Category: திர்மிதீ

Tirmidhi-2402

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

2402. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உலகில் சோதனைகளுக்குள்ளானவர்களுக்கு மறுமையில் நன்மை வழங்கப்படும் போது, உலகில் ஆரோக்கியமாக (நல்ல நிலையில்) வாழ்ந்தவர்கள், “நாங்கள் உலகில் வாழும்போது எங்களுடைய தோல்கள் கத்திரிக்கோலால் வெட்டப்பட்டிருக்க வேண்டுமே!” என்று ஆசைப்படுவார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த (அரிதான) செய்தியாகும். இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே இது வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.

வேறு சிலர் அஃமஷ் அவர்களிடமிருந்து, அஃமஷ் —> தல்ஹா பின் முஸர்ரிஃப் —> மஸ்ரூக் என்ற அறிவிப்பாளர்தொடரில் மஸ்ரூக் அவர்களின் சொல்லாக இதில் சிலதை அறிவித்துள்ளனர்.


«يَوَدُّ أَهْلُ العَافِيَةِ يَوْمَ القِيَامَةِ حِينَ يُعْطَى أَهْلُ البَلَاءِ الثَّوَابَ لَوْ أَنَّ جُلُودَهُمْ كَانَتْ قُرِضَتْ فِي الدُّنْيَا بِالمَقَارِيضِ»


Tirmidhi-1701

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(இனப்பெருக்கத்திற்காக) கழுதையைக் குதிரையுடன் இணையவிடுவது வெறுப்புக்குரியது என்பது பற்றி வந்துள்ளவை.

1701. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

திண்ணமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அல்லாஹ்வால்) கட்டளையிடப்படும் ஓர் அடியாராக இருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மற்ற) மக்களுக்கு சொல்லாமல் எங்களுக்காக மட்டும் எதையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆனால் மூன்று விஷயங்களைத் தவிர. (அதை எங்களுக்கு தனிப்பட்ட முறையில் கூறியுள்ளார்கள்.) 

அவைகள்:

1 . நாங்கள் உளூ எனும் அங்கத்தூய்மையை முழுமையாகச் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.
2 . தர்மப் பொருளை உண்ணக்கூடாது என்று உத்தரவிட்டார்கள்.
3 . (இனப்பெருக்கத்திற்காக) கழுதையைக் குதிரையுடன் இணையவிடக் கூடாது என்று தடுத்தார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான செய்தி, அலீ (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது.

மேற்கண்ட செய்தி ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்தில் அமைந்ததாகும்.

இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள், அபூஜஹ்ளம் —> உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் —> இப்னு அப்பாஸ்

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدًا مَأْمُورًا، مَا اخْتَصَّنَا دُونَ النَّاسِ بِشَيْءٍ إِلَّا بِثَلَاثٍ: «أَمَرَنَا أَنْ نُسْبِغَ الوُضُوءَ، وَأَنْ لَا نَأْكُلَ الصَّدَقَةَ، وَأَنْ لَا نُنْزِيَ حِمَارًا عَلَى فَرَسٍ»


Tirmidhi-3386

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

பிரார்த்தனை செய்யும் போது கைகளை உயர்த்துவது பற்றி வந்துள்ளவை.

3386. உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பிரார்த்தனை செய்யும் போது தமது இரு கைகளையும் உயர்த்தினால் (முடிவில்) அவற்றால் தமது முகத்தை தடவாமல் கீழே விடமாட்டார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

(எனது ஆசிரியர்களில் மற்றொருவரான) முஹம்மத் பின் முஸன்னா அவர்கள், இதே கருத்தை வேறு வார்த்தையில் அறிவித்தார்.

மேற்கண்ட செய்தி “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும். இதை ஹம்மாத் பின் ஈஸா என்பவர் மட்டுமே அறிவித்துள்ளதாக நாம் அறிகிறோம். இவர் குறைந்த ஹதீஸ்களையே அறிவித்துள்ளார். இவரிடமிருந்து சிலர் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். மேலும் இவர் இந்தச் செய்தியை தனித்து அறிவித்துள்ளார்.

(இதில் வரும் அறிவிப்பாளர்) ஹன்ளலா பின் அபூஸுஃப்யான் அல்ஜுமஹீ என்பவர் பலமானவர் ஆவார். (ஏனெனில்) இவரை யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் அவர்கள் பலமானவர் என்று கூறியுள்ளார்.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَفَعَ يَدَيْهِ فِي الدُّعَاءِ، لَمْ يَحُطَّهُمَا حَتَّى يَمْسَحَ بِهِمَا وَجْهَهُ»

قَالَ مُحَمَّدُ بْنُ المُثَنَّى فِي حَدِيثِهِ: لَمْ يَرُدَّهُمَا حَتَّى يَمْسَحَ بِهِمَا وَجْهَهُ


Tirmidhi-2853

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

இலக்கியமாக பேசுவது பற்றி வந்துள்ளவை.

2853. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மாடு தனது நாவால் (அசைத்து அசைத்து) தின்பது போன்று, தங்கள் நாவுகளை அசைத்து அசைத்து வார்த்தை ஜாலத்துடன் பேசும் ஆண்களை அல்லாஹ் வெறுக்கிறான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இப்பாடப்பொருள் தொடர்பான செய்தி ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது.


