Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-324

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

324. ஒருவர் தூங்கினால் சுப்ஹு வந்து விடும் என அஞ்சினால் அவர் தூங்கும் முன்பே வித்ருத் தொழட்டும். இரவின் பிற்பகுதியில் ஒருவர் விழிக்க முடியும் என்று இருந்தால் அவர் தன் வித்ரை இறுதி நேரத்திலேயே தொழட்டும் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்ளக் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


«مَنْ خَشِيَ أَنْ يَنَامَ حَتَّى يُصْبِحَ، فَلْيُوتِرْ قَبْلَ أَنْ يَنَامَ. وَمَنْ رَجَا أَنْ يَسْتَيْقِظَ آخِرَ اللَّيْلِ فَلْيُؤَخِّرْ وِتْرَهُ»


muwatta-malik-323

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

323. ஒருவர் அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களிடம் ‘வித்ருத் தொழுகை கடமையானதா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்களும் வித்ருத் தொழுதுள்ளார்கள். நபித் தோழர்களும் வித்ருத் தொழுதுள்ளார்கள் என்று பதில் கூறினார்கள். மீண்டும் அம்மனிதர் அதே கேள்வியைக் கேட்க அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களும் அதே பதிலைக் கூறியதாக தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


أَنَّ رَجُلًا سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ عَنِ الْوِتْرِ أَوَاجِبٌ هُوَ؟ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: قَدْ أَوْتَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَوْتَرَ الْمُسْلِمُونَ،

فَجَعَلَ الرَّجُلُ يُرَدِّدُ عَلَيْهِ وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يَقُولُ: «أَوْتَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَوْتَرَ الْمُسْلِمُونَ»


muwatta-malik-322

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

322. அபூபக்கர்(ரலி) அவர்கள் படுக்கைக்கு வந்து (தூங்க விரும்பி) விட்டால் வித்ருத் தொழுது விடுவார்கள். உமர்(ரலி) அவர்கள் இரவின் பிற்பகுதியில் வித்ருத் தொழுவார்கள். நானோ என் படுக்கைக்கு (தூங்க) வந்து விட்டால் வித்ரு தொழுது விடுவேன் என்று ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.


«كَانَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ فِرَاشَهُ أَوْتَرَ»،

وَكَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ «يُوتِرُ آخِرَ اللَّيْلِ».

قَالَ سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ: فَأَمَّا أَنَا فَإِذَا جِئْتُ فِرَاشِي أَوْتَرْتُ


muwatta-malik-321

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

321. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களுடன் நான் (இரவில்) மக்காவிற்கு பயணம் செய்து கொண்டிருந்தேன். சுப்ஹு நேரத்தை அது வந்தால் வித்ருத் தவறி விடுமே எனப்பயந்து நான் (என் வாகனத்தில் இருந்து) இறங்கினேன், வித்ருத் தொழுதேன். பின்பு இப்னு உமர்(ரலி) அவர்களைப் போய்ச் சேர்ந்தேன். எங்கு சென்றீர்? என அப்துல்லா இப்னு உமர்(ரலி) என்னிடம் கேட்டார்கள். சுப்ஹு நேரத்தை பயந்து நான் (அங்கே) இறங்கி வித்ருத் தொழுதேன் என்று கூறினேன். நபி(ஸல்) அவாகளிடம் (இது விஷயத்தில்) அழகிய முன்மாதிரி இருக்கிறது உமக்குத் தொரியாதா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! தொரியாது’ என்றேன். நபி(ஸல்) அவர்கள் (பயணத்தின் போது) ஒட்டகத்திலேயே வித்ருத் தொழுவார்கள் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள் என்பதாக ஸயீத் இப்னு யஸார் கூறுகின்றார்கள்.


