6146. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்”
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مُؤُونَةً
Shuabul-Iman
6146. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்”
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مُؤُونَةً
3035. தங்கத்தையும், வெள்ளியையும் அல்லாஹ்வின் பாதையில் யார் செலவிடாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பீராக’ (9:34) என்ற வசனம் அருளப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிந்தது. இனி நமது வாரிசுகளுக்கு யாரும் சொத்து சேர்த்துவைக்க முடியாது என்று கூறிக்கொண்டனர்.
உடனே உமர் (ரலி) அவர்கள், ‘உங்கள் சிரமத்தை நான் நீக்குகின்றேன்’ என்று கூறி விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். ஸவ்பான் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களை பின்தொடர்ந்து சென்றார்கள். மற்றவர்களும் உடன் சென்றனர்.
உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்த வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிகின்றது’ என்று கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘உங்கள் செல்வத்தில் எஞ்சியதைத் தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்கும் அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கவில்லை’ அல்லாஹ் வாரிசுரிமை சட்டத்தை கடமையாக்கியதே உங்களுக்கு பின்னால் வரும் வாரிசுகளுக்காக தான் என்று விளக்கமளித்தார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் அல்லாஹு அக்பர் என்று கூறினார்கள்.
அதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? (அவள் தான்) நல்ல மனைவியாவாள்.
لَمَّا نَزَلَتِ: {الَّذِينَ يَكْنِزُونَ} [التوبة: 34] الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللهِ كَبُرَ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ، وَقَالُوا: مَا يَسْتَطِيعُ أَحَدٌ أَنْ يَتْرُكَ مَالًا لِأَوْلَادِهِ يَبْقَى بَعْدَهُ، فَقَالَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ: أَنَا أُفَرِّجُ عَنْكُمْ، قَالَ: فَانْطَلَقُوا وَانْطَلَقَ عُمَرُ، وَاتَّبَعَهُ ثَوْبَانُ، فَأَتَوْا رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ عُمَرُ: يَا نَبِيَّ اللهِ، قَدْ كَبُرَ عَلَى أَصْحَابِكَ هَذِهِ الْآيَةُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ اللهَ لَمْ يَفْرِضِ الزَّكَاةَ إِلَّا لِيُطَيِّبَ بِهَا مَا بَقِيَ مِنْ أَمْوَالِكُمْ، وَإِنَّمَا فَرَضَ الْمَوَارِيثَ فِي أَمْوَالٍ تَبْقَى بَعْدَكُمْ ” قَالَ: فَكَبَّرَ عُمَرُ، ثُمَّ قَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَلَا أُخْبِرُكَ بِخَيْرِ مَا يَكْنِزْهُ الْمَرْءُ؟ الْمَرْأَةُ الصَّالِحَةُ إِذَا نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ وَإِذَا أَمَرَهَا أَطَاعَتْهُ وَإِذَا غَابَ عَنْهَا حَفِظَتْهُ
2145. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அமர்ந்திருந்தபோது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கேட்டார் அவர். அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இதோ, வானில் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. (அதன் சப்தமே இப்போது கேட்டது.)” என்று கூறினார்கள்.
அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி (நபியவர்களிடம்) வந்தார். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் “இதோ இந்த வானவர் இப்போதுதான் பூமிக்கு இறங்கி வந்திருக்கிறார். இதற்கு முன் எப்போதும் அவர் பூமிக்கு இறங்கியதேயில்லை” என்று கூறினார்கள்.
அவ்வானவர் சலாம் கூறிவிட்டு, முஹம்மதே! உங்களுக்கு முன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப் பெற்றிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப்பெற்றுள்ள நற்செய்தியைப் பெறுங்கள். “அல்ஃபாத்திஹா” அத்தியாயமும் “அல்பகரா” அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை. அவற்றிலுள்ள (பிரார்த்தனை வரிகளில்) எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லை”என்று கூறினார்.
بَيْنَمَا جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ جَالِسٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ سَمِعَ نَقِيضًا مِنْ فَوْقِهُ فَرَفَعَ رَأْسَهُ إِلَى السَّمَاءِ فَقَالَ: إِنَّ هَذَا الْبَابَ مِنَ السَّمَاءِ قَدْ فُتِحَ مَا فُتِحَ قَطُّ، قَالَ: فَنَزَلَ مِنْهُ مَلَكٌ قَالَ: فَإِنَّ هَذَا الْمَلَكَ قَدْ نَزَلَ مَا نَزَلَ إِلَى الْأَرْضِ، قَالَ: فَجَاءَ الْمَلَكُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلَّمَ عَلَيْهِ وَقَالَ: يَا مُحَمَّدُ أَبْشِرْ بِنُورَيْنِ أُوتِيتَهُمَا لَمْ يُؤْتَهُنَّ نَبِيٌّ قَبْلَكَ: فَاتِحَةُ الْكِتَابِ، وَخَوَاتِيمُ سُورَةِ الْبَقَرَةِ لَمْ تَقْرَأْ حَرْفًا مِنْهُمَا إِلَّا أُوتِيتَهُ
2648. அபூஉபைத் ஸுலைமான் பின் அப்துல் மலிக் கூறியதாவது:
மஸ்ஜிதுல் ஹராமில் உள்ள ஒரு பெரியவர் சொல்ல கேட்டேன்.
