Category: திர்மிதீ

Tirmidhi-2915

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

2915. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமைநாளில் (அல்லாஹ்விடம்) குர்ஆன் வந்து, “என் இறைவா! (குர்ஆனைக் கற்று அதன்படி செயல்பட்ட) இந்த மனிதரை அலங்கரிப்பாயாக! என்று கூறும். எனவே அவருக்கு கண்ணியம் என்னும் கிரீடம் அணிவிக்கப்படும். அதற்கு பிறகும் குர்ஆன், “என் இறைவா! இன்னும் அதிகப்படுத்துவாயாக! என்று கூறும். எனவே அவருக்கு கண்ணியம் என்னும் உயர்ரக ஆடை அணிவிக்கப்படும். அதற்கு பிறகும் குர்ஆன், “என் இறைவா! இவரைப் பொருந்திக் கொள்வாயாக! என்று கூறும். எனவே அல்லாஹ் அவரைப் பொருந்திக்கொள்வான்.

மேலும் அவரிடம், குர்ஆனை ஓதுவீராக! உயர்வாயாக! என்று கூறப்படும். (எனவே அவர் ஓதுவார்). அவர் ஓதும் ஒவ்வொரு வசனத்திற்கும் அவருக்கு அந்தஸ்து அதிகமாக்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தி ஹஸன் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

ஷுஃபா அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மது பின் ஜஃபர் (ஃகுன்தர்) அவர்கள் இந்த செய்தியை அபூஹுரைரா (ரலி) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார்.

மேற்கண்ட-ஷுஃபா அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துஸ்ஸமத் அவர்களின் செய்தியை விட, அபூஹுரைரா (ரலி) அவர்களின் கூற்றாக வந்துள்ள இந்த செய்தியே (நம்முடைய பார்வையில்) மிகச் சரியானதாகும்.


يَجِيءُ القُرْآنُ يَوْمَ القِيَامَةِ فَيَقُولُ: يَا رَبِّ حَلِّهِ، فَيُلْبَسُ تَاجَ الكَرَامَةِ، ثُمَّ يَقُولُ: يَا رَبِّ زِدْهُ، فَيُلْبَسُ حُلَّةَ الكَرَامَةِ، ثُمَّ يَقُولُ: يَا رَبِّ ارْضَ عَنْهُ، فَيَرْضَى عَنْهُ، فَيُقَالُ لَهُ: اقْرَأْ وَارْقَ، وَيُزَادُ بِكُلِّ آيَةٍ حَسَنَةً “:

«هَذَا حَدِيثٌ حَسَنٌ»

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمِ ابْنِ بَهْدَلَةَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، نَحْوَهُ، وَلَمْ يَرْفَعْهُ.

«وهَذَا أَصَحُّ عِنْدَنَا مِنْ حَدِيثِ عَبْدِ الصَّمَدِ، عَنْ شُعْبَةَ»


Tirmidhi-1820

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஒருவர் (சாப்பிடும்) உணவு இருவருக்குப் போதுமானதாகும் என்று வந்துள்ள ஹதீஸ்கள்.

1820. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

(வேறு அறிவிப்பாளர் தொடரில்) ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவரின் உணவு மூவருக்குப் போதுமானதாகும். நால்வரின் உணவு எண்மருக்குப் போதுமானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்.

மேலும் கூறுகிறார்:

இந்த செய்தி ஹஸன்-ஸஹீஹ் ஆகும். மேற்கண்ட செய்தியின் கருத்து ஜாபிர் (ரலி), இப்னு உமர் (ரலி) போன்றோர் வழியாகவும் வந்துள்ளது.


