பலவீனமான (ளயீஃபான) ஹதீஸ்கள் என்றால் என்ன?
நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு உறுதியான ஆதாரம் இல்லாத ஹதீஸ்கள், மற்றும் நபியவர்கள் கூறினார்களா? இல்லையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய ஹதீஸ்களே “பலவீனமான ஹதீஸ்கள்” எனப்படும். அந்தச் சந்தேகம் பல காரணங்களால் ஏற்படலாம். அறிவிப்பாளர்களில் எவரேனும் நன்னடத்தை அற்றவராகவோ, நினைவாற்றல் குறைந்தவராகவோ, இரண்டு அறிவிப்பாளர்களுக்கிடையில் சந்திப்பு இல்லாமலிருந்தாலோ அத்தகைய ஹதீஸ்களை “ளயீஃபான ஹதீஸ்கள்” என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் நிர்ணயித்துள்ளனர். சில வேளைகளில் ஒரு குறிப்பிட்ட ஹதீஸ் ஆதாரபூர்வமானதா? அல்லது ளயீஃபானதா? எனத் தீர்மானிப்பதில் அறிஞர்கள் கருத்து வேறுபாடுகளைத் தெரிவிப்பதும் உண்டு.
ஹதீஸ் கலை அறிஞர்கள், ஹதீஸ்களை தரத்தின் அடிப்படையில் நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர்.
ஆதாரபூர்வமானவை:
1) ஸஹீஹ் – சரியானவை
2) ஹஸன் – அழகானவை
ஆதாரபூர்வமற்றவை:
3) ளயீஃப் – பலவீனமானவை
4) மவ்ளூஃ – இட்டுக்கட்டப்பட்டவை / பொய்யானவை
ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும்.
(நபியே!) நீர் கூறுவீராக! “நீங்கள் (உங்கள் சொல்லில்) உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்.” (அல்-குர்ஆன் 2:111)
(நபியே!) நீர் கூறுவீராக! “இதுதான் எனது வழியாகும். நான் அல்லாஹ்வின் பக்கம் (உங்களை) தெளிவான (ஆதாரம் மற்றும்) அறிவின் அடிப்படையில் அழைக்கிறேன். நானும் என்னைப் பின்பற்றியவர்களும் (இவ்வாறு அழைக்கின்றோம்).” (அல்-குர்ஆன் 12:108)
பலவீனமான ஹதீஸ்களை பின்பற்றவது வழிகேடு!
இஸ்லாத்தின் எதிரிகளாலும், சுயநலவாதிகளாலும், பொய்யைக் கூறியாவது நல்ல விடயங்களைப் பரப்ப வேண்டும் என நினைத்த மடையர்களாலும் மார்க்கம் என்ற பெயரில் நபியவர்களின் பெயரால் நபியவர்கள் கூறாத பல ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டு பரப்பப்பட்டன. இது தொடர்பான, நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகளைப் பாருங்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் மீது யார் இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும். (அறிவிப்பவர்: அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி); நூல்: புகாரி-110, முஸ்லிம்)
ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.” (அறிவிப்பவர்: அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) நூல்: முஸ்லிம்-6)
மேலும் உங்களுக்கு பொய்யை எச்சரிக்கிறேன். ஏனெனில் பொய்யானது பாவத்தின் பக்கம் இட்டுச் செல்கிறது. பாவமோ நரகத்தின் பக்கம் இட்டுச் செல்லக் கூடியதாயிருக்கிறது. (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) நூல்: புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம்-4721)
முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். மேலும் (சொல்லிலும், செயலிலும்) உண்மையாளர்களுடன் சேர்ந்து இருங்கள். (அல்-குர்ஆன் 9:119)
ளயீஃபான ஹதீஸ்களின் வகைகள்:
- மவ்ளூவு
- மத்ரூக்
- முஅன்அன்
- முதல்லஸ்
- முஅல்லக்
- முன்கதிஃ
- முஃளல்
- முர்ஸல்
- மக்தூஃ
- மஜ்ஹூல்-அறியப்படாதவர்
- தத்லீஸ்
- முழ்தரிப்
- முஸஹ்ஹஃப்
- மக்லூப்
- முத்ரஜ்
- முஅல்லல்
- முன்கர், மஃரூஃப்
- மவ்கூஃப்
- ஷாத்
- அல்மசீது ஃபீ முத்தஸிலில் அஸானித்
- அர்முர்ஸலுல் ஹஃபிய்யு
சமீப விமர்சனங்கள்