Category: திர்மிதீ

Tirmidhi-2287

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2287.

அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறுவதாவது:

இன்றைக்கு உங்களில் கனவு கண்டது யார்? என்று நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் (அல்லாஹ்வின் தூதரே) ஒரு தராசு வானத்திலிருந்து இறங்கி வருவதைப் போல் நான் கனவு கண்டேன். அப்போது நீங்களும் அபூபக்ரும் (அதில்) நிறுக்கப்பட்டீர்கள்.

நீங்கள் அபூபக்ரை விட (எடையில்) மிகைத்து விட்டீர்கள். பின்பு அபூபக்ரு (ஒரு தட்டிலும்) உமர் (ஒரு தட்டிலும்) நிறுக்கப்பட்டார்கள். அப்போது அபூபக்ர் (எடையில்) மிகைத்து விட்டார்கள். உமரும் உஸ்மானும் நிறுக்கப்பட்ட போது உமர் மிகைத்து விட்டார்.

பிறகு அத்தராசு உஸ்ர்த்தப்பட்டு விட்டது என்று கூறினார். (தராசு உஸ்ர்த்தப்பட்டு விட்டது என்று கூறும் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் நாங்கள் வெறுப்பைக் கண்டோம்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ ذَاتَ يَوْمٍ: «مَنْ رَأَى مِنْكُمْ رُؤْيَا»؟ فَقَالَ رَجُلٌ: أَنَا رَأَيْتُ كَأَنَّ مِيزَانًا نَزَلَ مِنَ السَّمَاءِ فَوُزِنْتَ أَنْتَ وَأَبُو بَكْرٍ فَرَجَحْتَ أَنْتَ بِأَبِي بَكْرٍ، وَوُزِنَ أَبُو بَكْرٍ، وَعُمَرُ فَرَجَحَ أَبُو بَكْرٍ، وَوُزِنَ عُمَرُ وَعُثْمَانُ فَرَجَحَ عُمَرُ، ثُمَّ رُفِعَ المِيزَانُ، فَرَأَيْنَا الكَرَاهِيَةَ فِي وَجْهِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ


Tirmidhi-2100

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

2100.

…கபீஸா பின் துஐப் (ரலி) அவர்கள் கூறுவதாவது:

(ஒரு வயதான) பாட்டி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து தனக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைக் கேட்டார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் அப்பாட்டியிடத்தில் அல்லாஹ்வின் வேதத்திலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வேதத்திலும் உமக்கு ஒன்றுமில்லை (என்று நான் நினைக்கிறேன்).

(இது தொடர்பாக) நான் மக்களிடத்தில் கேட்கிறேன். தாங்கள் செல்லுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் மக்களிடத்தில் (பாட்டிக்கு சொத்தில் பங்கு உண்டா என்று) கேட்ட போது முகீரா பின் ஷ‚ஃபா (ரலி) அவர்கள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த போது பாட்டிக்கு ஆறில் ஒரு பங்கை அவர்கள் கொடுத்தார்கள் என்று கூறினார்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (இதற்கு ஆதரவாக) உம்முடன் வேறு யாராவது இருக்கின்றார்களா? என்று கேட்டார்கள். அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் எழுந்து முகீரா பின் ஷ‚ஃபா (ரலி) கூறியதைப் போன்றே கூறினார்கள். எனவே அபூபக்ர் (ரலி) அவர்கள் பாட்டிக்கு ஆறில் ஒன்று என்றப் பங்கைச் செயல்படுத்தினார்கள்.


جَاءَتِ الْجَدَّةُ أُمُّ الأُمِّ، وَأُمُّ الْأَبِ إِلَى أَبِي بَكْرٍ، فَقَالَتْ: إِنَّ ابْنَ ابْنِي، أَوْ ابْنَ بِنْتِي مَاتَ، وَقَدْ أُخْبِرْتُ أَنَّ لِي فِي كِتَابِ اللَّهِ حَقًّا، فَقَالَ أَبُو بَكْرٍ: مَا أَجِدُ لَكِ فِي الْكِتَابِ مِنْ حَقٍّ، وَمَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى لَكِ بِشَيْءٍ وَسَأَسْأَلُ النَّاسَ، قَالَ: فَسَأَلَ فَشَهِدَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطَاهَا السُّدُسَ» قَالَ: وَمَنْ سَمِعَ ذَلِكَ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ، قَالَ: «فَأَعْطَاهَا السُّدُسَ» ثُمَّ جَاءَتِ الْجَدَّةُ الْأُخْرَى الَّتِي تُخَالِفُهَا إِلَى عُمَرَ، قَالَ سُفْيَانُ: وَزَادَنِي فِيهِ مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، وَلَمْ أَحْفَظْهُ عَنِ الزُّهْرِيِّ وَلَكِنْ حَفِظْتُهُ مِنْ مَعْمَرٍ، أَنَّ عُمَرَ قَالَ: «إِنْ اجْتَمَعْتُمَا فَهُوَ لَكُمَا، وَأَيَّتُكُمَا انْفَرَدَتْ بِهِ فَهُوَ لَهَا»


Tirmidhi-3707

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

துணைப் பாடம்:

3707. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே நாங்கள் (சிறப்பில் முதவாவது) அபூபக்ர். அடுத்து உமர் அடுத்து உஸ்மான் என்று கூறிக் கொண்டிருந்தோம்.

