ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅
2702. ஒருவர், “நான் அல்லாஹ்விடம் சொர்க்கத்தைக் கேட்கிறேன்” என்று ஏழு தடவை பிரார்த்தித்தால், “அல்லாஹ்வே! இவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக!” என்று சொர்க்கம் கூறுகிறது.
ஒருவர் (அல்லாஹ்விடம்) நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி பிரார்த்தித்தால், “அல்லாஹ்வே! இவரை நரகை விட்டும் காப்பாற்றுவாயாக!” என நரகம் கூறுகிறது என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்.
அறிவிப்பவர்: அபூஅல்கமா (ரஹ்)
இந்த செய்தி இரண்டு அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது.
(அபூஅல்கமாவிடமிருந்து அறிவிக்கும் யஃலா பின் அதாஃ அவர்கள் இதை அபூஹுரைரா (ரலி) அவர்களின் சொல்லாகவும், அபூஅல்கமாவிடமிருந்து அறிவிக்கும் யூனுஸ் பின் கப்பாப் என்பவர் இதை நபி (ஸல்) அவர்களின் சொல்லாகவும் அறிவித்துள்ளனர்)
مَنْ قَالَ: أَسْأَلُ اللَّهَ الْجَنَّةَ سَبْعًا، قَالَتِ الْجَنَّةُ: اللَّهُمَّ أَدْخِلْهُ الْجَنَّةَ وَمَنِ اسْتَعَاذَ مِنَ النَّارِ، قَالَتِ النَّارَ: اللَّهُمَّ أَعِذْهُ مِنَ النَّارِ
சமீப விமர்சனங்கள்