Category: ஷுஅபுல் ஈமான்

Shuabul-Iman

Shuabul-Iman-2174

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

2174. ஆயத்துல் குர்ஸியை யார் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதுவாரோ அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தைத் தவிர வேறு எதுவும் தடுக்காது.

யார் உறங்கச் செல்லும்போது அதை ஓதுவாரோ அவரின் வீட்டிற்கும், அவரின் அண்டை வீட்டாருக்கும் அவரின் வீட்டைச் சுற்றியுள்ள அனைத்து வீட்டினருக்கும் அல்லாஹ் பாதுகாப்பு அளிக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரைமேடையில் நின்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

 

 


سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَعْوَادِ الْمِنْبَرِ يَقُولُ: ” مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ دُبُرَ كُلِّ صَلَاةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُولِهِ الْجَنَّةَ إِلَّا الْمَوْتُ، وَمَنْ قَرَأَهَا حِينَ يَأْخُذُ مَضْجَعَهُ أَمَّنَهُ اللهُ عَلَى دَارِهِ وَدَارِ جَارِهِ وَالدُوَيْرَاتِ حَوْلَهُ


Shuabul-Iman-2245

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2245. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் மாலையில் (2: 255 வது வசனம்) ஆயத்துல் குர்ஸியையும், ஃகாஃபிர்(40 வது) அத்தியாயத்தின் முதல் மூன்று வசனங்களையும் ஓதுவாரோ அவர், காலை வரை பாதுகாக்கப்படுவார். யார் அதை காலையில் ஓதுவாரோ அவர் காலை வரை பாதுகாக்கப்படுவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَنْ قَرَأَ هَاتَيْنِ الْآيَتَيْنِ آيَةَ الْكُرْسِيِّ، وَحم الْأُولَى حَتَّى يَنْتَهِيَ {إِلَيْهِ الْمَصِيرُ} [غافر: 3] حُفِظَ بِهمَا حَتَّى يُصْبِحَ، وَمَنْ قَرَأَهُمَا مُصْبِحًا حُفِظَ بِهِمَا حَتَّى يُمْسِيَ


Shuabul-Iman-2244

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2244. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் காலையில் (2: 255 வது வசனம்) ஆயத்துல் குர்ஸியையும், ஃகாஃபிர்(40 வது) அத்தியாயத்தின் முதல் இரண்டு வசனங்களையும் ஓதுவாரோ அவர், மாலை வரை பாதுகாக்கப்படுவார். யார் அதை மாலையில் ஓதுவாரோ அவர் அன்றைய இரவிலிருந்து காலை வரை பாதுகாக்கப்படுவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَنْ قَرَأَ حِينَ يُصْبِحُ آيَةَ الْكُرْسِيِّ وَآيَتَيْنِ مِنْ أَوَّلِ حم تَنْزِيلُ الْكِتَابِ مِنَ اللهِ الْعَزِيزِ الْعَلِيمِ حُفِظَ فِي يَوْمِهِ ذَلِكَ حَتَّى يُمْسِيَ، وَإِنْ قَرَأَهَا حِينَ يُمْسِي حُفِظَ في لَيْلَتِهِ تِلْكَ حَتَّى يُصْبِحَ


Shuabul-Iman-7447

ஹதீஸின் தரம்: More Info

7447. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தந்தையின் திருப்தியில் இறைவனின் திருப்தி உள்ளது. தந்தையின் அதிருப்தியில் இறைவனின் அதிருப்தி உள்ளது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


رِضَا الرَّبِّ فِي رِضَا الْوَالِدِ، وَسَخَطُ الرَّبِّ فِي سَخَطِ الْوَالِدِ


Shuabul-Iman-7446

ஹதீஸின் தரம்: More Info

7446. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெற்றோரின் திருப்தியில் அல்லாஹ்வின் திருப்தி உள்ளது. பெற்றோரின் அதிருப்தியில் அல்லாஹ்வின் அதிருப்தி உள்ளது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