அறிவிப்பவர்: நாஃபிஃ (ரஹ்)


كُنَّا نَقُولُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيٌّ: أَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ


Tirmidhi-3049

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3049. (மதுவை தடை செய்யும் வசனம் இறங்குவதற்கு முன்) உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வே! மதுவின் விசயத்தில் எங்களுக்கு மன ஆறுதல் தரும் வகையில் தெளிவுப் படுத்துவாயாக! என்று கூறினார். அப்போது, “மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது எனக் கூறுவீராக!” (அல்குர்ஆன் 2:219) என்ற ஸூரத்துல் பகராவின் வசனம் இறங்கியது. அப்போது, உமர் (ரலி) அவர்கள் அழைக்கப்பட்டு அவரிடம் இந்த வசனம் ஓதிக் காட்டப்பட்டது. அப்போதும் அவர்கள் “அல்லாஹ்வே! மதுவின் விசயத்தில் எங்களுக்கு மன ஆறுதல் தரும் வகையில் தெளிவுப் படுத்துவாயாக! என்று கூறினார்.

பிறகு, “நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும்போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!” (அல்குர்ஆன் 4:43) என்ற ஸூரத்துன் நிஸாவின் வசனம் இறங்கியது. அப்போது, உமர் (ரலி) அவர்கள் அழைக்கப்பட்டு அவரிடம் இந்த வசனம் ஓதிக் காட்டப்பட்டது. அப்போதும் அவர்கள் “அல்லாஹ்வே! மதுவின் விசயத்தில் எங்களுக்கு மன ஆறுதல் தரும் வகையில் தெளிவுப் படுத்துவாயாக! என்று கூறினார்.

பிறகு, “மது, சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும்,

«اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الخَمْرِ بَيَانَ شِفَاءٍ»، فَنَزَلَتِ الَّتِي فِي البَقَرَةِ: {يَسْأَلُونَكَ عَنِ الخَمْرِ وَالمَيْسِرِ} [البقرة: 219]، فَدُعِيَ عُمَرُ فَقُرِئَتْ عَلَيْهِ فَقَالَ: «اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الخَمْرِ بَيَانَ شِفَاءٍ»، فَنَزَلَتِ الَّتِي فِي النِّسَاءِ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى} [النساء: 43]، فَدُعِيَ عُمَرُ فَقُرِئَتْ عَلَيْهِ، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ بَيِّنَ لَنَا فِي الخَمْرِ بَيَانَ شِفَاءٍ»، فَنَزَلَتِ الَّتِي فِي المَائِدَةِ: {إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ العَدَاوَةَ وَالبَغْضَاءَ [ص:254] فِي الخَمْرِ وَالمَيْسِرِ} [المائدة: 91]- إِلَى قَوْلِهِ – {فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ} [المائدة: 91] فَدُعِيَ عُمَرُ فَقُرِئَتْ عَلَيْهِ فَقَالَ: «انْتَهَيْنَا انْتَهَيْنَا»

«وَقَدْ رُوِيَ عَنْ إِسْرَائِيلَ هَذَا الْحَدِيثُ مُرْسَلًا» حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ العَلَاءِ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي مَيْسَرَةَ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ، أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ، قَالَ: اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الخَمْرِ بَيَانَ شِفَاءٍ فَذَكَرَ نَحْوَهُ «وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ يُوسُفَ»


Tirmidhi-3026

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3026. ஹதீஸ் எண்-3025 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

3026/2. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள்  உணவு ஏற்பாடு செய்து எங்களை விருந்துக்கு அழைத்தார். அதில் எங்களுக்கு மதுவை குடிக்கக் கொடுத்தார். அதனால் எங்களுக்கு போதை ஏற்பட்டிருந்தது. தொழும் நேரம் வந்தபோது என்னை இமாமாக முன்னால் நிற்க வைத்தார்கள். நான் தொழுகையில் குல் யா அய்யுஹல் காஃபிரூன் என்ற அத்தியாயத்தை ஓதும்போது நீங்கள் வணங்குபவற்றை நாங்களும் வணங்குவோம் என்று தவறாக ஓதிவிட்டேன். அப்போது தான், “நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!’ (4:43) என்ற வசனம் இறங்கியது.


حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعْدٍ، عَنْ أَبِي جَعْفَرٍ الرَّازِيِّ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ:

صَنَعَ لَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ طَعَامًا فَدَعَانَا وَسَقَانَا مِنَ الخَمْرِ، فَأَخَذَتِ الخَمْرُ مِنَّا، وَحَضَرَتِ الصَّلَاةُ فَقَدَّمُونِي فَقَرَأْتُ: {قُلْ يَا أَيُّهَا الكَافِرُونَ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ} [الكافرون: 2] وَنَحْنُ نَعْبُدُ مَا تَعْبُدُونَ “. قَالَ: فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى حَتَّى تَعْلَمُوا مَا تَقُولُونَ} [النساء: 43]


Tirmidhi-176

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

தலைவர் தொழுகையைத் தாமதப்படுத்தும்போது (மக்கள் உரியநேரத்தில்) விரைவாக தொழுதுவிடுவது பற்றி வந்துள்ளவை.

