Category: திர்மிதீ

Tirmidhi-1161

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1161. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண், கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்து விட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)


«أَيُّمَا امْرَأَةٍ مَاتَتْ وَزَوْجُهَا عَنْهَا رَاضٍ دَخَلَتِ الجَنَّةَ»


Tirmidhi-2229

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

வழிகெடுக்கும் தலைவர்கள்.

2229. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் எனது சமுதாயத்தின் விசயத்தில் பயப்படுவதெல்லாம் வழிகெடுக்கும் தலைவர்களைக் குறித்துதான்.

மேலும் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் உண்மைக்கு ஆதரவாகப் போராடிக் கொண்டே இருப்பார்கள். இறைக் கட்டளை(யான மறுமைநாள்) வரும் வரை அவர்களை தோற்கடிக்க நினைப்போர் தீங்கிழைக்க முடியாமல் அவர்கள் மேலோங்கியவர்களாக இருப்பார்கள்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தி ஹஸன் ஸஹீஹ் தரமாகும். இந்த செய்தியில் வரும் கூட்டத்தினர் ஹதீஸை உடையவர்கள் (ஹதீஸ்கலை அறிஞர்கள்) என்று அலீ பின் மதீனீ அவர்கள் கூறியதாக புகாரீ இமாம் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.


«إِنَّمَا أَخَافُ عَلَى أُمَّتِي الأَئِمَّةَ المُضِلِّينَ»، قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي عَلَى الحَقِّ ظَاهِرِينَ لَا يَضُرُّهُمْ مَنْ يَخْذُلُهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ»


Tirmidhi-586

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

586. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுது விட்டு பிறகு அமர்ந்து சூரியன் உதயமாகும் வரை அல்லாஹ்வை நினைவுகூர்ந்து, சூரியன் உதித்த பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதால் ஹஜ்ஜும், உம்ராவும் செய்த நன்மையைப் போன்று அவருக்கு முழுமையான நன்மை கிடைக்கும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

இதில் இடம்பெறும் அபூளிலால் என்பவர் பற்றி புகாரீ இமாமிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் (இவர் சில முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்றும்) முகாரிபுல் ஹதீஸ்-நடுத்தரமானவர் என்றும்; இவரின் பெயர் ஹிலால் என்றும் கூறினார்.


«مَنْ صَلَّى الغَدَاةَ فِي جَمَاعَةٍ ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللَّهَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ كَانَتْ لَهُ كَأَجْرِ حَجَّةٍ وَعُمْرَةٍ»
قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَامَّةٍ تَامَّةٍ تَامَّةٍ»


Tirmidhi-470

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

470. ஒரு இரவில் இரண்டு வித்ர் கிடையாது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: தல்க் பின் அலீ (ரலி)


«لَا وِتْرَانِ فِي لَيْلَةٍ»


Tirmidhi-715

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

715.


أَغَارَتْ عَلَيْنَا خَيْلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَجَدْتُهُ يَتَغَدَّى، فَقَالَ: «ادْنُ فَكُلْ»، فَقُلْتُ: إِنِّي صَائِمٌ، فَقَالَ: ادْنُ أُحَدِّثْكَ عَنِ الصَّوْمِ، أَوِ الصِّيَامِ، إِنَّ اللَّهَ تَعَالَى وَضَعَ عَنِ المُسَافِرِ الصَّوْمَ، وَشَطْرَ الصَّلَاةِ، وَعَنِ الحَامِلِ أَوِ المُرْضِعِ الصَّوْمَ أَوِ الصِّيَامَ “، وَاللَّهِ لَقَدْ قَالَهُمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كِلَيْهِمَا أَوْ إِحْدَاهُمَا، فَيَا لَهْفَ نَفْسِي أَنْ لَا أَكُونَ طَعِمْتُ مِنْ طَعَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ


Tirmidhi-437

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

437.


«صَلَاةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا خِفْتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ، وَاجْعَلْ آخِرَ صَلَاتِكَ وِتْرًا»


Tirmidhi-1706

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1706. …மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையில் கூறினார்கள்…

அறிவிப்பவர்: உம்மு ஹுஸைன் (ரலி)


سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فِي حَجَّةِ الوَدَاعِ، وَعَلَيْهِ بُرْدٌ قَدِ التَفَعَ بِهِ مِنْ تَحْتِ إِبْطِهِ، قَالَتْ: فَأَنَا أَنْظُرُ إِلَى عَضَلَةِ عَضُدِهِ تَرْتَجُّ، سَمِعْتُهُ يَقُولُ: «يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا اللَّهَ، وَإِنْ أُمِّرَ عَلَيْكُمْ عَبْدٌ حَبَشِيٌّ مُجَدَّعٌ فَاسْمَعُوا لَهُ، وَأَطِيعُوا مَا أَقَامَ لَكُمْ كِتَابَ اللَّهِ»


Tirmidhi-1863

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1863.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنِ البِتْعِ فَقَالَ: «كُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهُوَ حَرَامٌ»


Tirmidhi-1866

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1866. போதை தரும் அனைத்தும் ஹராமாகும். எது ஃபரக் அளவு (சுமார் 7.5 கிலோ) சாப்பிட்டால் போதை தருமோ அதில் கையளவும் ஹராமாகும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«كُلُّ مُسْكِرٍ حَرَامٌ، مَا أَسْكَرَ الفَرَقُ مِنْهُ فَمِلْءُ الكَفِّ مِنْهُ حَرَامٌ»: قَالَ أَحَدُهُمَا فِي حَدِيثِهِ: «الحَسْوَةُ مِنْهُ حَرَامٌ»


Tirmidhi-641

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

641. …அனாதைகளின் சொத்துக்கு ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டால் அதைக் கொண்டு வியாபாரம் செய்யட்டும். இல்லாவிட்டால் அதை ஜகாத் சாப்பிட்டு விடும்…


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ النَّاسَ فَقَالَ: «أَلَا مَنْ وَلِيَ يَتِيمًا لَهُ مَالٌ فَلْيَتَّجِرْ فِيهِ، وَلَا يَتْرُكْهُ حَتَّى تَأْكُلَهُ الصَّدَقَةُ»


Next Page » « Previous Page