தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Dalail-Annubuwwah-Bayhaqi-2735

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

அலீ (ரலி) அவர்களின் காலத்தில் நியமிக்கப்படும் இரு சட்டஆலோசகர்களைப் பற்றிய (முன்னறிவிப்பு) செய்தி.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூஇஸ்ராயீல் மக்கள் (தங்களுக்குள்) கருத்துவேறுபாடு கொண்டனர். எனவே அவர்கள் இரு சட்டஆலோசகர்களை நியமித்தனர். அவ்விரு சட்டஆலோசகர்களும்  வழிகெட்டு, மக்களையும் வழிகெடுத்தனர்.

இதுபோன்று என்னுடைய இந்தச் சமுதாயமும் கருத்துவேறுபாடு கொள்வர். அவர்கள் இரு சட்டஆலோசகர்களை நியமிப்பார்கள். அவ்விரு சட்டஆலோசகர்களும் வழிகெட்டு, தங்களைப் பின்பற்றுவோரையும் வழிகெடுப்பார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

(dalail-annubuwwah-bayhaqi-2735: 2735)

بَابُ مَا جَاءَ فِي إِخْبَارِهِ عَنِ الْحَكَمَيْنِ اللَّذَيْنِ بُعِثَا فِي زَمَانِ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُبَيْدٍ الصَّفَّارُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ زَكَرِيَّا بْنِ يَحْيَى، عَنْ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ، وَحَبِيبِ بْنِ يَسَارٍ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، قَالَ: إِنِّي لَأَمْشِي مَعَ عَلِيٍّ بِشَطِّ الْفُرَاتِ. فَقَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِنَّ بَنِي إِسْرَائِيلَ اخْتَلَفُوا فَلَمْ يَزَلِ اخْتِلَافُهُمْ بَيْنَهُمْ حَتَّى بَعَثُوا حَكَمَيْنِ فَضَلَّا وَأَضَلَّا، وَإِنَّ هَذِهِ الْأُمَّةَ سَتَخْتَلِفُ فَلَا يَزَالُ اخْتِلَافُهُمْ بَيْنَهُمْ حَتَّى يَبْعَثُوا حَكَمَيْنِ ضَلَّا وَضَلَّ مَنِ اتَّبَعْهُمَا»


Dalail-Annubuwwah-Bayhaqi-Tamil-.
Dalail-Annubuwwah-Bayhaqi-TamilMisc-.
Dalail-Annubuwwah-Bayhaqi-Shamila-.
Dalail-Annubuwwah-Bayhaqi-Alamiah-.
Dalail-Annubuwwah-Bayhaqi-JawamiulKalim-2735.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-16141-ஸகரிய்யா பின் யஹ்யா அல்ஹிம்யரீ என்பவர் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் ليس بشيئ லைஸ பி ஷைஃ என்று கூறியுள்ளார். இதன் கருத்து குறைந்த ஹதீஸ் உடையவர் என்றும் பொருள் கொள்ளலாம். இவர் ஒரு பொருட்டே அல்ல என்றும் பொருள் கொள்ளலாம்.
  • ஸகரிய்யா பின் யஹ்யா அல்பத்தீ என்பவரை இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் பலமானவர் அல்ல என்று கூறியுள்ளார்.
  • ஸகரிய்யா பின் யஹ்யா அல்ஹிம்யரீ என்பவரும் ஸகரிய்யா பின் யஹ்யா அல்பத்தீ என்பவரும் ஒருவரே என்று நான் கருதுகிறேன் என தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: தாரீகுல் இஸ்லாம்-3/865)

எனவே இவர் பலவீனமானவர் ஆவார்.

மேலும் பார்க்க: இப்னு மாஜா-3992 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.