ஒவ்வொரு பொருளுக்கும் ஆரம்பம் உண்டு. தொழுகையின் ஆரம்பம் முதல் தக்பீராகும். எனவே (ஜமாஅத்துடன் தொழும்போது) அதை (தவறவிடாமல்) பேணிக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபுத்தர்தா (ரலி) அறிவித்தார்.
إِنَّ لِكُلِّ شَيْءٍ أُنْفَةً وَإِنَّ أُنْفَةَ الصَّلَاةِ التَّكْبِيرَةُ الْأُولَى، فَحَافِظُوا عَلَيْهَا
2614. அனஸ் (ரலி) கூறினார்கள்:
யார் நாற்பது இரவுகள் (தொடர்ந்து) ஒரு ரக்அத்தும் தவறிவிடாமல் கடமையான தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவாரோ அவருக்கு அல்லாஹ் நரகிலிருந்து விடுதலை, நயவஞ்சகத்தனத்தில் இருந்து விடுதலை என்ற இரண்டு விடுதலை பத்திரங்களை எழுதிவிடுகிறான்.
مَنْ وَاظَبَ عَلَى الصَّلَوَاتِ الْمَكْتُوبَةِ أَرْبَعِينَ لَيْلَةً، لَا تَفُوتُهُ رَكْعَةٌ، كَتَبَ اللهُ لَهُ بِهَا بَرَاءَتَيْنِ، بَرَاءَةً مِنَ النَّارِ، وَبَرَاءَةً مِنَ النِّفَاقِ
2613. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நாற்பது இரவுகள் (தொடர்ந்து) ஜமாஅத்துடன் தொழுவாரோ அவருக்கு அல்லாஹ் நரகிலிருந்து விடுதலை, நயவஞ்சகத்தனத்தில் இருந்து விடுதலை என்ற (இரண்டு) விடுதலை பத்திரங்களை எழுதிவிடுகிறான்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி
مَنْ صَلَّى أَرْبَعِينَ لَيْلَةً فِي جَمَاعَةٍ كَتَبَ اللهُ لَهُ بَرَاءَةً مِنَ النَّارِ، وَبَرَاءَةً مِنَ النِّفَاقِ
2612. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நாற்பது நாட்கள் முதல் தக்பீர் தவறிவிடாமல் ஜமாஅத்துடன் தொழுவாரோ அவருக்கு அல்லாஹ் நரகிலிருந்து விடுதலை, நயவஞ்சகத்தனத்தில் இருந்து விடுதலை என்ற (இரண்டு) விடுதலை பத்திரங்களை எழுதிவிடுகிறான்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி
مَنْ صَلَّى فِي جَمَاعَةٍ أَرْبَعِينَ يَوْمًا لَا تَفُوتُهُ التَّكْبِيرَةُ الْأُولَى كَتَبَ اللهُ لَهُ بَرَاءَةً مِنَ النَّارِ، وَبَرَاءَةً مِنَ النِّفَاقِ
3851. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர.
ஏனைய பள்ளிகளில் ஜுமுஆ தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் ஜுமுஆ தொழுவது ஆயிரம் ஜுமுஆ தொழுகைகளை விடச் சிறந்ததாகும். மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர.
ஏனைய பள்ளிகளில் ரமளான் மாதத்தில் தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் ரமளான் மாதத்தில் தொழுவது ஆயிரம் ரமளான் மாதத்தின் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
الصَّلَاةُ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ، وَالْجُمُعَةُ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ جُمُعَةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ وَشَهْرُ رَمَضَانَ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ شَهْرِ رَمَضَانَ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ
3848. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகை தொழுவதற்கு நிகரானது.
என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஆயிரம் தொழுகை தொழுவதற்கு நிகரானது.
பைத்துல் மக்திஸில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஐநூறு தொழுகை தொழுவதற்கு நிகரானது.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
صَلَاةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ مِائَةُ أَلْفِ صَلَاةٍ، وَصَلَاةٌ فِي مَسْجِدِي أَلْفُ صَلَاةٍ، وَفِي بَيْتِ الْمَقْدِسِ خَمْسُمِائَةِ صَلَاةٍ
10746. “யார் கடன் பட்டவருக்காக அவகாசம் அளிக்கின்றாரோ அல்லது தள்ளுபடி செய்கின்றாரோ அவர் இறுதி நாளில் அர்ஷின் நிழலில் இருப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி)
مَنْ نَفَّسَ عَنْ غَرِيمٍ أَوْ مَحَى عَنْهُ كَانَ فِي ظِلِّ الْعَرْشِ يَوْمَ الْقِيَامَةِ
சமீப விமர்சனங்கள்