Category: ஷுஅபுல் ஈமான்

Shuabul-Iman

Shuabul-Iman-2648

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2648. அபூஉபைத் ஸுலைமான் பின் அப்துல் மலிக் கூறியதாவது:

மஸ்ஜிதுல் ஹராமில் உள்ள ஒரு பெரியவர் சொல்ல கேட்டேன்.

ஒவ்வொரு பொருளுக்கும் ஆரம்பம் உண்டு. தொழுகையின் ஆரம்பம் முதல் தக்பீராகும். எனவே (ஜமாஅத்துடன் தொழும்போது) அதை (தவறவிடாமல்)  பேணிக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபுத்தர்தா (ரலி) அறிவித்தார்.

 

 


إِنَّ لِكُلِّ شَيْءٍ أُنْفَةً وَإِنَّ أُنْفَةَ الصَّلَاةِ التَّكْبِيرَةُ الْأُولَى، فَحَافِظُوا عَلَيْهَا


Shuabul-Iman-2614

ஹதீஸின் தரம்: More Info

2614. அனஸ் (ரலி) கூறினார்கள்:

யார் நாற்பது இரவுகள் (தொடர்ந்து) ஒரு ரக்அத்தும் தவறிவிடாமல் கடமையான தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவாரோ அவருக்கு அல்லாஹ் நரகிலிருந்து விடுதலை, நயவஞ்சகத்தனத்தில் இருந்து விடுதலை என்ற இரண்டு விடுதலை பத்திரங்களை எழுதிவிடுகிறான்.


مَنْ وَاظَبَ عَلَى الصَّلَوَاتِ الْمَكْتُوبَةِ أَرْبَعِينَ لَيْلَةً، لَا تَفُوتُهُ رَكْعَةٌ، كَتَبَ اللهُ لَهُ بِهَا بَرَاءَتَيْنِ، بَرَاءَةً مِنَ النَّارِ، وَبَرَاءَةً مِنَ النِّفَاقِ


Shuabul-Iman-2613

ஹதீஸின் தரம்: More Info

2613. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நாற்பது இரவுகள் (தொடர்ந்து) ஜமாஅத்துடன் தொழுவாரோ அவருக்கு அல்லாஹ் நரகிலிருந்து விடுதலை, நயவஞ்சகத்தனத்தில் இருந்து விடுதலை என்ற (இரண்டு) விடுதலை பத்திரங்களை எழுதிவிடுகிறான்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி


مَنْ صَلَّى أَرْبَعِينَ لَيْلَةً فِي جَمَاعَةٍ كَتَبَ اللهُ لَهُ بَرَاءَةً مِنَ النَّارِ، وَبَرَاءَةً مِنَ النِّفَاقِ


Shuabul-Iman-2612

ஹதீஸின் தரம்: More Info

2612. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நாற்பது நாட்கள் முதல் தக்பீர் தவறிவிடாமல் ஜமாஅத்துடன் தொழுவாரோ அவருக்கு அல்லாஹ் நரகிலிருந்து விடுதலை, நயவஞ்சகத்தனத்தில் இருந்து விடுதலை என்ற (இரண்டு) விடுதலை பத்திரங்களை எழுதிவிடுகிறான்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி


مَنْ صَلَّى فِي جَمَاعَةٍ أَرْبَعِينَ يَوْمًا لَا تَفُوتُهُ التَّكْبِيرَةُ الْأُولَى كَتَبَ اللهُ لَهُ بَرَاءَةً مِنَ النَّارِ، وَبَرَاءَةً مِنَ النِّفَاقِ


Shuabul-Iman-3851

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3851. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர.

ஏனைய பள்ளிகளில் ஜுமுஆ தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் ஜுமுஆ தொழுவது ஆயிரம் ஜுமுஆ தொழுகைகளை விடச் சிறந்ததாகும். மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர.

ஏனைய பள்ளிகளில் ரமளான் மாதத்தில் தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் ரமளான் மாதத்தில் தொழுவது ஆயிரம் ரமளான் மாதத்தின் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


الصَّلَاةُ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ، وَالْجُمُعَةُ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ جُمُعَةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ وَشَهْرُ رَمَضَانَ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ شَهْرِ رَمَضَانَ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ


Shuabul-Iman-3848

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3848. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகை தொழுவதற்கு நிகரானது.

என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஆயிரம் தொழுகை தொழுவதற்கு நிகரானது.

பைத்துல் மக்திஸில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஐநூறு தொழுகை தொழுவதற்கு நிகரானது.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


صَلَاةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ مِائَةُ أَلْفِ صَلَاةٍ، وَصَلَاةٌ فِي مَسْجِدِي أَلْفُ صَلَاةٍ، وَفِي بَيْتِ الْمَقْدِسِ خَمْسُمِائَةِ صَلَاةٍ


Shuabul-Iman-10746

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10746. “யார் கடன் பட்டவருக்காக அவகாசம் அளிக்கின்றாரோ அல்லது தள்ளுபடி செய்கின்றாரோ அவர் இறுதி நாளில் அர்ஷின் நிழலில் இருப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி)


مَنْ نَفَّسَ عَنْ غَرِيمٍ أَوْ مَحَى عَنْهُ كَانَ فِي ظِلِّ الْعَرْشِ يَوْمَ الْقِيَامَةِ


Shuabul-Iman-10749

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10749. “அல்லாஹ்வின் தூதரே! (கடன் வாங்கி) சிரமப்படுவோருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையை தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும்,

(கடன் வாங்கி) சிரமப்படுபவருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில், அவர் தவணை அளிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர் கொடுத்த கடன் தொகையைப் போல் ஒரு மடங்கு தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என்றும் நீங்கள் கூறியதாக நான் செவிமடுத்தேனே! (அது சரி தானா?)” என புரைதா (ரலி) கேட்ட போது,