«طَعَامُ الِاثْنَيْنِ كَافِي الثَّلَاثَةَ، وَطَعَامُ الثَّلَاثَةِ كَافِي الأَرْبَعَةَ»

وَرَوَى جَابِرٌ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «طَعَامُ الوَاحِدِ يَكْفِي الِاثْنَيْنِ، وَطَعَامُ الِاثْنَيْنِ يَكْفِي الأَرْبَعَةَ، وَطَعَامُ الأَرْبَعَةِ يَكْفِي الثَّمَانِيَةَ»

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا


Tirmidhi-91

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

91.


يُغْسَلُ الإِنَاءُ إِذَا وَلَغَ فِيهِ الكَلْبُ سَبْعَ مَرَّاتٍ: أُولَاهُنَّ أَوْ أُخْرَاهُنَّ بِالتُّرَابِ، وَإِذَا وَلَغَتْ فِيهِ الهِرَّةُ غُسِلَ مَرَّةً


Tirmidhi-3634

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

நபி (ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வந்தது?

3634. ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?’ எனக் கேட்டதற்கு, ‘சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். மேலும் சில வேளைகளில் அ(வ்வான)வர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

மேலும், ‘கடும் குளிரான நாள்களில் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) இறங்குவதை கண்டேன். அவர் (வானவர்) நபி (ஸல்) அவர்களைவிட்டு விலகிச் செல்லும்போது (குளிரிலும்) அவர்களின் நெற்றியிலிருந்து வியர்வை சொட்டும்’

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


أَنَّ الحَارِثَ بْنَ هِشَامٍ، سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَيْفَ يَأْتِيكَ الوَحْيُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحْيَانًا يَأْتِينِي مِثْلُ صَلْصَلَةِ الجَرَسِ وَهُوَ أَشَدُّهُ عَلَيَّ، وَأَحْيَانًا يَتَمَثَّلُ لِيَ المَلَكُ رَجُلًا فَيُكَلِّمُنِي فَأَعِي مَا يَقُولُ».

قَالَتْ عَائِشَةُ: «فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْزِلُ عَلَيْهِ الْوَحْيُ فِي اليَوْمِ الشَّدِيدِ الْبَرْدِ فَيَفْصِمُ عَنْهُ وَإِنَّ جَبِينَهُ لَيَتَفَصَّدُ عَرَقًا»


Tirmidhi-2821

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

நரை முடியை நீக்குவது குறித்து வந்துள்ள தடை.

2821. நபி (ஸல்) அவர்கள், நரைத்த முடியை நீக்குவதை தடை செய்தார்கள். மேலும் அவர்கள், “அது முஸ்லிமுக்கு ஒளியாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தி ஹஸன் தரத்தில் அமைந்த செய்தியாகும். மேலும் இந்த செய்தி அம்ர் பின் ஷுஐப் அவர்களிடமிருந்து அப்துர்ரஹ்மான் பின் ஹாரிஸ் வழியாகவும், இன்னும் சிலரின் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ نَتْفِ الشَّيْبِ، وَقَالَ: «إِنَّهُ نُورُ المُسْلِمِ»


Tirmidhi-24

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் கையைத் தண்ணீர் ‎ஊற்றிக் கழுவாமல் தனது கையைப் பாத்திரத்தில் விடவேண்டாம் என்று வந்துள்ளவை.

24. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில் உங்களில் ஒருவர் (உறங்கி) விழித்தெழுந்தால் இரண்டு அல்லது மூன்று முறை கைகளில் தண்ணீர் ‎ஊற்றிக் கழுவாமல் தனது கையைப் பாத்திரத்தில் விடவேண்டாம். ஏனெனில் இரவில் ‎அவரது கை எங்கெங்கு பட்டது என்பதை அவர் அறிய மாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ فَلَا يُدْخِلْ يَدَهُ فِي الْإِنَاءِ حَتَّى يُفْرِغَ عَلَيْهَا مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا، فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ»


