Category: திர்மிதீ

Tirmidhi-370

ஹதீஸின் தரம்: Pending

370. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகையில் கொட்டாவி விடுவது ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்தட்டும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«التَّثَاؤُبُ فِي الصَّلَاةِ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَكْظِمْ مَا اسْتَطَاعَ»،


Tirmidhi-2747

ஹதீஸின் தரம்: Pending

2747. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, ஒருவர் தும்மியவுடன் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு (‘யர்ஹமுக்கல்லாஹ் – அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்’ என்று) மறுமொழி கூறுவது அவசியமாகும்.

உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்தட்டும். (கட்டுப்படுத்தாமல்) ஹாஹ் ஹாஹ் என்று கூறவேண்டாம். ஏனெனில், ஹாஹ் ஹாஹ் என்று கொட்டாவிவிட்டால் ஷைத்தான் சிரிக்கிறான்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


إِنَّ اللَّهَ يُحِبُّ العُطَاسَ وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا عَطَسَ أَحَدُكُمْ فَقَالَ: الحَمْدُ لِلَّهِ فَحَقٌّ عَلَى كُلِّ مَنْ سَمِعَهُ أَنْ يَقُولَ: يَرْحَمُكَ اللَّهُ، وَأَمَّا التَّثَاؤُبُ، فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ وَلَا يَقُولَنَّ: هَاهْ هَاهْ، فَإِنَّمَا ذَلِكَ مِنَ الشَّيْطَانِ يَضْحَكُ مِنْهُ


Tirmidhi-2746

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2746.


العُطَاسُ مِنَ اللَّهِ وَالتَّثَاؤُبُ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَضَعْ يَدَهُ عَلَى فِيهِ، وَإِذَا قَالَ: آهْ آهْ فَإِنَّ الشَّيْطَانَ يَضْحَكُ مِنْ جَوْفِهِ، وَإِنَّ اللَّهَ يُحِبُّ العُطَاسَ وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا قَالَ الرَّجُلُ: آهْ آهْ إِذَا تَثَاءَبَ فَإِنَّ الشَّيْطَانَ يَضْحَكُ فِي جَوْفِهِ


Tirmidhi-2238

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2238. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உலகஅழிவு நாளில்) மாபெரும் யுத்தம், கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் கைப்பற்றப்படுவது, தஜ்ஜால் வெளிப்படுவது (போன்ற இம்மூன்றும்)  ஏழுமாத (கால)த்திற்குள் நடைப்பெறும்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)


«المَلْحَمَةُ العُظْمَى، وَفَتْحُ القُسْطَنْطِينِيَّةِ، وَخُرُوجُ الدَّجَّالِ فِي سَبْعَةِ أَشْهُرٍ»


Tirmidhi-2459

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2459. யார் தன்னை சுயபரிசோதனை செய்துக் கொண்டு மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்விற்காக நற்செயல் செய்கிறாரோ அவர் தான் அறிவாளி. யார் தன் மன இச்சைப்படி வாழ்ந்து, (அல்லாஹ் தனக்கு சொர்க்கத்தை தந்துவிடுவான் என்று) அல்லாஹ்வின் மீது மேலெண்ணம் கொள்கிறாரோ அவர் அறிவற்றவர்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)


«الكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ المَوْتِ، وَالعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا وَتَمَنَّى عَلَى اللَّهِ»


Tirmidhi-3306

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3306. ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்களின் உறுதிப் பிரமாணம் (பைஅத்) தொடர்பாகக் கூறினார்கள்:

(பெண்களிடம் உறுதிப் பிரமாணம் வாங்கியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நபியே! இறைநம்பிக்கைக் கொண்ட பெண்கள் உங்களிடம் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்கமாட்டார்கள்; திருடமாட்டார்கள்; தங்கள் குழந்தைகளைக் கொலை செய்யமாட்டார்கள்; தாங்களாக அவதூறு இட்டுக்கட்டி பரப்பமாட்டார்கள்; நற்செயலில் உங்களுக்கு மாறுசெய்யமாட்டார்கள் என்று உறுதிமொழி அளித்தால் அவர்களிடம் உறுதிமொழி வாங்குங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 60:12 வது) வசனத்தில் அல்லாஹ் ஆணையிட்ட நிபந்தனை (வாசகங்களைத்) தவிர வேறெதையும் அப்பெண்களிடமிருந்து (உறுதிமொழியாகப்) பெறவில்லை.

மஃமர் (ரஹ்)  கூறியதாவது:

தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை, அவர்களுக்குத் சொந்தமான பெண்களை (துணைவியரை)த் தவிர வேறெந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை.


مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْتَحِنُ إِلَّا بِالآيَةِ الَّتِي قَالَ اللَّهُ {إِذَا جَاءَكَ المُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ} [الممتحنة: 12] الآيَةَ

قَالَ مَعْمَرٌ: فَأَخْبَرَنِي ابْنُ طَاوُوسٍ، عَنْ أَبِيهِ، قَالَ: «مَا مَسَّتْ يَدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَ امْرَأَةٍ إِلَّا امْرَأَةً يَمْلِكُهَا»


Tirmidhi-2688

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2688. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள். (அதனால் நீங்கள் நேசம் கொள்ளலாம்)

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَدْخُلُوا الجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا، أَلَا أَدُلُّكُمْ عَلَى أَمْرٍ إِذَا أَنْتُمْ فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ؟ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ»


Tirmidhi-2508

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2508. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“உங்களுக்கிடையே பகை ஏற்படுவதை விட்டு எச்சரிக்கை செய்கிறேன். அது மார்க்கத்தை சிதைத்து விடும்”.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِيَّاكُمْ وَسُوءَ ذَاتِ البَيْنِ فَإِنَّهَا الحَالِقَةُ»


Tirmidhi-2509

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2509. நோன்பு வைத்தல், தொழுதல், தர்மம் செய்தல் போன்றவற்றிற்கு கிடைக்கும் அந்தஸ்தைவிட சிறந்த ஒரு செயலை நான் உங்களுக்கு கூறட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘ஆம், கூறுங்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என நபித்தோழர்கள் பதில் கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அது  ‘உங்களுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதுதான். உங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது மார்க்கத்தை சிதைத்து விடும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)


«أَلَا أُخْبِرُكُمْ بِأَفْضَلَ مِنْ دَرَجَةِ الصِّيَامِ وَالصَّلَاةِ وَالصَّدَقَةِ»، قَالُوا: بَلَى، قَالَ: «صَلَاحُ ذَاتِ البَيْنِ، فَإِنَّ فَسَادَ ذَاتِ البَيْنِ هِيَ الحَالِقَةُ»


Next Page » « Previous Page