“கடனின் (தவணைக்) காலம் முடிவதற்கு முன்னால் ஒவ்வொரு நாளும் (அது போல் ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு. கடன் தவணை முடிந்தபின்னும் (கூடுதல்) அவகாசம் அளித்தாலும் அவருக்கு ஒவ்வொரு நாளும் அவர் அளித்த தொகையைப் போல் ஒருமடங்கு தர்மம் செய்த கூலி உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)


مَنْ أَنْظَرَ مُعْسِرًا كَانَ لَهُ بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ “، قَالَ: ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ لَهُ: ” بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ “، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ إِنِّي سَمِعْتُكَ تَقُولُ: ” فَلَهُ بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ “، وَقُلْتَ: الْآنَ فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلِهِ صَدَقَةٌ فَقَالَ: ” إِنَّهُ مَا لَمْ يَحِلَّ الدَّيْنُ، فَلَهُ بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ، وَإِذَا حَلَّ الدَّيْنُ فَأَنْظِرْهُ فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلِهِ صَدَقَةٌ


Shuabul-Iman-10748

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10748. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒருவர் (கடன் வாங்கி) சிரமப்படுவோருக்கு தவணை வழங்குகின்றார் எனில், “கடனின் (தவணைக்) காலம் முடிவதற்கு முன்னால் ஒவ்வொரு நாளும் (அது போல் ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு.

கடன் தவணை முடிந்தும் அவகாசம் அளித்தால் (கூடுதல்) தவணை தரும் நாள் வரை அவருக்கு ஒவ்வொரு நாளும் அவர் அளித்த தொகையைப் போல் ஒரு மடங்கு தர்மம் செய்த கூலி உண்டு” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)


مَنْ أَنْظَرَ مُعْسِرًا كَانَ لَهُ بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ مَا لَمْ يَحِلُّ، فَإِذَا حَلَّ الدَّيْنُ، فَإِنْ أَنْظَرَهُ بَعْدَ الْحِلِّ فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُهُ صَدَقَةٌ


Shuabul-Iman-1471

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1471. கஅப் பின் உஜ்ரா (ரலி) அறிவித்தார் :

நபி (ஸல்) அவர்கள் அனைவரும் மிம்பருக்கு (அருகில்) வாருங்கள் என்று கூறினார்கள். நாங்கள் அனைவரும் ஆஜரானோம். அப்போது முதல் படியில் ஏறும் போது “ஆமீன்” என்று கூறினார்கள். இரண்டாவது படியில் ஏறும் போதும் “ஆமீன்” என்று கூறினார்கள். மூன்றாவது படியில் ஏறும் போதும் “ஆமீன்” என்று கூறினார்கள். அவர்கள் இறங்கிய உடன் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் (என்றைக்குமே) கேள்விப்படாத ஒன்றை இன்று உங்களிடமிருந்து செவியேற்றோமே என்று கேட்டோம்.

நான் முதல் படியில் ஏறும் போது ஜிப்ரீல் (அலை) எனக்கு காட்சி தந்து யார் ரமலான் மாதத்தை அடைந்தும் அவன் பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள். நான் ஆமீன் என்றேன். நான் இரண்டாவது படியில் ஏறும் போது யாரிடத்தில் (முஹம்மதாகிய) நீங்கள் நினைவுகூறப்பட்டும் அவன் உங்கள் மீது ஸலவாத் கூறவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள். நான் ஆமீன் என்று கூறினேன். நான் மூன்றாவது படியில் ஏறும் போது ஒருவனிடத்தில் அவனுடைய பெற்றோர்கள் வயோதிகப் பருவத்தை அடைந்து (அவர்களுக்கு பணிவிடை செய்வதின் மூலம்) அந்த இருவரும் இவனை சுவர்கத்தில் நுழைவிக்கவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள். நான் ஆமீன் என்று கூறினேன் என்று (பதில்)

احْضُرُوا الْمِنْبَرَ ” فَحَضَرْنَا، فَلَمَّا ارْتَقَى دَرَجَةً قَالَ: ” آمِينَ “، فَلَمَّا ارْتَقَى الدَّرَجَةَ الثَّانِيَةَ قَالَ: ” آمِينَ “، فَلَمَّا ارْتَقَى الدَّرَجَةَ الثَّالِثَةَ قَالَ: ” آمِينَ “، فَلَمَّا فَرَغَ نَزَلَ مِنَ الْمِنْبَرِ قَالَ: فَقُلْنَا له يَا رَسُولَ اللهِ لَقَدْ سَمِعْنَا الْيَوْمَ مِنْكَ شَيْئًا لَمْ نَكُنْ نَسْمَعُهُ قَالَ: ” إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامِ عَرْضَ لِي فَقَالَ: بَعُدَ مَنْ أَدْرَكَ رَمَضَانَ فَلَمْ يُغْفَرْ لَهُ فَقُلْتُ: آمِينَ فَلَمَّا رَقِيتُ الثَّانِيَةَ قَالَ: بَعُدَ مَنْ ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ فَقُلْتُ: آمِينَ، فَلَمَّا رَقِيتُ الثَّالِثَةَ قَالَ: بَعُدَ مَنْ أَدْرَكَ وَالِدَيْهِ الْكِبَرَ عِنْدَهُ أَوْ أَحَدُهُمَا، فلَمْ يُدْخِلَاهُ الْجَنَّةَ – أَظُنُّهُ قَالَ – فَقُلْتُ: آمِينَ


Next Page » « Previous Page