رِضَا اللهِ فِي رِضَا الْوَالِدَيْنِ، وَسَخَطُ اللهِ فِي سَخَطِ الْوَالِدَيْنِ


Shuabul-Iman-3082

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3082. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

காலையில் தர்மம் செய்யுங்கள். ஏனெனில் சோதனைகள் அதைத் தாண்டி வரமுடியாது.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


بَاكِرُوا بِالصَّدَقَةِ، فَإِنَّ الْبَلَاءَ لَا يَتَخَطَّى الصَّدَقَةَ


Shuabul-Iman-1152

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

1152. …பலவீனமானவர்களின் ஜிஹாத் ஹஜ் செய்வதாகும். பெண்ணின் ஜிஹாத் கணவனுக்கு செய்யவேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதாகும். பிறரிடம் அன்பு காட்டுவது மார்க்கத்தில் பாதியாகும்…


إِنَّمَا تَكُونُ الصَّنِيعَةُ إِلَى ذِي دِينٍ أَوْ حَسَبٍ، وَجِهَادُ الضُّعَفَاءِ الْحَجُّ، وَجِهَادُ الْمَرْأَةِ حُسْنُ التَّبَعُّلِ لِزَوْجِهَا، وَالتَّوَدُّدُ نِصْفُ الدِّينِ، وَمَا عَالَ امْرُؤٌ اقْتَصَدَ، وَاسْتَنْزِلُوا الرِّزْقَ بِالصَّدَقَةِ، وَأَبَى اللهُ أَنْ يَجْعَلَ أَرْزَاقَ عِبَادِهِ الْمُؤْمِنِينَ مِنْ حَيْثُ يَحْتَسِبُونَ ” وَقَالَ مَرَّةً أُخْرَى: ” وَمَا عَالَ امْرُؤٌ قَطُّ عَلَى اقْتِصَادٍ


Shuabul-Iman-7226

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7226. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிமின் மானம் பறிக்கப்படும் போது, அவரின் மரியாதைக்கு பங்கம் ஏற்படும்போது எவர் உதவி செய்யாமல் இருந்துவிடுவாரோ அவருக்கு அல்லாஹ்வின் உதவி தேவைப்படும் போது, அல்லாஹ் தன் உதவியைவிட்டும் அவரைத் தடுத்துவிடுகிறான்.

மேலும், ஒரு முஸ்லிமின் மானம் பறிக்கப்படும் போது, அவரின் மரியாதைக்கு பங்கம் ஏற்படும்போது எவர் உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ்வின் உதவி தேவைப்படும் போது, அல்லாஹ் அவருக்கு உதவிசெய்கிறான்.

அறிவிப்பவர்கள்: ஜாபிர் (ரலி), அபூதல்ஹா (ரலி)


مَا مِنِ امْرِئٍ يَخْذُلُ مُسْلِمًا فِي مَوْطِنٍ يُنْتَهَكُ فِيهِ حُرْمَتُهُ، وَيُنْتَقَصُ فِيهِ عِرْضُهُ إِلَّا خَذَلَهُ اللهُ فِي مَوْطِنٍ يُحِبُّ فِيهِ نُصْرَتَهُ، وَمَا مِنِ امْرِئٍ يَنْصُرُ مُسْلِمًا فِي مَوْطِنٍ يُنْتَقَصُ فِيهِ مِنْ عِرْضِهِ وَتُنْتَهَكُ فِيهِ حُرْمَتُهُ إِلَّا نَصَرَهُ اللهُ عَزَّ وَجَلَّ فِي مَوْطِنٍ يُحِبُّ فِيهِ نُصْرَتَهُ


Shuabul-Iman-3333

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3333. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ரமலானுடைய) ஒவ்வொரு நோன்பிலும் நரகத்திற்குரியவர்கள், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வால் விடுதலைச் செய்யப்படுகின்றனர்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


إِنَّ لِلَّهِ عَزَّ وَجَلَّ عِنْدَ كُلِّ فَطْرَةٍ عُتَقَاءَ مِنَ النَّارِ


Next Page » « Previous Page