹ்ல் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். இதன் பின் ஸஹ்ல் (ரலி) அவர்கள் எவ்விதப்

اغْتَسَلَ أَبِي سَهْلُ بْنُ حُنَيْفٍ بِالْخَرَّارِ، فَنَزَعَ جُبَّةً كَانَتْ عَلَيْهِ، وَعَامِرُ بْنُ رَبِيعَةَ يَنْظُرُ، قَالَ: وَكَانَ سَهْلٌ رَجُلاً أَبْيَضَ، حَسَنَ الْجِلْدِ، قَالَ: فَقَالَ لَهُ عَامِرُ بْنُ رَبِيعَةَ: مَا رَأَيْتُ كَالْيَوْمِ، وَلاَ جِلْدَ عَذْرَاءَ، قَالَ: فَوُعِكَ سَهْلٌ مَكَانَهُ، وَاشْتَدَّ وَعْكُهُ، فَأُتِيَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَأُخْبِرَ أَنَّ سَهْلاً وُعِكَ، وَأَنَّهُ غَيْرُ رَائِحٍ مَعَكَ يَا رَسُولَ اللهِ، فَأَتَاهُ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَأَخْبَرَهُ سَهْلٌ بِالَّذِي كَانَ مِنْ شَأْنِ عَامِرٍ، فَقَالَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: عَلاَمَ يَقْتُلُ أَحَدُكُمْ أَخَاهُ، أَلاَّ بَرَّكْتَ، إِنَّ الْعَيْنَ حَقٌّ، تَوَضَّأْ لَهُ، فَتَوَضَّأَ لَهُ عَامِرٌ، فَرَاحَ سَهْلٌ مَعَ رَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، لَيْسَ بِهِ بَأْسٌ.


Next Page » « Previous Page