176. அபூதர்ரே எனக்கு பிறகு வரும் சில தலைவர்கள், தொழுகையை உரியநேரத்தில் தொழாமல் பாழாக்குவார்கள். அப்போது, தொழுகையை அதற்குரிய நேரத்தில் நீ தொழுவிடு பிறகு அவர்களுடன் சேரந்து நீ தொழுதால் அது உமக்கு உபரியான தொழுகையாக அமையும். மேலும் உமது தொழுகையை பாதுகாத்தவராக இருப்பாய் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«يَا أَبَا ذَرٍّ، أُمَرَاءُ يَكُونُونَ بَعْدِي يُمِيتُونَ الصَّلَاةَ، فَصَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا، فَإِنْ صُلِّيَتْ لِوَقْتِهَا كَانَتْ لَكَ نَافِلَةً، وَإِلَّا كُنْتَ قَدْ أَحْرَزْتَ صَلَاتَكَ»


Tirmidhi-158

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

158.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي سَفَرٍ وَمَعَهُ بِلَالٌ، فَأَرَادَ [ص:298] أَنْ يُقِيمَ، فَقَالَ: «أَبْرِدْ»، ثُمَّ أَرَادَ أَنْ يُقِيمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبْرِدْ فِي الظُّهْرِ»، قَالَ: حَتَّى رَأَيْنَا فَيْءَ التُّلُولِ، ثُمَّ أَقَامَ فَصَلَّى، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ شِدَّةَ الحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَأَبْرِدُوا عَنِ الصَّلَاةِ»


Tirmidhi-2517

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

துணைப் பாடம்:

2517. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் (ஒட்டகத்தை கட்டிவைத்து விட்டு அல்லாஹ்வின் மீது முழுதும் நம்பிக்கை வைக்க வேண்டுமா? அல்லது அவிழ்த்துவிட்டு அல்லாஹ்வின் மீது முழுதும் நம்பிக்கை வைக்க வேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(ஒட்டகத்தை) கட்டிவைத்து விட்டு அல்லாஹ்வின் மீது முழுதும் நம்பிக்கை வைப்பீராக!” என்று பதிலளித்தார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

யஹ்யா பின் ஸயீத் அவர்கள், என் பார்வையில் இந்த செய்தி நிராகரிக்கப்பட்டதாகும் என்று கூறியதாக அம்ர் பின் அலீ அல்ஃபல்லாஸ் அவர்கள் கூறினார்.

இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வந்துள்ள செய்திகளில் இந்த அறிவிப்பாளர்தொடரையே நாம் அறிகிறோம். இது அரிதான செய்தியாகும்.

மேலும் இந்த செய்தி அம்ர் பின் உமைய்யா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.


قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ أَعْقِلُهَا وَأَتَوَكَّلُ، أَوْ أُطْلِقُهَا وَأَتَوَكَّلُ؟ قَالَ: «اعْقِلْهَا وَتَوَكَّلْ»


Tirmidhi-55

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

அங்கத் தூய்மை (உளூ) செய்த பின் ஓத வேண்டியவை.

55. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் அழகிய முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்து, “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக்க லஹூ, வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வ ரஸூலுஹூ; அல்லாஹும் மஜ்அல்னீ மினத் தவ்வாபீன வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன்” என்று கூறினால் சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் அவர் விரும்பிய வாசலில் நுழைந்துக் கொள்ளலாம்.

(துஆவின் பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையாக யாரும் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், தூதரும் ஆவார்கள் என்றும் நான் உறுதி மொழிகிறேன். இறைவா! பாவமன்னிப்புக் கோரித் திருந்தியவர்களில் ஒருவனாக என்னை ஆக்குவாயாக! தூய்மையாளர்களில் ஒருவனாகவும் என்னை ஆக்குவாயாக!)

அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி)

இந்த செய்தி இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி அனஸ் (ரலி), உக்பா பின் ஆமிர் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உமர் (ரலி) வழியாக வரும் இந்த செய்தி ஸைத் பின் ஹுபாப் அவர்களிடமிருந்து மாறுபட்ட அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல்லாஹ்

مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الوُضُوءَ ثُمَّ قَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ، وَاجْعَلْنِي مِنَ المُتَطَهِّرِينَ، فُتِحَتْ لَهُ ثَمَانِيَةُ أَبْوَابِ الجَنَّةِ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ


Tirmidhi-3456

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

உணவு உண்ட பின் சொல்ல வேண்டிய பிரார்த்தனை.

3456. நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) தமக்கு முன்னால் இருந்த உணவு விரிப்பை எடுக்கும்போது ‘அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி, ஃகைர முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா’ என்று பிரார்த்திப்பார்கள்.

(பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்.)

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رُفِعَتِ المَائِدَةُ مِنْ بَيْنِ يَدَيْهِ يَقُولُ: «الحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبُّنَا»


Next Page » « Previous Page