Category: திர்மிதீ

Tirmidhi-3457

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3457.


كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَكَلَ أَوْ شَرِبَ قَالَ: «الحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ»


Tirmidhi-3396

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3396. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது “அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனா வ ஸகானா வ கஃபானா வ ஆவானா. ஃபகம் மிம்மன் லா காஃபிய லஹூ, வலா முஃவிய” என்று கூறுவார்கள்.

(பொருள்: அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே நமக்கு உணவளித்தான்; குடிநீர் வழங்கினான்; (நம் தேவைகளை நிறைவேற்றி) போதுமான அளவுக்குக் கொடுத்தான்; (தங்க இடமளித்து) தஞ்சமளித்தான். ஆனால்,போதுமாக்கிவைப்பதற்கோ தஞ்சமளிப்பதற்கோ ஆளில்லாமல் எத்தனையோ பேர் இருக்கின்றனர்.)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ قَالَ: «الحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَكَفَانَا وَآوَانَا، فَكَمْ مِمَّنْ لَا كَافِيَ لَهُ وَلَا مُؤْوِيَ»


Tirmidhi-2176

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2176. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் எனக்காகப் பூமியைச் சுருட்டிக் காட்டினான். நான் அதன் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் பார்த்தேன். அதில் எனக்குச் சுருட்டிக் காட்டப்பட்ட அளவுக்கு என் சமுதாயத்தாரின் ஆட்சி விரிவடையும். எனக்குச் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தாலான (தங்கம் மற்றும் வெள்ளியின்) இரு கருவூலங்கள் வழங்கப்பட்டன.

நான் என் இறைவனிடம் என் சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழித்துவிடாதே எனப் பிரார்த்தித்தேன். மேலும், “அவர்கள்மீது அவர்களிடையே உள்ள எதிரிகளைத் தவிர வெளி எதிரிகளைச் சாட்டி விடாதே. அவ்வாறு நீ சாட்டினால், அவர்களது ஆட்சியும் கண்ணியமும் முற்றாக அழிந்துவிடும்” என்றும் பிரார்த்தித்தேன். என் இறைவன், “முஹம்மதே! நான் ஒன்றை முடிவு செய்துவிட்டால் அது மாற்றப்படாது. நான் உம்முடைய சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழிக்கமாட்டேன் என்பதை உமக்கு (வாக்குறுதியாக) அளிக்கிறேன். மேலும், அவர்களுக்கெதிராக அவர்களிடையேயுள்ள எதிரிகள் அல்லாமல் வெளி எதிரிகளைச் சாட்டி, அவர்களது ஆட்சியை முற்றாக அழிக்கமாட்டேன்; எதிரிகள் பூமியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அவர்களுக்கு எதிராகத் திரண்டாலும் சரியே! ஆனால், அவர்களிலேயே சிலர் சிலரை அழிப்பார்கள். அவர்களிலேயே

إِنَّ اللَّهَ زَوَى لِيَ الأَرْضَ فَرَأَيْتُ مَشَارِقَهَا وَمَغَارِبَهَا، وَإِنَّ أُمَّتِي سَيَبْلُغُ مُلْكُهَا مَا زُوِيَ لِي مِنْهَا، وَأُعْطِيتُ الكَنْزَيْنِ الأَحْمَرَ وَالأَبْيَضَ، وَإِنِّي سَأَلْتُ رَبِّي لِأُمَّتِي أَنْ لَا يُهْلِكَهَا بِسَنَةٍ عَامَّةٍ، وَأَنْ لَا يُسَلِّطَ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ سِوَى أَنْفُسِهِمْ فَيَسْتَبِيحَ بَيْضَتَهُمْ، وَإِنَّ رَبِّي قَالَ: يَا مُحَمَّدُ إِنِّي إِذَا قَضَيْتُ قَضَاءً فَإِنَّهُ لَا يُرَدُّ، وَإِنِّي أَعْطَيْتُكَ لِأُمَّتِكَ أَنْ لَا أُهْلِكَهُمْ بِسَنَةٍ عَامَّةٍ وَأَنْ لَا أُسَلِّطَ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ سِوَى أَنْفُسِهِمْ فَيَسْتَبِيحَ بَيْضَتَهُمْ وَلَوِ اجْتَمَعَ عَلَيْهِمْ مَنْ بِأَقْطَارِهَا _ أَوْ قَالَ: مَنْ بَيْنِ أَقْطَارِهَا _ حَتَّى يَكُونَ بَعْضُهُمْ يُهْلِكُ بَعْضًا وَيَسْبِي بَعْضُهُمْ بَعْضًا


Tirmidhi-2953

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2953.


«مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ القُرْآنِ فَهِيَ خِدَاجٌ فَهِيَ خِدَاجٌ، غَيْرُ تَمَامٍ»

قَالَ: قُلْتُ: يَا أَبَا هُرَيْرَةَ، إِنِّي أَحْيَانًا أَكُونُ وَرَاءَ الإِمَامِ. قَالَ: «يَا ابْنَ الفَارِسِيِّ، فَاقْرَأْهَا فِي نَفْسِكَ»


Tirmidhi-3297

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3297. (நபி (ஸல்) அவர்களுக்கு நரை ஏற்பட்டதைக் கண்ட அபூபக்கர் (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு முடி நரைத்து விட்டதே! என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஹூத், அல்வாகிஆ, அல்முர்ஸலாத், அந்நபஃ, இதஷ்ஷம்ஸு குவ்விரத் ஆகிய அத்தியாயங்கள் என்னை நரைக்கச் செய்து விட்டன” என்று பதிலளித்தார்கள்…

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


قَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ قَدْ شِبْتَ، قَالَ: «شَيَّبَتْنِي هُودٌ، وَالوَاقِعَةُ، وَالمُرْسَلَاتُ، وَعَمَّ يَتَسَاءَلُونَ، وَإِذَا الشَّمْسُ كُوِّرَتْ»


Tirmidhi-3333

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

இதஷ் ஷம்ஸு குவ்விரத் என்ற 81 வது அத்தியாயம்.

3333. யார் மறுமை நாளை நேரடியாக பார்க்க விரும்புவாரோ அவர், சூரியன் சுருட்டப்பட்டு விடும் போது (என்று ஆரம்பிக்கும் 81 வது அத்தியாயத்தையும்)‌, வானம் பிளந்து விடும்போது (என்று ஆரம்பிக்கும் 82, 84 வது அத்தியாயங்களையும்) ஓதட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى يَوْمِ القِيَامَةِ كَأَنَّهُ رَأْيُ عَيْنٍ» فَلْيَقْرَأْ: إِذَا الشَّمْسُ كُوِّرَتْ، وَإِذَا السَّمَاءُ انْفَطَرَتْ، وَإِذَا السَّمَاءُ انْشَقَّتْ


Tirmidhi-512

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது பேசுவது வெறுப்பிற்குரிய செயல் என்பது பற்றி வந்துள்ளவை.

512. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது ஒருவர் (தன் அருகிலிருப்பவரிடம்) ‘நீ வாய்மூடு!’ என்று கூறினால் அவர் வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டார்.’

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَنْ قَالَ يَوْمَ الجُمُعَةِ وَالإِمَامُ يَخْطُبُ: أَنْصِتْ، فَقَدْ لَغَا


Tirmidhi-3422

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3422.

…அல்லாஹும்மஃக்பி[F]ர்லீ மா கத்தம்(த்)து வமா அக்கர்(த்)து வமா அஸ்ரர்(த்)து வமா அஃலன்(த்)து வமா அஸ்ரப்[F](த்)து அன்(த்)த அஃலமு பி[B]ஹி மின்னீ அன்(த்)தல் முகத்திமு வ அன்(த்)தல் முஅக்கிரு லாயிலாஹ இல்லா அன்(த்)த

இதன் பொருள் :

நான் முந்திச் செய்ததையும், பிந்திச் செய்வதையும், நான் இரகசியமாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததையும், நான் வரம்பு மீறி நடந்து கொண்டதையும், என்னிடமிருந்து எதை நீ அறிந்து வைத்துள்ளாயோ அதையும் மன்னிப்பாயாக. நீயே முற்படுத்துபவன். நீயே பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை…


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ قَالَ: «وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ المُشْرِكِينَ، إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ العَالَمِينَ، لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ المُسْلِمِينَ، اللَّهُمَّ أَنْتَ المَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ، ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذَنْبِي، فَاغْفِرْ لِي ذَنْبِي جَمِيعًا إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، وَاهْدِنِي لِأَحْسَنِ الأَخْلَاقِ، لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ، وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا، لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ، لَبَّيْكَ وَسَعْدَيْكَ، وَالخَيْرُ كُلُّهُ فِي يَدَيْكَ، وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ، أَنَا بِكَ وَإِلَيْكَ، تَبَارَكْتَ وَتَعَالَيْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ»، فَإِذَا رَكَعَ قَالَ: «اللَّهُمَّ لَكَ رَكَعْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، خَشَعَ لَكَ سَمْعِي وَبَصَرِي وَعِظَامِي وَعَصَبِي»، فَإِذَا رَفَعَ قَالَ: [ص:487] «اللَّهُمَّ رَبَّنَا لَكَ الحَمْدُ مِلْءَ السَّمَاءِ، وَمِلْءَ الأَرْضِ، وَمِلْءَ مَا بَيْنَهُمَا، وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ»، فَإِذَا سَجَدَ قَالَ: «اللَّهُمَّ لَكَ سَجَدْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَصَوَّرَهُ، وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ، تَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الخَالِقِينَ»، ثُمَّ يَقُولُ مِنْ آخِرِ مَا يَقُولُ بَيْنَ التَّشَهُّدِ وَالتَّسْلِيمِ: «اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، أَنْتَ المُقَدِّمُ وَأَنْتَ المُؤَخِّرُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ»


