ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி ✔
பாடம்:
“அந்நூர்-அந்த ஒளி” எனும் அத்தியாயத்தின் வசனங்கள்.
3177. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மதீனாவில்) மர்ஸத் பின் அபூமர்ஸத் (ரலி) எனும் ஒரு மனிதர் இருந்தார். அவர் மக்காவிலிருந்து மதீனாவிற்குக் கைதிகளை (இரவோடு இரவாக) தூக்கி வந்து சேர்ப்பவராகவும் இருந்தார்.
(அவர் கூறுகிறார்):
மக்காவில் அனாக் எனும் (பெயரில்) விபச்சாரி ஒருத்தி இருந்தாள். அவள் (நான் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்பு) என்னுடைய காதலியாக இருந்தாள். நான் ஒரு மனிதரை இவ்வாறு அழைத்து செல்வதாக வாக்குறிதி அளித்திருந்தேன்.
(எனவே அவரை அழைப்பதற்காக நான் சென்றேன். அது இரவு நேரம் என்பதால்) இரவில் நிலவின் வெளிச்சம் இருக்கும்போது மக்காவின் சுவர் ஒன்றின் நிழலில் ஒதுங்கினேன். அப்போது அனாக் என்பவள் சுவரின் ஓரத்தில் என் நிழல் தெரியவே என்னை நெருங்கி வந்து என்னை அடையாளம் கண்டுவிட்டாள். அவள், மர்ஸதா? என்று கேட்க, நான், ஆம் என்று கூறினேன். உடனே அவள், மர்ஸதே! வருக, வருக! இவ்விரவில் என்னிடம் தங்கிவிட்டுச் செல்வீராக!” என்று கூறினாள். (அப்போது நான் அவளிடம்) “அனாக்! திண்ணமாக அல்லாஹ் விபச்சாரத்தைத் தடை செய்துவிட்டான்” என்று கூறினேன். உடனே அவள், “கூடாரங்களில் இருப்போரே! (மக்களே) இவர் உங்களுடைய கைதிகளை மக்காவிலிருந்து மதீனாவிற்குக் கொண்டுசெல்பவர்”
كَانَ رَجُلٌ يُقَالُ لَهُ: مَرْثَدُ بْنُ أَبِي مَرْثَدٍ، وَكَانَ رَجُلًا يَحْمِلُ الأَسْرَى مِنْ مَكَّةَ حَتَّى يَأْتِيَ بِهِمُ المَدِينَةَ، قَالَ: وَكَانَتْ امْرَأَةٌ بَغِيٌّ بِمَكَّةَ يُقَالُ لَهَا: عَنَاقٌ وَكَانَتْ صَدِيقَةً لَهُ، وَإِنَّهُ كَانَ وَعَدَ رَجُلًا مِنْ أُسَارَى مَكَّةَ يَحْمِلُهُ، قَالَ: فَجِئْتُ حَتَّى انْتَهَيْتُ إِلَى ظِلِّ حَائِطٍ مِنْ حَوَائِطِ مَكَّةَ فِي لَيْلَةٍ مُقْمِرَةٍ، قَالَ: فَجَاءَتْ عَنَاقٌ فَأَبْصَرَتْ سَوَادَ ظِلِّي بِجَنْبِ الحَائِطِ فَلَمَّا انْتَهَتْ إِلَيَّ عَرَفَتْ، فَقَالَتْ: مَرْثَدٌ؟ فَقُلْتُ: مَرْثَدٌ. فَقَالَتْ: مَرْحَبًا وَأَهْلًا هَلُمَّ فَبِتْ عِنْدَنَا اللَّيْلَةَ. قَالَ: قُلْتُ: يَا عَنَاقُ حَرَّمَ اللَّهُ الزِّنَا، قَالَتْ: يَا أَهْلَ الخِيَامِ، هَذَا الرَّجُلُ يَحْمِلُ أُسَرَاءَكُمْ، قَالَ: فَتَبِعَنِي ثَمَانِيَةٌ وَسَلَكْتُ الخَنْدَمَةَ فَانْتَهَيْتُ إِلَى كَهْفٍ أَوْ غَارٍ فَدَخَلْتُ، فَجَاءُوا حَتَّى قَامُوا عَلَى رَأْسِي فَبَالُوا فَظَلَّ بَوْلُهُمْ عَلَى رَأْسِي وَعَمَّاهُمُ اللَّهُ عَنِّي، قَالَ: ثُمَّ رَجَعُوا وَرَجَعْتُ إِلَى صَاحِبِي فَحَمَلْتُهُ وَكَانَ رَجُلًا ثَقِيلًا حَتَّى انْتَهَيْتُ إِلَى الإِذْخِرِ، فَفَكَكْتُ عَنْهُ أَكْبُلَهُ فَجَعَلْتُ أَحْمِلُهُ وَيُعْيِينِي حَتَّى قَدِمْتُ المَدِينَةَ، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَنْكِحُ عَنَاقًا؟ فَأَمْسَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَرُدَّ عَلَيَّ شَيْئًا حَتَّى نَزَلَتْ الزَّانِي لَا يَنْكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لَا يَنْكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا مَرْثَدُ الزَّانِي لَا يَنْكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لَا يَنْكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ، فَلَا تَنْكِحْهَا»
சமீப விமர்சனங்கள்