Tirmidhi-3462

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

3462. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (இஸ்ரா, மிஃராஜ்—ஜெரூசலத்திற்கும் பின்பு விண்ணுலகத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்ட) விண்ணுலகப் பயணத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், முஹம்மதே! உமது சமுதாயத்திற்கு என்னுடைய ஸலாமைக் கூறுங்கள். மேலும் “சொர்க்கத்தின் மண் தூய்மையானது; அதன் தண்ணீர் மதுரமானது; மேலும் சொர்க்கம் விசாலமான காலியிடமாகும்; அதில் மரம் நடவேண்டுமென்றால் ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்), அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே), லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை), அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்ற வார்த்தைகளைக் கூறவேண்டும் என்பதையும் உமது சமுதாயத்திற்கு தெரியப்படுத்துங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


لَقِيتُ إِبْرَاهِيمَ لَيْلَةَ أُسْرِيَ بِي فَقَالَ: يَا مُحَمَّدُ، أَقْرِئْ أُمَّتَكَ مِنِّي السَّلَامَ وَأَخْبِرْهُمْ أَنَّ الجَنَّةَ طَيِّبَةُ التُّرْبَةِ عَذْبَةُ المَاءِ، وَأَنَّهَا قِيعَانٌ، وَأَنَّ غِرَاسَهَا سُبْحَانَ اللَّهِ وَالحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ


Tirmidhi-255

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ருகூவில் (செல்லும் போதும், அதிலிருந்து எழும்போதும்) இருகைகளையும் உயர்த்துதல்.

255. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் போதும், ருகூவுக்கு செல்லும் போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தம் இருகைகளையும் தம் இருதோள்களுக்கு நேராக உயர்த்துவதையும், இரு ஸஜ்தாக்களுக்கிடையில் இவ்வாறு கைகளை உயர்த்தாமலிருப்பதையும் நான் பார்த்துள்ளேன்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இப்னு அபூஉமர் அவர்கள், “இரு ஸஜ்தாக்களுக்கிடையில் இவ்வாறு கைகளை உயர்த்தமாட்டார்கள்” என்று கூடுதலாக அறிவித்துள்ளார்.


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ يَرْفَعُ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ مَنْكِبَيْهِ، وَإِذَا رَكَعَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ»،

وَزَادَ ابْنُ أَبِي عُمَرَ فِي حَدِيثِهِ: «وَكَانَ لَا يَرْفَعُ بَيْنَ السَّجْدَتَيْنِ».


Tirmidhi-257

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

257. இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், “தெரிந்துக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதது போன்று உங்களுக்கு தொழுது காட்டப்போகிறேன்” என்று கூறிவிட்டு தொழுதார்கள். அப்போது அவர்கள், (தொழுகையின்) ஆரம்பத்தில் ஒரு தடவையே இருகைகளையும் உயர்த்தினார்கள்.

அறிவிப்பவர்: அல்கமா பின் கைஸ் (ரஹ்)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தக் கருத்தில் பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாகவும் செய்திகள் வந்துள்ளன. இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் இந்த செய்தி ஹஸன் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

(மேற்கண்ட செய்தியில் உள்ள-இருகைகளையும் தக்பீர் தஹ்ரீமாவின் ஆரம்பத்தில் மட்டுமே உயர்த்த வேண்டும்; ருகூவிற்கு செல்லும் முன்பும், ருகூவிலிருந்து எழுந்த பின்பும், இரண்டாவது ரக்அத்தின் இருப்பிலிருந்து எழும்போதும் இருகைகளை உயர்த்தக் கூடாது என்ற) இந்த சட்டத்தையே சில நபித்தோழர்கள், (அவர்களை அடுத்து வந்த) தாபிஈன்கள் போன்ற பல கல்வியாளர்கள் கூறுகின்றனர்.  ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களின் கருத்தும், கூஃபாவாசிகளின் கருத்தும் இதுவே!


«أَلَا أُصَلِّي بِكُمْ صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَصَلَّى، فَلَمْ يَرْفَعْ يَدَيْهِ إِلَّا فِي أَوَّلِ مَرَّةٍ»


Next Page » « Previous Page