Tirmidhi-3529

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3529. அபூராஷித் அல்ஹுபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றவற்றிலிருந்து எங்களுக்கு சில செய்திகளைத் தெரிவியுங்கள்’ என்று கூறினேன். அப்போதவர்கள், என்னை நோக்கி கடிதம் ஒன்றைப் போட்டார்கள். மேலும், ‘இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு (மற்றவர்கள் மூலம்) எழுதி(யனுப்பி)ய கடிதமாகும் என்று கூறினார்கள். அப்போது அதை நான் பார்த்தேன். அதில் இடம்பெற்றிருந்து செய்தி பின்வருமாறு இருந்தது:

அபூபக்ர் (ரலி) அவர்கள், (நபி (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே!, ‘நான் காலையிலும், மாலையிலும், ஓதுவதற்கேற்ற (பிரார்த்தனை) ஒன்றை எனக்குக் கற்றுத்தாருங்கள்’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்)அவர்கள், “அல்லாஹும்ம ஃபா(த்)திரஸ் ஸமாவாத்தி வல்அர்ழி, ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாத(த்)தி, லாயிலாஹ இல்லா அன்(த்)த, ரப்ப குல்லி ஷையிவ் வமலீ(க்)கஹூ, அவூது பி(க்)க மின் ஷர்ரி நஃப்ஸீ, வமின் ஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹீ, வ அன் அக்தரிஃப அலா நஃப்ஸீ ஸூஅன், அவ் அஜுர்ரஹூ இலா முஸ்லிம் என்று ஓதுங்கள்” என்று கூறினார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை.

أَتَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ العَاصِ، فَقُلْتُ لَهُ: حَدِّثْنَا مِمَّا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَلْقَى إِلَيَّ صَحِيفَةً، فَقَالَ: هَذَا مَا كَتَبَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَنَظَرْتُ فِيهَا فَإِذَا فِيهَا: إِنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ قَالَ: يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي مَا أَقُولُ إِذَا أَصْبَحْتُ وَإِذَا أَمْسَيْتُ، فَقَالَ: ” يَا أَبَا بَكْرٍ قُلْ: اللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالأَرْضِ عَالِمَ الغَيْبِ وَالشَّهَادَةِ لَا إِلَهَ إِلَّا أَنْتَ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ، وَأَنْ أَقْتَرِفَ عَلَى نَفْسِي سُوءًا أَوْ أَجُرَّهُ إِلَى مُسْلِمٍ


Tirmidhi-3392

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3392.

அல்லாஹ்வின் தூதரே காலையிலும் மாலையிலும் ஓத வேண்டியதை எனக்குக் கற்றுத்தாருங்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் காலையிலும் மாலையிலும் உறங்கச் செல்லும் போது அல்லாஹும்ம ஆலிமல் கைபி வஷ்ஷஹாததி ஃபாதிர ஸ்ஸமாவாதி வல்அர்ளி ரப்பி குல்லி ஷையின் வமலீகஹு அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லா அன்த அவூது மிக மின் ஷர்ரி நஃப்ஸி வமின் ஷர்ரிஷ்ஷைதானி வஷிர்கிஹி என்று சொல்லுங்கள் எனக் கூறினார்கள்.

பொருள் : “அல்லாஹ்வே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிந்தவனே! அனைத்துப் பொருட்களின் இரட்சகனும் அதிபதியுமானவனே உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். உன்னிடத்தில் என் உள்ளதின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் அவனை இணையாக்குவதை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


قَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ مُرْنِي بِشَيْءٍ أَقُولُهُ إِذَا أَصْبَحْتُ وَإِذَا أَمْسَيْتُ؟ قَالَ: ” قُلْ: اللَّهُمَّ عَالِمَ الغَيْبِ وَالشَّهَادَةِ، فَاطِرَ السَّمَوَاتِ وَالأَرْضِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ، قَالَ: قُلْهُ إِذَا أَصْبَحْتَ، وَإِذَا أَمْسَيْتَ، وَإِذَا أَخَذْتَ مَضْجَعَكَ


Next Page » « Previous Page