Category: திர்மிதீ

Tirmidhi-14

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 10

இயற்கைக் கடனை நிறைவேற் றும்போது மறைக்க வேண்டி யது தொடர்பாக வந்துள்ளவை.

14 . அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற நாடும்போது, தரையை நெருங்கும்வரை தமது ஆடையை உயர்த்தமாட்டார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இவ்வாறு அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக அஃமஷ் வழியாக முஹம்மத் பின் ரபீஆ (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.

“நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற நாடும்போது தரையை நெருங்கும்வரை தமது ஆடையை உயர்த்தமாட்டார்கள்” என இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்ததாக அஃமஷ் வழியாக வகீஉ (ரஹ்) அவர்களும் அபூயஹ்யா அல்ஹிம்மானீ (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளனர். எனினும், (அனஸ் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் அறிவித்துள்ள) இவ்விரு ஹதீஸ்களும் (இடையில் அறிவிப்பாளர் விடுபட்ட) முர்சல் வகை ஹதீஸ்களாகும். (ஏனெனில்,) அஃமஷ் அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தோ வேறெந்த நபித்தோழரிடமிருந்தோ எந்த நபிமொழியையும் (நேரடியாக) செவியுற்றதில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், அஃமஷ் (ரஹ்) அவர்கள், அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களைப் பார்த்துள்ளார்கள். “நான் அனஸ் (ரலி) அவர்கள் தொழும்போது பார்த்தேன்” என்று கூறி, (அனஸ் (ரலி) அவர்களின்) தொழுகையைப் பற்றி அஃமஷ் அவர்கள் வர்ணித்துள்ளார்கள்.

அஃமஷின் இயற்பெயர் சுலைமான்

«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ الْحَاجَةَ لَمْ يَرْفَعْ ثَوْبَهُ حَتَّى يَدْنُوَ مِنَ الْأَرْضِ».

هَكَذَا رَوَى مُحَمَّدُ بْنُ رَبِيعَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَنَسٍ، هَذَا الْحَدِيثَ

وَرَوَى وَكِيعٌ، وَالْحِمَّانِيُّ، عَنِ الْأَعْمَشِ، قَالَ: قَالَ ابْنُ عُمَرَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ الْحَاجَةَ لَمْ يَرْفَعْ ثَوْبَهُ حَتَّى يَدْنُوَ مِنَ الْأَرْضِ»،

وَكِلَا الْحَدِيثَيْنِ مُرْسَلٌ، وَيُقَالُ: لَمْ يَسْمَعِ الْأَعْمَشُ مِنْ أَنَسِ بْنِ مَالِكٍ، وَلَا مِنْ أَحَدٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ نَظَرَ إِلَى أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: رَأَيْتُهُ يُصَلِّي فَذَكَرَ عَنْهُ حِكَايَةً فِي الصَّلَاةِ وَالْأَعْمَشُ اسْمُهُ سُلَيْمَانُ بْنُ مِهْرَانَ أَبُو مُحَمَّدٍ الْكَاهِلِيُّ، وَهُوَ مَوْلًى لَهُمْ. قَالَ الْأَعْمَشُ: كَانَ أَبِي حَمِيلًا فَوَرَّثَهُ مَسْرُوقٌ


Tirmidhi-13

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 9

நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பதற்கு வந்துள்ள அனுமதி.

13 . ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழிக்குச் சென்று அங்கு நின்றுகொண்டு சிறுநீர் கழித்தார்கள். அப்போது அங்கத் தூய்மை (உளூ) செய்வதற்கான தண்ணீரை அவர்களிடம் நான் கொண்டு சென்றேன். (அவர்கள் சிறுநீர் கழிப்பதைக் கண்டு) நான் பின் வாங்கிச் செல்லலானேன்.

அப்போது அவர்கள் என்னை (தமக்கு அருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களுக்குப் பின்பக்கம் நின்றுகொண்டேன். பிறகு அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது தம் (கால்களைக் கழுவுவதற்குப் பதிலாக ஈரக் கையால்) தம்  காலுறைகள் (மோஜா)மீது தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

வகீஉ (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை அஃமஷ் (ரஹ்) வழியாக அறிவித்துவிட்டு, “காலுறைகள்மீது மஸ்ஹுச் செய்வது தொடர்பாக வந்துள்ள நபிமொழி அறிவிப்புகளில் இந்த அறிவிப்பே மிகவும் ஆதாரபூர்வமானதாகும்” என்று கூறியதை நான் கேட்டேன் என ஜாரூத் (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

மேலும், இந்த ஹதீஸை வகீஉ (ரஹ்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன் என அபூஅம்மார் ஹுஸைன் பின் ஹூரைஸ் (ரஹ்) அவர்களும்

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى سُبَاطَةَ قَوْمٍ، فَبَالَ عَلَيْهَا قَائِمًا، فَأَتَيْتُهُ بِوَضُوءٍ، فَذَهَبْتُ لِأَتَأَخَّرَ عَنْهُ، فَدَعَانِي حَتَّى كُنْتُ عِنْدَ عَقِبَيْهِ، فَتَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ»


Tirmidhi-12

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 8

நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பதற்கு வந்துள்ள தடை.

12. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பார்கள் என யாரேனும் உங்களிடம் சொன்னால், அதை நீங்கள் நம்பாதீர்கள். நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்துதான் சிறுநீர் கழித்துவந்தார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், உமர் (ரலி), புரைதா (ரலி), அப்துர்ரஹ்மான் பின் ஹஸனா (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள்ள மேற்கண்ட ஹதீஸ், இப்பாடப் பொருளில் வந்துள்ள ஹதீஸ்களில் மிகவும் அழகானதும் ஆதாரபூர்வமானதும் ஆகும்.

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான் நின்றுகொண்டு சிறுநீர் கழித்துக்கொண்டிருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது “உமரே! நின்றுகொண்டு சிறுநீர் கழிக்காதீர்” என்று (என்னிடம்) கூறினார்கள். அதன் பின்னர் நான் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதில்லை.

இந்த அறிவிப்பை இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து நாஃபிஉ (ரஹ் அவர்களும், நாஃபிஉ அவர்களிடமிருந்து அப்துல்கரீம் பின் அபுல்முகாரிக் என்பாரும் அறிவிக்கின்றனர். இதை நபி (ஸல்) அவர்களுடன் தொடர்புபடுத்தி அப்துல்கரீம் பின் அபுல்முகாரிக் என்பார் மட்டுமே அறிவிக்கிறார்.

«مَنْ حَدَّثَكُمْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَبُولُ قَائِمًا فَلَا تُصَدِّقُوهُ، مَا كَانَ يَبُولُ إِلَّا قَاعِدًا»


Tirmidhi-11

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் நான் என் சகோதரி(யும் நபியவர்களின் துணைவியுமான) ஹஃப்ஸா (ரலி) அவர்களது வீட்டின் (கூரை)மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டின் திசையை முன்னோக்கியும், கஅபாவுக்குப் புறம்காட்டியும் இயற்கைக் கடனை நிறைவேற்ற அமர்ந்திருப்பதைக் கண்டேன்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.


رَقِيتُ يَوْمًا عَلَى بَيْتِ حَفْصَةَ، «فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حَاجَتِهِ مُسْتَقْبِلَ الشَّامِ مُسْتَدْبِرَ الْكَعْبَةِ»


Tirmidhi-10

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10 . அபூகத்தாதா அல்அன்ஸாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கிப்லாவை முன்னோக்கிச் சிறுநீர் கழிப்பதை நான் கண்டேன்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அபூகத்தாதா (ரலி) அவர்கள் வழியாக இப்னு லஹீஆ என்பார் அறிவிக்கும் இந்த ஹதீஸைவிட நபி (ஸல்) அவர்களைக் குறித்து ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள முந்தைய ஹதீஸே மிகவும் ஆதாரபூர்வமானதாகும்.

(ஏனெனில், இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் நான்காவது அறிவிப்பாளராக இடம்பெற்றுள்ள) இப்னு லஹீஆ என்பார், ஹதீஸ்துறை அறிஞர்களிடம் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். அவரது நினைவாற்றல் குறித்து யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் உள்ளிட்டோர் விமர்சித்து அவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.


«أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبُولُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ»،

أَخْبَرَنَا بِذَلِكَ قُتَيْبَةُ قَالَ: أَخْبَرَنَا ابْنُ لَهِيعَةَ،


Tirmidhi-9

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 7

மலஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்க வந்துள்ள அனுமதி.

9. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சிறுநீர் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்க வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்திருந்தார்கள். எனினும், அவர்கள் இறப்பதற்கு ஓர் ஆண்டுக்குமுன் கிப்லாவை முன்னோக்கிய(படி அவர்கள் சிறுநீர் கழித்த)தை நான் கண்டேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அபூகத்தாதா (ரலி), ஆயிஷா (ரலி), அம்மார் பின் யாசிர் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஜாபிர் (ரலி) அவர்களின் ஹதீஸ் “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.


«نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ بِبَوْلٍ»، فَرَأَيْتُهُ قَبْلَ أَنْ يُقْبَضَ بِعَامٍ يَسْتَقْبِلُهَا.


Tirmidhi-8

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 6

மலஜலம் கழிக்கும்போது தொழும் திசையை (கிப்லா) முன்னோக்குவதற்கு வந்துள்ள தடை.

8. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் கழிப்பிடத்திற்குச் சென்று மலஜலம் கழிக்கும்போது கிப்லா (கஅபா)த் திசையை முன்னோக்கி அமரவும் வேண்டாம்; அதற்குப் புறம் காட்டி அமரவும் வேண்டாம். மாறாக, கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திரும்பி (அமர்ந்து) கொள்ளுங்கள்.

