Category: ஷரஹ் மஆனில் ஆஸார்

Sharh-Maanil-Aasaar

Sharh-Maanil-Aasaar-2950

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2950. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனது சகோதரரின் மகனே! இங்கே வா! அடக்கத்தலங்கள் (கப்ருகள்) மீது உட்காருவதை நபி (ஸல்) அவர்கள் ஏன் தடுத்தார்கள் என்பதை அறிவிக்கிறேன்; கப்ரின் மீது மலம் அல்லது ஜலம் கழிப்பதற்காக உட்காருவதைத்தான் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (சாதாரணமாக உட்காருவதைத் தடுக்கவில்லை)

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ قَالَ: هَلُمَّ يَا ابْنَ أَخِي , أُخْبِرْكَ إِنَّمَا نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْجُلُوسِ عَلَى الْقُبُورِ , لِحَدَثِ غَائِطٍ , أَوْ بَوْلٍ


Sharh-Maanil-Aasaar-2949

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2949.


«لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ حَتَّى تُحَرِّقَ ثِيَابَهُ , وَتَخْلُصَ إِلَى جِلْدِهِ , خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ»


Sharh-Maanil-Aasaar-2945

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2945. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கப்ரை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும்; அதன் மீது எழுதுவதையும்; அதன் மீது உட்காருவதையும்; அதன் மீது கட்டடம் எழுப்புவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.


«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَجْصِيصِ الْقُبُورِ , وَالْكِتَابَةِ عَلَيْهَا , وَالْجُلُوسِ عَلَيْهَا , وَالْبِنَاءِ عَلَيْهَا»


Sharh-Maanil-Aasaar-2947

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2947. கப்ருகளின் மீது நாங்கள் உட்காருவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ نَجْلِسَ عَلَى الْقُبُورِ»


Next Page » « Previous Page