1085. “ஒரு கூட்டம் தங்களது உணவுத் தட்டின் பக்கம் அழைப்பது போல், பிற சமுதாயங்கள், உங்களைக் கொன்றிட (ஒருவர் மற்றொருவரை) அழைத்துக் கொள்வார்கள்” என்று ஸவ்பான் (ரலி) கூறினார்கள். அப்போது அவர்களிடம் “அன்றைய தினம் (முஸ்லிம்கள்) எண்ணிக்கை குறைந்தவர்களாக இருப்பார்களா? என்றுக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “இல்லை. எனினும் அன்றைய தினம் நீங்கள் வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று ஆகி இருப்பீர்கள். நீங்கள் உலகத்தை நேசித்து, மரணத்தை வெறுப்பவர்களாக இருந்ததால் உங்களுடைய உள்ளங்களில் வஹ்ன் ஏற்பட்டிருக்கும்; உங்கள் விரோதியின் உள்ளங்களிலிருந்து (உங்களைப் பற்றிய) அச்சம் கழற்றப்பட்டிருக்கும்! என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் உபைத்
«يُوشِكُ أَنْ تَدَاعَى عَلَيْكُمُ الْأُمَمُ كَمَا تَدَاعَى الْقَوْمُ إِلَى قَصْعَتِهِمْ» قَالَ: قِيلَ: مِنْ قِلَّةٍ؟ قَالَ: «لَا وَلَكِنَّهُ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ يُجْعَلُ الْوَهَنُ فِي قُلُوبِكُمْ، وَيُنْزَعُ الرُّعْبُ مِنْ قُلُوبِ عَدُوِّكُمْ لِحُبِّكُمُ الدُّنْيَا وَكَرَاهِيَتِكُمُ الْمَوْتَ»
சமீப விமர்சனங்கள்