Category: ஷரஹ் மஆனில் ஆஸார்

Sharh-Maanil-Aasaar

Sharh-Maanil-Aasaar-7127

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7127. நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான ஹதீஸ்களை மனப்பாடம் செய்திருக்கவில்லை; அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களைத் தவிர. காரணம் நானும், அவரும் (ஹதீஸ்களை) மனனமிடுவோம். அதை அவர் கையால் எழுதி வைத்துக்கொள்வார்; அவர் நபி (ஸல்) அவர்களிடம் ஹதீஸ்களை எழுதிக்கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அவருக்கு எழுத அனுமதி தந்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்கள்: முஜாஹித் (ரஹ்), முகீரா பின் ஹகீம் (ரஹ்)


مَا كَانَ أَحَدٌ أَحْفَظَ لِحَدِيثِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنِّي إِلَّا مَا كَانَ مِنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو , فَإِنِّي كُنْتُ أَعِي بِقَلْبِي , وَكَانَ يَعِي بِقَلْبِهِ , وَيَكْتُبُ بِيَدِهِ اسْتَأْذَنَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ فَأَذِنَ لَهُ


Sharh-Maanil-Aasaar-7268

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7268. நபி (ஸல்) அவர்கள் இருபெருநாள் தொழுகைகளில், முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறவேண்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


أَنَّهُ قَالَ فِي تَكْبِيرِ الْعِيدَيْنِ: «فِي الرَّكْعَةِ الْأُولَى سَبْعًا , وَفِي الثَّانِيَةِ خَمْسَ تَكْبِيرَاتٍ»


Sharh-Maanil-Aasaar-7262

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

இருபெருநாள் தொழுகைகளிலும் எவ்வாறு தக்பீர் கூறுவது?

7262. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில், தொழுகையின் ஆரம்பத் தக்பீர்கள் போக, முதல் ரக்அத்தில் (கூடுதலாக) ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் (கூடுதலாக) ஐந்து தக்பீர்களும் மொத்தம் 12 தக்பீர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவா்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَبَّرَ فِي الْعِيدَيْنِ , اثْنَتَيْ عَشْرَةَ تَكْبِيرَةً , سَبْعًا فِي الْأُولَى , وَخَمْسًا فِي الْآخِرَةِ , سِوَى تَكْبِيرَتَيِ الصَّلَاةِ»


Sharh-Maanil-Aasaar-3043

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3043.


«فِي الْمَالِ حَقٌّ سِوَى الزَّكَاةِ , وَتَلَا هَذِهِ الْآيَةَ {» لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ “} [البقرة: 177] إِلَى آخِرِ الْآيَةِ


Sharh-Maanil-Aasaar-6963

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6963.


دَخَلْتُ مَعَ أَبِي عَلَى عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ فَقَالَ لَهُ أَبِي: أَنْتَ سَمِعْتَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «النَّدَمُ تَوْبَةٌ» فَقَالَ: «نَعَمْ»


Next Page » « Previous Page