«إِنَّ اللَّهَ يَبْغَضُ البَلِيغَ مِنَ الرِّجَالِ الَّذِي يَتَخَلَّلُ بِلِسَانِهِ كَمَا تَتَخَلَّلُ البَقَرَةُ»


Tirmidhi-3577

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3577. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், “அஸ்தஃக்ஃபிருல்லாஹல்லதீ லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யல் கய்யூம், வ அதூபு இலைஹ்”

(பொருள்: நான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்புத் தேடி அவனிடமே திரும்புகின்றேன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்)

என்று மூன்று தடவை கூறினால் அவருடைய பாவங்கள் (அல்லாஹ்வால்) மன்னிக்கப்படும். அவர் போரில் புறமுதுகிட்டு ஓடியிருந்தாலும் (அதையும் மன்னிக்கப்படும்).

அறிவிப்பவர்: ஸைத் பின் பவ்லா (ரலி)…


«مَنْ قَالَ أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الحَيَّ القَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ، غُفِرَ لَهُ وَإِنْ كَانَ فَرَّ مِنْ الزَّحْفِ»


Tirmidhi-3540

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

3540. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறுகிறான்:

ஆதமின் மகனே! நீ எதுவரை என்மீது ஆதரவு வைத்து, என்னிடம் கோரிக்கை வைத்துக் கொண்டு இருப்பாயோ அதுவரை நீ எந்த நிலையில் இருந்தாலும் நான் உன்னை மன்னித்துக் கொண்டேயிருப்பேன். அதை நான் ஒரு பாரமாகக் கருதுவதில்லை.

ஆதமின் மகனே! உன்னுடைய பாவங்கள் வானத்தை எட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டாலும் பின்னரும், நீ என்னிடம் மீண்டு மன்னிப்புக் கேட்டால், நான் உன்னை மன்னிக்கவே செய்வேன். அதை நான் ஒரு பாரமாகக் கருதுவதில்லை.

ஆதமின் மகனே! நீ பூமியை நிரப்பும் அளவுக்கு பாவங்கள் செய்து விட்ட பிறகும் கூட, எனக்கு இணை வைக்காத நிலையில் என்னிடம் மீண்டுவந்தால் அப்போதும் உன்னுடைய அந்த அளவிற்கான பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கவே செய்வேன்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இந்தச் செய்தியை இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே நாம் அறிகிறோம்.


قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: يَا ابْنَ آدَمَ إِنَّكَ مَا دَعَوْتَنِي وَرَجَوْتَنِي غَفَرْتُ لَكَ عَلَى مَا كَانَ فِيكَ وَلَا أُبَالِي، يَا ابْنَ آدَمَ لَوْ بَلَغَتْ ذُنُوبُكَ عَنَانَ السَّمَاءِ ثُمَّ اسْتَغْفَرْتَنِي غَفَرْتُ لَكَ، وَلَا أُبَالِي، يَا ابْنَ آدَمَ إِنَّكَ لَوْ أَتَيْتَنِي بِقُرَابِ الأَرْضِ خَطَايَا ثُمَّ لَقِيتَنِي لَا تُشْرِكُ بِي شَيْئًا لَأَتَيْتُكَ بِقُرَابِهَا مَغْفِرَةً


Tirmidhi-1932

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1932.


«لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثٍ، يَلْتَقِيَانِ فَيَصُدُّ هَذَا وَيَصُدُّ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلَامِ»


Tirmidhi-2318

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2318. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனக்கு அவசியமில்லாத வீணானவற்றை விட்டுவிடுவது அவர் இஸ்லாத்தை அழகாக கடைப்பிடிக்கிறார் என்பதற்கான அடையாளமாகும்.

அறிவிப்பவர்: அலீ பின் ஹுஸைன் (ரஹ்)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவரின் பல மாணவர்கள் இவ்வாறே ஸுஹ்ரீ —> அலீ பின் ஹுஸைன் பின் அலீ பின் அபூதாலிப் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக அறிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியே நம்முடைய பார்வையில் (ஹதீஸ் எண்-2317 இல் இடம்பெற்றுள்ள) அபூஸலமா (ரஹ்) —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வரும் செய்தியை விட மிகச் சரியானதாகும்.

அலீ பின் ஹுஸைன் (ரஹ்) அவர்கள், அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்களின் காலத்தை அடையவில்லை.


«إِنَّ مِنْ حُسْنِ إِسْلَامِ المَرْءِ تَرْكَهُ مَا لَا يَعْنِيهِ»


Tirmidhi-2317

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2317. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனக்கு அவசியமில்லாத வீணானவற்றை விட்டுவிடுவது அவர் இஸ்லாத்தை அழகாக கடைப்பிடிக்கிறார் என்பதற்கான அடையாளமாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்திலுள்ள செய்தியாகும். இந்தச் செய்தி அபூஸலமா (ரஹ்) அவர்கள் வழியாக இந்த அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.


«مِنْ حُسْنِ إِسْلَامِ المَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ»


Next Page » « Previous Page