كُنْتُ أَسِيرُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بِطَرِيقِ مَكَّةَ، قَالَ سَعِيدٌ: فَلَمَّا خَشِيتُ الصُّبْحَ، نَزَلْتُ، فَأَوْتَرْتُ، ثُمَّ أَدْرَكْتُهُ. فَقَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: أَيْنَ كُنْتَ فَقُلْتُ لَهُ خَشِيتُ الصُّبْحَ، فَنَزَلْتُ، فَأَوْتَرْتُ، فَقَالَ عَبْدُ اللَّهِ: أَلَيْسَ لَكَ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ، فَقُلْتُ: بَلَى، وَاللَّهِ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يُوتِرُ عَلَى الْبَعِيرِ»


muwatta-malik-320

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

320. சிரியா நாட்டைச் சேர்ந்த அபூ முஹம்மத் என்பவர் ‘வித்ருத் தொழுகை’ கடமையானதாகும் என்று கூறியதாக பனு கினானாவைச் சார்ந்த ஒருவர் என்னிடம் வந்து கூறினார். நான் (இது விஷயமாகக் கேட்க) உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் பள்ளியில் ஓய்வு பெற்றுக் கொண்டிருந்த போது அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். அபூ முஹம்மத் அவர்கள் கூறிய செய்தியை அவர்களிடம் தொரிவித்தேன். ‘ஐந்து நேரத் தொழுகையை அல்லாஹ் தன் அடியார் மீது கடமையாக்கி உள்ளான். யார் அந்தக் கடமையை லேசாகக் கருதி அவற்றில் எதையும் பாழாக்கி விடாமல் நிறைவேற்றுகின்றாரோ அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்வது அல்லாஹ்வின் மீது பொறுப்பாகி விடுகிறது. ஒருவர் அவைகளை நிறைவேற்றவில்லையாயின் அல்லாஹ்வின் மீது (எவ்விதப்) பொறுப்பும் இல்லை. அவன் விரும்பினால் அவனைத் தண்டிக்கலாம். விரும்பினால் சொர்க்கத்தில் நுழையச் செய்வான் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே, (ஐந்து நேரத் தொழுகை தவிர மற்ற தொழுகைகள் சுன்னத் என்பதால்) அபூ முஹம்மத் அவர்கள் (வித்ரு கடமை என்று கூறியதன் மூலம்) பொய் கூறி விட்டார் என உபாதா(ரலி) கூறினார்கள். இதை முக்தஜ்ஜி என்பார் கூறுகிறார்கள்.


أَنَّ رَجُلًا مِنْ بَنِي كِنَانَةَ يُدْعَى الْمُخْدَجِيَّ سَمِعَ رَجُلًا بِالشَّامِ يُكَنَّى أَبَا مُحَمَّدٍ، يَقُولُ: إِنَّ الْوِتْرَ وَاجِبٌ، فَقَالَ: الْمُخْدَجِيُّ فَرُحْتُ إِلَى عُبَادَةَ بْنِ الصَّامِتِ فَاعْتَرَضْتُ لَهُ وَهُوَ رَائِحٌ إِلَى الْمَسْجِدِ، فَأَخْبَرْتُهُ بِالَّذِي قَالَ أَبُو مُحَمَّدٍ، فَقَالَ: عُبَادَةُ كَذَبَ أَبُو مُحَمَّدٍ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «خَمْسُ صَلَوَاتٍ كَتَبَهُنَّ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى الْعِبَادِ، فَمَنْ جَاءَ بِهِنَّ، لَمْ يُضَيِّعْ مِنْهُنَّ شَيْئًا، اسْتِخْفَافًا بِحَقِّهِنَّ، كَانَ لَهُ عِنْدَ اللَّهِ عَهْدٌ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ. وَمَنْ لَمْ يَأْتِ بِهِنَّ، فَلَيْسَ لَهُ عِنْدَ اللَّهِ عَهْدٌ. إِنْ شَاءَ عَذَّبَهُ وَإِنْ شَاءَ أَدْخَلَهُ الْجَنَّةَ»


muwatta-malik-319

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 73

வித்ருத் தொழுகை

319. இரவுத் தொழுகை (தொழும் முறை) பற்றி நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டார். இரவுத் தொழுகை இரண்டிரண்டாக தொழுவதாகும். உங்களில் ஒருவர் சுப்ஹு நேரத்தை பயந்தால் ஒரு ரக்அத்தை அவர் தொழட்டும்.அவர் தொழுத ஒரு ரக்அத் அவருக்கு வித்ராகி விடும் என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள் என அப்துல்லா இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.


أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَلَاةِ اللَّيْلِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ أَحَدُكُمُ الصُّبْحَ، صَلَّى رَكْعَةً وَاحِدَةً، تُوتِرُ لَهُ مَا قَدْ صَلَّى»


muwatta-malik-318

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

318. நபி(ஸல்) அவர்களின் தொழுகையை இரவில் நான் உற்று கவனித்துள்ளேன். கட்டையிலான அவர்களது நிலைப்படியை தலையணையாக்கிக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் எழுந்து மிக மிக நீண்ட இரண்டு ரக்அத் தொழுதார்கள்;. பின்பு முன்பு இருந்தது போன்றில்லாமல் இரண்டு ரக்அத் தொழுவார்கள். அதன் பின்பும் முன்பு போன்று (நீண்ட அளவில்) இல்லாமல் இரண்டு ரக்அத் தொழுதார்கள். பின்பு முன்பு போன்று, (சற்று நீண்டதாக) இல்லாமல் (சிறிய அளவில்) இரண்டு ரக்அத் தொழுதார்கள்.அதற்குப் பிறகு முன்பு போன்று இல்லாமல் (மிகச் சிறிய அளவில்) இரண்டு ரக்அத் தொழுதார்கள். அதற்குப் பிறகும் முன்பு போல் இல்லாமல் (மிக மிக சிறிய அளவில்) இரண்டு ரக்அத் தொழுதார்கள். பின்பு (ஒரு ரக்அத்) வித்ருத் தொழுதார்கள். இந்த ரக்அத் (எண்ணிக்கை) 13 ஆகும் என ஸைத் இப்னு காலித் அல் ஜுஹ்னீ கூறுகின்றார்கள்.


لَأَرْمُقَنَّ اللَّيْلَةَ صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. قَالَ: فَتَوَسَّدْتُ عَتَبَتَهُ، أَوْ فُسْطَاطَهُ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَصَلَّى رَكْعَتَيْنِ طَوِيلَتَيْنِ طَوِيلَتَيْنِ طَوِيلَتَيْنِ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا، ثُمَّ أَوْتَرَ فَتِلْكَ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً»


muwatta-malik-317

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

317. நபி(ஸல்) அவர்களின் மனைவியும் எனது சிறிய தாயாருமான மைமூனா(ரலி) அவர்களது இல்லத்தில் ஒரு இரவு தங்கியிருந்தேன். அப்போது நான் தலையணையின் குறுக்கு வாட்டில் படுத்திருந்தேன். நபி(ஸல்) அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் அதன் நீள வாட்டில் படுத்திருந்தனர். நபி(ஸல்) அவர்கள் இரவின் பாதிநேரம் முடிந்தோ, அல்லது அதற்கும் சற்று நேரம் முன்போ, பின்போ, தூக்கத்தில் இருந்து விழித்து அமர்ந்தார்கள். தன் கையால் தன் முகத்தைத் தடவினார்கள். பின்பு குர்ஆனின் 3 வது அத்தியாயமான ஆல இம்ரான் சூராவின் கடைசிப் பத்து வசனங்களை ஓதினார்கள். தண்ணீர்ப் பாத்திரம் பக்கம் போய் நின்று அமைதியாக ஒளுச் செய்தார்கள். பின்பு தொழுகைக்குத் தயாரானார்கள். நானும் எழுந்து அவர்கள் செய்தது போல் செய்து விட்டுப் போய் அவர்களின் அருகில் (இடப்புறம்) நின்றேன். நபி(ஸல்) அவர்கள் என் தலையில் தனது வலது கையை வைத்து, என் வலது காதைப் பிடித்துத் திருகி (வலது புறத்தில் நிறுத்தி)னார்கள். நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத், பின்பு இரண்டு, பின்பு இரண்டு, பின்பு இரண்டு, பின்புஇரண்டு, பின்பு இரண்டு (ஆக 12) ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு (சிறிது நேரம்) படுத்திருந்தார்கள். பின்பு வித்ருத் தொழுதார்கள். பாங்கு கூறுபவர் வந்ததும், சிறிய அளவில் இரண்டு ரக்அத் தொழுதார்கள். பின்பு (வீட்டை விட்டு)

