2695.
«لَيْسَ مِنَّا مَنْ تَشَبَّهَ بِغَيْرِنَا، لَا تَشَبَّهُوا بِاليَهُودِ وَلَا بِالنَّصَارَى، فَإِنَّ تَسْلِيمَ اليَهُودِ الإِشَارَةُ بِالأَصَابِعِ، وَتَسْلِيمَ النَّصَارَى الإِشَارَةُ بِالأَكُفِّ»
2695.
«لَيْسَ مِنَّا مَنْ تَشَبَّهَ بِغَيْرِنَا، لَا تَشَبَّهُوا بِاليَهُودِ وَلَا بِالنَّصَارَى، فَإِنَّ تَسْلِيمَ اليَهُودِ الإِشَارَةُ بِالأَصَابِعِ، وَتَسْلِيمَ النَّصَارَى الإِشَارَةُ بِالأَكُفِّ»
பாடம்: 39
சபையிலிருந்து எழும் போது சொல்லும் (இறைத்துதிச்) சொற்கள்.
3433. அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:
யார் ஒரு சபையில் அமர்ந்து அதில் பயனற்ற (பாவப்) பேச்சுகளை அதிகம் பேசிவிட்டால், அந்நிலையில் அந்தச் சபையிலிருந்து அவர் எழும் முன்பாக, “ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக்க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்த்த அஸ்தஃக்ஃபிருக்க வஅத்தூபு இலைக்க)
(பொருள்: யா அல்லாஹ்! உன்னைத் தூயவன் என்று போற்றுகின்றேன் உன்னைப் புகழ்கின்றேன்; உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சான்று கூறுகின்றேன். உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகின்றேன். உன்னிடமே பாவமீட்சி பெற்று திரும்புகின்றேன்)
என்று கூறினால் அந்தச் சபையில் இருக்கும் போது ஏற்பட்ட பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்பட்டுவிடும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான நபிமொழி அபூபர்ஸா (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(மேற்கண்ட அபூஹுரைரா (ரலி) வழியாக ஸுஹைல் பின் ஸாலிஹ் அறிவிக்கும்) இந்த செய்தி ஹஸன் ஸஹீஹ் ஃகரீப் எனும் தரத்தில் அமைந்ததாகும். ஸுஹைல் பின் ஸாலிஹ் வழியாக இந்த அறிவிப்பாளர்தொடரையே நாம் அறிகிறோம்.
مَنْ جَلَسَ فِي مَجْلِسٍ فَكَثُرَ فِيهِ لَغَطُهُ، فَقَالَ قَبْلَ أَنْ يَقُومَ مِنْ مَجْلِسِهِ ذَلِكَ: سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ، إِلَّا غُفِرَ لَهُ مَا كَانَ فِي مَجْلِسِهِ ذَلِكَ
1097. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும்; இரண்டாவது நாள் கொடுப்பது (ஸுன்னத்) நபிவழியாகும்; மூன்றாவது நாள் கொடுப்பது விளம்பரமாகும்.
யார் விளம்பரத்திற்காக செய்கிறாரோ (அவர் உள்நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த செய்தியை இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடமிருந்து ஸியாத் பின் அப்துல்லாஹ் என்பவர் மட்டுமே நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார் என்று அறிகிறோம். இவர் அதிகமாக அரிதான செய்திகளையும், முன்கரான செய்திகளையும் அறிவிப்பவர் ஆவார்.
வகீஃ பின் அல்ஜர்ராஹ் அவர்கள், ஸியாத் பின் அப்துல்லாஹ் சிறப்பிற்குரிய மனிதர் என்றாலும் ஹதீஸில் பொய் சொல்பவர் என்று கூறியதாக முஹம்மது பின் உக்பா அவர்கள் தெரிவித்ததாக முஹம்மது பின் இஸ்மாயீல் (புகாரீ இமாம்) கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
«طَعَامُ أَوَّلِ يَوْمٍ حَقٌّ، وَطَعَامُ يَوْمِ الثَّانِي سُنَّةٌ، وَطَعَامُ يَوْمِ الثَّالِثِ سُمْعَةٌ، وَمَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ»
3381.
