Category: முஅத்தா மாலிக்

Muwatta-Malik-126

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

126. ஒருவர் விந்து கொட்டியுள்ள அடையாளத்தைக் காண்கிறார். எப்போது ஏற்பட்டது என்பதை அவர் அறியவில்லை. கனவில் கண்டதையும் அவன் நினைவு கொள்ள முடியவில்லை. இவர் விஷயமாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறும் போது, ”அவர் இறுதியில் தூங்கிய தூக்கத்திற்காக அவர் குளிக்கட்டும். அந்தத் தூக்கத்திற்குப் பின் தொழுதிருந்தால், ஒருவன் கனவு காணாமலேயே விந்து வெளியாகி இருக்கும். விந்து வெளியாகாமலேயே கனவு கண்டிருப்பான் என்பதால் அவன் இறுதியாக தூங்கிய பின் தொழுததை மட்டும் மீண்டும் தொழட்டும். தன் ஆடையில் ஈரத்தைக் கண்டால் அவன் மீது குளிப்பது கடமையாகும்.

இவ்வாறே உமர்(ரலி) அவர்கள் தன் தூக்கத்தின் இறுதியில் தொழுததையே மீண்டும் தொழுதுள்ளார்கள். அதற்கு முன்னுள்ளதை மீண்டும் தொழவில்லை என்று மாலிக் (ரஹ்) குறிப்பிட்டார்கள்.


قَالَ مَالِكٌ فِي رَجُلٍ وَجَدَ فِي ثَوْبِهِ أَثَرَ احْتِلاَمٍ وَلاَ يَدْرِي مَتَى كَانَ؟ وَلاَ يَذْكُرُ شَيْئًا رَأَى فِي مَنَامِهِ، قَالَ: لِيَغْتَسِلْ مِنْ أَحْدَثِ نَوْمٍ نَامَهُ، فَإِنْ كَانَ صَلَّى بَعْدَ ذَلِكَ النَّوْمِ، فَلْيُعِدْ مَا كَانَ صَلَّى بَعْدَ ذَلِكَ النَّوْمِ، مِنْ أَجْلِ أَنَّ الرَّجُلَ رُبَّمَا احْتَلَمَ، وَلاَ يَرَى شَيْئًا، وَيَرَى وَلاَ يَحْتَلِمُ، فَإِذَا وَجَدَ فِي ثَوْبِهِ مَاءً، فَعَلَيْهِ الْغُسْلُ، وَذَلِكَ أَنَّ عُمَرَ أَعَادَ مَا كَانَ صَلَّى، لآخِرِ نَوْمٍ نَامَهُ، وَلَمْ يُعِدْ مَا كَانَ قَبْلَهُ.


Muwatta-Malik-132

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

132. ஒரு மனிதருக்கு மனைவியர் மற்றும் அடிமைப் பெண்கள் உள்ளனர். இவர்கள் அனைவரிடமும் குளிப்பதற்கு முன் உடலுறவு கொள்ளலாமா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் ”ஒரு மனிதன் குளிப்பதற்கு முன் தன் அடிமைப் பெண்ணை உடலுறவு கொள்வது குற்றமில்லை. அடிமைப் பெண் அல்லாத பெண்களில் ஒருவரிடம் உடலுறவு கொண்டு விட்டு, அதேநாளில் மற்றொரு பெண்ணிடம் உடலுறவு கொள்வது வெறுக்கத்தக்கதாகும். பின்பு அடிமைப் பெண்ணிடம் உடலுறவு கொண்டு, அவர் குளிப்புக் கடமையானவராக இருக்கும் நிலையில் மற்றொரு அடிமைப் பெண்ணிடம் உடலுறவு கொள்வது குற்றமில்லை என்று பதில் கூறினார்கள்.


وَسُئِلَ مَالِكٌ عَن رَجُلٍ لَهُ نِسْوَةٌ وَجَوَارِي، هَلْ يَطَؤُهُنَّ جَمِيعًا قَبْلَ أَنْ يَغْتَسِلَ؟ فَقَالَ: لاَ بَأْسَ بِأَنْ يُصِيبَ الرَّجُلُ جَارِيَتَيْهِ قَبْلَ أَنْ يَغْتَسِلَ، فَأَمَّا النِّسَاءُ الْحَرَائِرُ، فَيُكْرَهُ أَنْ يُصِيبَ الرَّجُلُ الْمَرْأَةَ الْحُرَّةَ فِي يَوْمِ الأَُخْرَى، فَأَمَّا أَنْ يُصِيبَ الرَّجُلُ الْجَارِيَةَ، ثُمَّ يُصِيبَ الأَُخْرَى وَهُوَ جُنُبٌ فَلاَ بَأْسَ بِذَلِكَ.