أَنَّهُ بَاتَ لَيْلَةً عِنْدَ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهِيَ خَالَتُهُ، قَالَ: فَاضْطَجَعْتُ فِي عَرْضِ الْوِسَادَةِ وَاضْطَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَهْلُهُ، فِي طُولِهَا. فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا انْتَصَفَ اللَّيْلُ، أَوْ قَبْلَهُ بِقَلِيلٍ، أَوْ بَعْدَهُ بِقَلِيلٍ، اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَلَسَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ بِيَدِهِ، ثُمَّ «قَرَأَ الْعَشْرَ الْآيَاتِ الْخَوَاتِمَ مِنْ سُورَةِ آلِ عِمْرَانَ». ثُمَّ قَامَ إِلَى شَنٍّ مُعَلَّقٍ فَتَوَضَّأَ مِنْهُ، فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ قَامَ يُصَلِّي. قَالَ ابْنُ عَبَّاسٍ: فَقُمْتُ فَصَنَعْتُ مِثْلَ مَا صَنَعَ، ثُمَّ ذَهَبْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ، فَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ الْيُمْنَى عَلَى رَأْسِي، وَأَخَذَ بِأُذُنِي الْيُمْنَى يَفْتِلُهَا، فَصَلَّى رَكْعَتَيْنِ. ثُمَّ رَكْعَتَيْنِ. ثُمَّ رَكْعَتَيْنِ. ثُمَّ رَكْعَتَيْنِ. ثُمَّ رَكْعَتَيْنِ. ثُمَّ رَكْعَتَيْنِ. ثُمَّ أَوْتَرَ ثُمَّ اضْطَجَعَ، حَتَّى أَتَاهُ الْمُؤَذِّنُ. فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ، ثُمَّ خَرَجَ فَصَلَّى الصُّبْحَ


muwatta-malik-316

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

316. நபி(ஸல்) அவர்கள் வித்ரு உள்பட) இரவில் 13 ரக்அத் தொழுவார்கள். பின்பு சுபுஹுக்கான பாங்கைக் கேட்டதும் சிறிய அளவில் இரண்டு ரக்அத் தொழுவார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُصَلِّي بِاللَّيْلِ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً ثُمَّ يُصَلِّي إِذَا سَمِعَ النِّدَاءَ بِالصُّبْحِ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ»


muwatta-malik-315

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

315. ரமளானில் நபி(ஸல்) அவர்களின் தொழுகை எப்படி இருந்தது? என்று நான் கேட்டேன். ரமளானிலும், மற்ற நாட்களிலும் நபி(ஸல்) அவர்கள் 11 ரக்அத்தை விட அதிகப்படுத்தியதில்லை. (முதலில்) நான்கு ரக்அத் தொழுவார்கள். அவைகளின் நீளம் அதன் அழகு எப்படி இருந்தது என்று நீ கேட்க வேண்டாம். (அந்த அளவுக்கு அழகாகவும் நீளமானதாகவும் இருந்தது). பின்பு நான்கு ரக்அத் தொழுவார்கள். அதன் நீளமும், அழகும் (எப்படி இருந்தது பற்றி நீ கேட்கவே வேண்டாம். பின்பு மூன்று ரக்அத் தொழுவார்கள். (எட்டு ரக்அத்க்களுக்கும், மூன்று ரக்அத்துக்களுக்குமிடையே தூங்கி விட்டு, ஒளுச் செய்யாமல் வித்ருத் தொழுத நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களே! வித்ருக்கு முன் தூங்கினீர்களே!’ என்று கேட்டேன். ‘ஆயிஷா! என் கண்கள் தூங்கின. என் இதயம் தூங்கவில்லை’ என்று பதில் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள். இதை அபூ ஸலமா இப்னு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபு கூறுகின்றார்கள்.


أَنَّهُ سَأَلَ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَيْفَ كَانَتْ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَمَضَانَ؟ فَقَالَتْ: مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَزِيدُ فِي رَمَضَانَ، وَلَا فِي غَيْرِهِ، عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً. يُصَلِّي أَرْبَعًا، فَلَا تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي أَرْبَعًا، فَلَا تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي ثَلَاثًا. فَقَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَتَنَامُ قَبْلَ أَنْ تُوتِرَ؟ فَقَالَ: «يَا عَائِشَةُ إِنَّ عَيْنَيَّ تَنَامَانِ وَلَا يَنَامُ قَلْبِي»


Next Page » « Previous Page