ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
இஸ்லாத்தில் முதல் ஷஹீத் (உயிர்த் தியாகி) அம்மார் (ரலி) அவர்களின் தாயார் ஸுமைய்யா (ரலி) ஆவார். அவரின் மர்ம உறுப்பில் ஈட்டியை குத்தி கொன்றான் அபூஜஹ்ல்.
அறிவிப்பவர்: முஜாஹித் (ரஹ்)
(dalail-annubuwwah-bayhaqi-614: 614)أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ بْنُ بِشْرَانَ، بِبَغْدَادَ قَالَ: أَخْبَرَنَا أَبُو عَمْرِو بْنُ السَّمَّاكَ قَالَ: حَدَّثَنَا حَنْبَلُ بْنُ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنِي أَبُو عَبْدِ اللهِ يُرِيدُ أَحْمَدَ بْنَ حَنْبَلٍ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ قَالَ:
«أَوَّلُ شَهِيدٍ كَانَ فِي الْإِسْلَامِ اسْتُشْهِدَ أُمُّ عَمَّارٍ سُمَيَّةُ طَعَنَهَا أَبُو جَهْلٍ بِحَرْبَةٍ فِي قُبُلِهَا»
Dalail-Annubuwwah-Bayhaqi-Tamil-.
Dalail-Annubuwwah-Bayhaqi-TamilMisc-.
Dalail-Annubuwwah-Bayhaqi-Shamila-.
Dalail-Annubuwwah-Bayhaqi-Alamiah-.
Dalail-Annubuwwah-Bayhaqi-JawamiulKalim-614.
- இந்த சம்பவத்தை அறிவிப்பவர் முஜாஹித் (ரஹ்) ஆவார். இவர் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர் இல்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த சம்பவத்தை இவரால் அறிந்து கொள்ள முடியாது. எனவே இந்த செய்தி முர்ஸல் என்பதால் பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
- முஜாஹித் அவர்களின் முர்ஸலான செய்திகளை ஏற்கலாம் என்றும் சில ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.
மேலும் பார்க்க: இப்னு ஸஃத்-3655 .
சமீப விமர்சனங்கள்