Muwatta-Malik-133

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

133. குளிப்புக் கடமையானவர்கள் குளிப்பதற்காக தண்ணீர் வைக்கப்படுகிறது. அவர் மறந்து, தன் விரலை அதில் அது சூடாக உள்ளதா? என்பதை அறிவதற்காக உள்ளே விடுகிறார். அந்த தண்ணீர் சுத்தமானதா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அவாரின் விரல் அசிங்கத்துடன் இல்லாத வரை அந்த தண்ணீர் அசுத்தமாகும் என நான் எண்ணவில்லை என மாலிக் (ரஹ்) அவர்கள் பதில் கூறினார்கள்.


وَسُئِلَ مَالِكٌ عَن رَجُلٍ جُنُبٍ، وُضِعَ لَهُ مَاءٌ يَغْتَسِلُ بِهِ، فَسَهَا، فَأَدْخَلَ أُصْبُعَهُ فِيهِ، لِيَعْرِفَ حَرَّ الْمَاءِ مِنْ بَرْدِهِ، قَالَ مَالِكٌ: إِنْ لَمْ يَكُنْ أَصَابَ أُصْبُعَهُ أَذًى، فَلاَ أَرَى ذَلِكَ يُنَجِّسُ عَلَيْهِ الْمَاءَ.


Muwatta-Malik-135

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

135. ஒருவர் ஒரு தொழுகைக்காக தயம்மும் செய்கிறார். பின்பு அடுத்த தொழுகை நேரம் வந்து விடுகிறது. அதற்காகவும் தயம்மும் செய்ய வேண்டுமா? அல்லது முன்பே செய்த தயம்மும் போதுமா? என மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒவ்வொரு தொழுகையின் போதும் தண்ணீர் தேடுவது கடமை என்பதாகும். ஒவ்வொரு தொழுகைக்கும் தயம்மும் செய்வான். தண்ணீரைத் தேடிப் பெற்றுக் கொள்ளவில்லையானால் அவன் தயம்மும் செய்வான் என பதில் கூறினார்கள்.


وَسُئِلَ مَالِكٌ عَن رَجُلٍ تَيَمَّمَ لِصَلاَةٍ حَضَرَتْ، ثُمَّ حَضَرَتْ صَلاَةٌ أُخْرَى، أَيَتَيَمَّمُ لَهَا أَمْ يَكْفِيهِ تَيَمُّمُهُ ذَلِكَ؟ فَقَالَ: بَلْ يَتَيَمَّمُ لِكُلِّ صَلاَةٍ، لأَنَّ عَلَيْهِ أَنْ يَبْتَغِيَ الْمَاءَ لِكُلِّ صَلاَةٍ، فَمَنِ ابْتَغَى الْمَاءَ فَلَمْ يَجِدْهُ، فَإِنَّهُ يَتَيَمَّمُ.


Muwatta-Malik-136

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

136. தயம்மும் செய்த ஒருவர், ஒளுச் செய்துள்ள தன் தோழர்களுக்கு இமாமத் செய்யலாமா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”அவர் அல்லாத மற்றொருவர் அவர்களுக்கு இமாமத் செய்வதே எனக்கு விருப்பமானதாகும். அவர்களுக்கு இவர் இமாமத் செய்தால் அதை குற்றமாக நான் கருதவில்லை”” என்று பதில் கூறினார்கள்.


وَسُئِلَ مَالِكٌ عَن رَجُلٍ تَيَمَّمَ أَيَؤُمُّ أَصْحَابَهُ وَهُمْ عَلَى وُضُوءٍ؟ قَالَ: يَؤُمُّهُمْ غَيْرُهُ أَحَبُّ إِلَيَّ، وَلَوْ أَمَّهُمْ هُوَ لَمْ أَرَ بِذَلِكَ بَأْسًا.


Muwatta-Malik-137

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

137. ஒருவர் தண்ணீர் கிடைக்காமல் தயம்மும் செய்து, எழுந்து, தக்பீர் கூறி, தொழ ஆரம்பித்து விட்டார். அதுசமயம் தண்ணீருடன் ஒருவன் வருகிறான். (அப்போது இவர் தன் தொழுகையை முறிக்க வேண்டுமா?) என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”அவர் தன் தொழுகையை முறிக்க வேண்டாம். எனினும் தயம்மும் மூலமே அதைப் பூர்த்தி செய்து விட்டு, அடுத்து வரும் தொழுகைகளுக்காக ஒளுச் செய்ய வேண்டும்”” என்று பதிலளித்தார்கள்.


قَالَ يَحيَى: قَالَ مَالِكٌ: فِي رَجُلٍ تَيَمَّمَ حِينَ لَمْ يَجِدْ الْمَاءَ، فَقَامَ وَكَبَّرَ، وَدَخَلَ فِي الصَّلاَةِ، فَطَلَعَ عَلَيْهِ إِنْسَانٌ مَعَهُ مَاءٌ؟ قَالَ: لاَ يَقْطَعُ صَلاَتَهُ، بَلْ يُتِمُّهَا بِالتَّيَمُّمِ، وَلْيَتَوَضَّأْ لِمَا يُسْتَقْبَلُ مِنَ الصَّلَوَاتِ.


