தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2459

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

யார் தன்னை சுயபரிசோதனை செய்துக் கொண்டு மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்விற்காக நற்செயல் செய்கிறாரோ அவர் தான் அறிவாளி. யார் தன் மன இச்சைப்படி வாழ்ந்து, (அல்லாஹ் தனக்கு சொர்க்கத்தை தந்துவிடுவான் என்று) அல்லாஹ்வின் மீது மேலெண்ணம் கொள்கிறாரோ அவர் அறிவற்றவர்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)

(திர்மதி: 2459)

بَابٌ

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مَرْيَمَ، ح وحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَوْنٍ قَالَ: أَخْبَرَنَا ابْنُ المُبَارَكِ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ ضَمْرَةَ بْنِ حَبِيبٍ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

«الكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ المَوْتِ، وَالعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا وَتَمَنَّى عَلَى اللَّهِ»

هَذَا حَدِيثٌ حَسَنٌ «.» وَمَعْنَى قَوْلِهِ: مَنْ دَانَ نَفْسَهُ يَقُولُ حَاسَبَ نَفْسَهُ فِي الدُّنْيَا قَبْلَ أَنْ يُحَاسَبَ يَوْمَ القِيَامَةِ ” وَيُرْوَى عَنْ عُمَرَ بْنِ الخَطَّابِ، قَالَ: ” حَاسِبُوا أَنْفُسَكُمْ قَبْلَ أَنْ تُحَاسَبُوا، وَتَزَيَّنُوا لِلْعَرْضِ الأَكْبَرِ، وَإِنَّمَا يَخِفُّ الحِسَابُ يَوْمَ القِيَامَةِ عَلَى مَنْ حَاسَبَ نَفْسَهُ فِي الدُّنْيَا وَيُرْوَى عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، قَالَ: «لَا يَكُونُ العَبْدُ تَقِيًّا حَتَّى يُحَاسِبَ نَفْسَهُ كَمَا يُحَاسِبُ شَرِيكَهُ مِنْ أَيْنَ مَطْعَمُهُ وَمَلْبَسُهُ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2459.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2396.




إسناد ضعيف فيه أبو بكر بن أبي مريم الغساني وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூபக்ர் பின் அபூமர்யம் பற்றி நினைவாற்றல் மோசமானவர், பலவீனமானவர், கைவிடப்பட்டவர் என ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.4 / 490 )
  • தன் வீட்டில் நடந்த ஒரு திருட்டினால் மூளை குழம்பிவிட்டார் என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1 / 1116 )

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : முஸ்னத் தயாலிஸீ-1218 , அஹ்மத்-17123 , திர்மிதீ-2459 , இப்னு மாஜா-4260 , முஸ்னத் பஸ்ஸார்-3489 , அல்முஃஜமுல் கபீர்-7141 , 7143 , அல்முஃஜமுஸ் ஸகீர்-863 , ஹாகிம்-191 , 7639 , குப்ரா பைஹகீ-6514 ,

2 comments on Tirmidhi-2459

  1. ஹதீஸ்களைத் தரம் பிரித்து மக்களுக்கு அறிவிக்கும் உங்களின் இந்த மகத்தான சேவையை அல்லாஹ் பொருந்திக் கொண்டு, பலப்பல தலைமுறைகளாக இதைத் தொடரச் செய்வானாக! இதற்காக உழைக்கும் அனைவருக்கும் ஈருலக வெற்றியைத் தந்தருள்வானாக!

    1. இறைவா! உம்மு ஹுரைராவின் இந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக!

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.