இதன் அறிவிப்பாளரான அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றிருந்தபோது அங்குள்ள கழிப்பறைகள் கிப்லாவை முன்னோக்கி (அமரும் விதத்தில்) கட்டப்பட்டிருப்பதைக் கண்டோம். ஆகவே, நாங்கள் மலஜலம் கழிக்கும்போது (கிப்லாவின் திசையிலிருந்து) திரும்பிக்கொண்டோம்; (அதற்காக) அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோரினோம்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் பின் ஜஸ்உ அஸ்ஸுபைதீ (ரலி), மஃகில் பின் அபூமஃகில் எனப்படும் மஃகில் பின் அபுல்ஹைஸம் (ரலி), அபூஉமாமா (ரலி), அபூஹுரைரா (ரலி), ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அபூஅய்யூப் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் இந்த ஹதீஸே இப்பாடப் பொருளில் வந்துள்ள ஹதீஸ்களில் மிகவும் அழகானதும் ஆதாரபூர்வமானதும்

«إِذَا أَتَيْتُمُ الْغَائِطَ فَلَا تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ بِغَائِطٍ وَلَا بَوْلٍ، وَلَا تَسْتَدْبِرُوهَا، وَلَكِنْ شَرِّقُوا أَوْ غَرِّبُوا» قَالَ أَبُو أَيُّوبَ: فَقَدِمْنَا الشَّامَ فَوَجَدْنَا مَرَاحِيضَ قَدْ بُنِيَتْ مُسْتَقْبَلَ الْقِبْلَةِ، فَنَنْحَرِفُ عَنْهَا، وَنَسْتَغْفِرُ اللَّهَ.


Tirmidhi-2

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 2

தூய்மையின் சிறப்பு குறித்து வந்துள்ளவை.

2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘முஸ்லிமான’ அல்லது ‘முஃமினான’ (இறைநம்பிக்கை கொண்ட) அடியார் அங்கத்தூய்மை (உளூ) செய்யும் போது தமது முகத்தைக் கழுவினால், கண்களால் நிகழ்ந்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) ‘நீருடன்’ அல்லது ‘நீரின் கடைசித் துளியுடன் அல்லது இது போன்ற (வேறொரு வார்த்தையில் கூறினார்கள். அ)தனுடன் முகத்திலிருந்து வெளியேறி விடுகின்றன.

அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் செய்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) ‘நீருடன்’ அல்லது ‘நீரின் கடைசித் துளியுடன்’ வெளியேறிவிடுகின்றன. இறுதியில் அவர் (கால்களைக் கழுவி முடிக்கும்போது) பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அங்கிருந்து) செல்கிறார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், ஸுஹைல் பின் அபூஸாலிஹ் (ரஹ்) அவர்கள் வழியாக அறிவிக்கும் இந்த ஹதீஸ், ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்ததாகும்.

அறிவிப்பாளர் ஸுஹைல் அவர்களின் தந்தை அபூஸாலிஹ் அஸ்ஸம்மான் ஆவார். இவருடைய இயற்பெயர் ‘தக்வான்’ என்பதாகும்.

அபூஹுரைரா (ரலி) அவர்களின் இயற்பெயர் விஷயத்தில் கருத்து வேறுபாடு

«إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُسْلِمُ، أَوِ الْمُؤْمِنُ، فَغَسَلَ وَجْهَهُ خَرَجَتْ مِنْ وَجْهِهِ كُلُّ خَطِيئَةٍ نَظَرَ إِلَيْهَا بِعَيْنَيْهِ مَعَ الْمَاءِ – أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ، أَوْ نَحْوَ هَذَا – وَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتْ مِنْ يَدَيْهِ كُلُّ خَطِيئَةٍ بَطَشَتْهَا يَدَاهُ مَعَ الْمَاءِ – أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ – حَتَّى يَخْرُجَ نَقِيًّا مِنَ الذُّنُوبِ»


Tirmidhi-2878

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2878.


«لِكُلِّ شَيْءٍ سَنَامٌ، وَإِنَّ سَنَامَ القُرْآنِ سُورَةُ البَقَرَةِ وَفِيهَا آيَةٌ هِيَ سَيِّدَةُ آيِ القُرْآنِ، هِيَ آيَةُ الكُرْسِيِّ»


Tirmidhi-2147

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2147. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு (குறிப்பிட்ட) இடத்தில் ஓர் அடியார் இறப்பார் என அல்லாஹ் தீர்மானித்துவிட்டால், ‘அந்த இடத்தில்’ அல்லது ‘அங்கு’ அவருக்கு ஒரு தேவையை அவன் ஏற்படுத்திவிடுவான்.

அறிவிப்பவர்: அபூஅஸ்ஸா (ரலி)

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ‘ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.

(இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான) அபூஅஸ்ஸா (ரலி) அவர்கள் நபித்தோழர் ஆவார். அன்னாரின் இயற்பெயர், யஸார் பின் அப்த் ஆகும். (மேற்கண்ட ஹதீஸின் இரண்டாம் அறிவிப்பாளரான) அபுல்மலீஹ் அவர்களின் இயற்பெயர், ஆமிர் பின் உஸாமா பின் உமைர் அல்ஹுதலீ ஆகும். இவரை ஸைத் பின் உஸாமா என்றும் கூறப்படுகிறது.


إِذَا قَضَى اللَّهُ لِعَبْدٍ أَنْ يَمُوتَ بِأَرْضٍ جَعَلَ لَهُ إِلَيْهَا حَاجَةً، أَوْ قَالَ: بِهَا حَاجَةً


Next Page » « Previous Page