Muwatta-Malik-138

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

138. ஒருவர் தொழுகைக்காக தயாராகி தண்ணீர் கிடைக்கவில்லை. அது சமயம் தயம்மும் செய்தல் என்ற அல்லாஹ்வின் சட்டத்தைச் செய்தால் அவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு விட்டார். தண்ணீர் பெற்றவன் தயம்மும் செய்தவனை விட அதிகத் தூய்மை ஆனவன் என்பதும், பூரணமான தொழுகையுடையவன் என்பதுமில்லை. ஏனெனில், இரு காரியங்களும் இறைவனால் உத்தரவிடப்பட்டவையே! ஒவ்வொரு அமல்களும் அல்லாஹ்வின் கட்டளையின் படியே உள்ளதாகும். தண்ணீர் கிடைத்தால் ஒளுச் செய்வது என்பதும், தொழ ஆரம்பிக்கு முன் தண்ணீர் கிடைக்கவில்லையானால் தயம்மும் செய்வது என்பதும் அல்லாஹ் ஏவிய கடமைகள் தான் என மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.


قَالَ يَحيَى: قَالَ مَالِكٌ: مَنْ قَامَ إِلَى الصَّلاَةِ فَلَمْ يَجِدْ مَاءً، فَعَمِلَ بِمَا أَمَرَهُ اللهُ بِهِ مِنَ التَّيَمُّمِ، فَقَدْ أَطَاعَ اللهَ، وَلَيْسَ الَّذِي وَجَدَ الْمَاءَ بِأَطْهَرَ مِنْهُ، وَلاَ أَتَمَّ صَلاَةً، لأَنَّهُمَا أُمِرَا جَمِيعًا، فَكُلٌّ عَمِلَ بِمَا أَمَرَهُ اللهُ بِهِ، وَإِنَّمَا الْعَمَلُ بِمَا أَمَرَ اللهُ بِهِ مِنَ الْوُضُوءِ لِمَنْ وَجَدَ الْمَاءَ، وَالتَّيَمُّمِ لِمَنْ لَمْ يَجِدِ الْمَاءَ، قَبْلَ أَنْ يَدْخُلَ فِي الصَّلاَةِ.


Muwatta-Malik-139

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

139.


وقَالَ مَالِكٌ فِي الرَّجُلِ الْجُنُبِ: إِنَّهُ يَتَيَمَّمُ وَيَقْرَأُ حِزْبَهُ مِنَ الْقُرْآنِ، وَيَتَنَفَّلُ، مَا لَمْ يَجِدْ مَاءً، وَإِنَّمَا ذَلِكَ فِي الْمَكَانِ الَّذِي يَجُوزُ لَهُ أَنْ يُصَلِّيَ فِيهِ بِالتَّيَمُّمِ.


Muwatta-Malik-142

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

142. தயம்மும் செய்வது எப்படி? அதை எதில் செய்வது? என மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”தன் முகத்துக்காக ஒரு முறையும், கைகளுக்காக ஒரு முறையும் (மண்ணில்) அடித்து முழங்கை உட்பட அவ்விரண்டையும் மஸஹு செய்வது என பதில் கூறினார்கள்.


وَسُئِلَ مَالِكٌ كَيْفَ التَّيَمُّمُ وَأَيْنَ يَبْلُغُ بِهِ؟ فَقَالَ: يَضْرِبُ ضَرْبَةً لِلْوَجْهِ، وَضَرْبَةً لِلْيَدَيْنِ، وَيَمْسَحُهُمَا إِلَى الْمِرْفَقَيْنِ.


Muwatta-Malik-144

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

144. பயணத்தில் உள்ள ஒருவர் கனவில் விந்து வெளியாகிறது. ஒளுவிற்குரிய அளவுக்கே தவிர தண்ணீர் அவரிடம் இல்லை. வேறு தண்ணீர் கிடைக்கும் வரை அவன் தாகித்தும் இருக்க முடியாது. (இப்போது அவர் என்ன செய்வது?) என்று கேட்டதற்கு, ”அந்த தண்ணீர் மூலம் தன் மறைவுறுப்பையும், அதில் உள்ள அசுத்தத்தையும் கழுவுவார். பின்பு அல்லாஹ் கட்டளையிட்டது போல் தூய்மையான மண்ணால் தயம்மும் செய்வார்”” என்று மாலிக் (ரஹ்) கூறினார்கள்.


قَالَ مَالِكٌ: فِيمَنِ احْتَلَمَ وَهُوَ فِي سَفَرٍ وَلاَ يَقْدِرُ عَلَى الْمَاءِ، إِلاَّ قَدْرَ الْوُضُوءِ وَهُوَ لاَ يَعْطَشُ حَتَّى يَأْتِيَ الْمَاءَ، قَالَ: يَغْسِلُ بِذَلِكَ فَرْجَهُ وَمَا أَصَابَهُ مِنْ ذَلِكَ الأَذَى، ثُمَّ يَتَيَمَّمُ صَعِيدًا طَيِّبًا كَمَا أَمَرَهُ اللهُ.


Next Page » « Previous Page