«مَا مِنْ أَحَدٍ يَدْعُو بِدُعَاءٍ إِلَّا آتَاهُ اللَّهُ مَا سَأَلَ أَوْ كَفَّ عَنْهُ مِنَ السُّوءِ مِثْلَهُ، مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ»
3573.
«مَا عَلَى الأَرْضِ مُسْلِمٌ يَدْعُو اللَّهَ بِدَعْوَةٍ إِلَّا آتَاهُ اللَّهُ إِيَّاهَا أَوْ صَرَفَ عَنْهُ مِنَ السُّوءِ مِثْلَهَا مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ»، فَقَالَ رَجُلٌ مِنَ القَوْمِ: إِذًا نُكْثِرُ، قَالَ: «اللَّهُ أَكْثَرُ»
243.
كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ قَالَ: «سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ»
242.
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ بِاللَّيْلِ كَبَّرَ،ثُمَّ يَقُولُ: «سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ»، ثُمَّ يَقُولُ: «اللَّهُ أَكْبَرُ كَبِيرًا»، ثُمَّ يَقُولُ: «أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ العَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، مِنْ هَمْزِهِ وَنَفْخِهِ وَنَفْثِهِ»
3414.
مَنْ تَعَارَّ مِنَ اللَّيْلِ، فَقَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، وَسُبْحَانَ اللَّهِ، وَالحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، ثُمَّ قَالَ: رَبِّ اغْفِرْ لِي – أَوْ قَالَ: ثُمَّ دَعَا – اسْتُجِيبَ لَهُ، فَإِنْ عَزَمَ وَتَوَضَّأَ، ثُمَّ صَلَّى قُبِلَتْ صَلَاتُهُ
பாடம்:
நிபந்தனைகளை எழுதிக்கொள்வது.
1216. அப்துல் மஜீத் பின் வஹ்ப் என்பார் அறிவிக்கின்றார்:
அத்தாஉ பின் காலித் (ரலி) அவர்கள் என்னிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு எழுதிக் கொடுத்த ஒரு கடிதத்தை உனக்கு நான் படித்துக் காட்டட்டுமா? என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அவர் ஒரு ஏட்டை வெளியில் எடுத்தார்.
அதில் (பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது)
“அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அத்தாஉ பின் காலித் இந்த அடிமையை விலைக்கு வாங்கிக் கொண்டார்; இது ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிடம் செய்த வியாபாரமாகும்; இதில் எந்தக் குறையுமில்லை; இவரிடம் கெட்ட குணமில்லை, குற்றம் புரியும் தன்மையுமில்லை.
قَالَ لِي العَدَّاءُ بْنُ خَالِدِ بْنِ هَوْذَةَ: أَلَا أُقْرِئُكَ كِتَابًا كَتَبَهُ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: قُلْتُ: بَلَى، فَأَخْرَجَ لِي كِتَابًا: «هَذَا مَا اشْتَرَى العَدَّاءُ بْنُ خَالِدِ بْنِ هَوْذَةَ مِنْ مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، اشْتَرَى مِنْهُ عَبْدًا أَوْ أَمَةً، لَا دَاءَ وَلَا غَائِلَةَ وَلَا خِبْثَةَ، بَيْعَ المُسْلِمِ المُسْلِمَ»
பாடம்:
ஹஜருல் அஸ்வத் எனும் கல் பற்றி வந்துள்ளவை.
961. மறுமை நாளில் அல்லாஹ் கல்லை எழுப்புவான். அதற்குப் பார்க்கின்ற கண்கள் இருக்கும். பேசுகின்ற நாவு இருக்கும். உண்மையுடன் அதை முத்தமிட்டவருக்கு அது சாட்சி கூறும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الحَجَرِ: «وَاللَّهِ لَيَبْعَثَنَّهُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ لَهُ عَيْنَانِ يُبْصِرُ بِهِمَا، وَلِسَانٌ يَنْطِقُ بِهِ، يَشْهَدُ عَلَى مَنْ اسْتَلَمَهُ بِحَقٍّ»
சமீப விமர்சனங்கள்