தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tabaqatul-Kubra-Ibn-Sahd-3655

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில்) தாங்கள் இஸ்லாத்தை ஏற்றவர்கள் என்று பகிரங்கமாக அறிவித்தவர்கள் ஏழுபேர் ஆவர். அவர்கள்:-

1 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்.

2 . அபூபக்ர் (ரலி)

3 . பிலால் (ரலி)

4 . கப்பாப் (ரலி)

5 . ஸுஹைப் (ரலி)

6 . அம்மார் (ரலி)

7 . அம்மாரின் தாயார் ஸுமைய்யா (ரலி)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்கள் பாதுகாப்பாக இருந்தார். அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அவரின் குடும்பத்தினர் பாதுகாப்பாக இருந்தனர். ஆனால் மற்றவர்களை இணைவைப்பாளர்கள் பிடித்து அவர்களுக்கு இரும்புச் சட்டைகளை அணிவித்து வெயிலில் கிடத்தி சுட்டெரித்தனர். இதனால் வேதனையைத் தாங்கமுடியாமல் இவர்கள், (இனி யாரும் இஸ்லாத்தை வெளிப்படுத்தக்கூடாது எனும் இணைவைப்பாளர்களின் மிரட்டலுக்கு) இணங்கிப் போயினர்…

…அபூஜஹ்ல் வந்து ஸுமைய்யா (ரலி) அவர்களை கெட்டவார்த்தையில் திட்டினான். பிறகு அவரை ஈட்டியால் குத்திக் கொன்றான். எனவே தான் இஸ்லாத்தில் முதல் ஷஹீத் (உயிர்த் தியாகி) ஸுமைய்யா (ரலி) அவர்கள் ஆவார்…

…பிலால் (ரலி) அவர்களைத் தவிர. அவர் அல்லாஹ்வின் விசயத்தில் தன் உயிரை துச்சமாகக் கருதினார். அவரை வேதனைப்படுத்துவதில் இணைவைப்பாளர்களே சோர்ந்துவிட்டனர். எனவே அவரின் கழுத்தில் கயிற்றைக் கட்டி சிறுவர்களிடம் ஒப்படைத்து மக்காவின் இரு மலைகளுக்கிடையில் அவரை கட்டிவைக்குமாறு அச்சிறுவர்களிடம் கூறினர். அப்படியிருந்தும் பிலால் (ரலி) அவர்கள், (அல்லாஹ்) ஒருவனே! (அல்லாஹ்)  ஒருவனே! என்று கூறிக் கொண்டிருப்பார்.

(tabaqatul-kubra-ibn-sahd-3655: 3655)

أَخبَرنا جَريرُ بن عَبد الحَميدِ، عَن مَنصورٍ، عَن مُجاهدٍ قالَ:

أَوَّلُ مَن أَظهَرَ الإِسلاَمَ سَبعَةٌ: رَسولُ الله صَلى الله عَليه وسَلم، وأَبو بَكرٍ، وبِلاَلٌ، وخَبّابٌ، وصُهَيبٌ، وعَمّارٌ، وسُمَيَّةُ أُمُّ عَمّارٍ. قالَ: فَأَمّا رَسولُ الله صَلى الله عَليه وسَلم فَمَنَعَهُ عَمُّهُ، وأَمّا أَبو بَكرٍ فَمَنَعَهُ قَومُهُ، وأُخِذَ الآخَرونَ فَأَلبَسوهُم أَدراعَ الحَديدِ، ثُمَّ صَهَروهُم في الشَّمس, حَتى بَلَغَ الجَهدُ مِنهُم كُلَّ مَبلَغٍ، فَأَعطَوهُم ما سَأَلوا، فَجاءَ كُلُّ رَجُلٍ مِنهُم قَومَهُ بِأَنطاع الأُدم فيها الماءُ فَأَلقَوهُم فيه، وحَمَلوا بِجَوانِبِه إِلاَّ بِلاَلاً، فَلَمّا كانَ العَشيُّ, جاء أَبو جَهلٍ فَجَعَلَ يَشتِمُ سُمَيَّةَ ويَرفُثُ، ثُمَّ طَعَنَها فَقَتَلَها، فَهيَ أَوَّلُ شَهيدٍ استُشهدَ في الإِسلاَمِ، إِلاَّ بِلاَلاً, فَإِنَّهُ هانَت عَلَيه نَفسُهُ في الله حَتى مَلّوهُ، فَجَعَلوا في عُنُقِه حَبلاً، ثُمَّ أَمَروا صِبيانَهُم أَن يَشتَدّوا بِه بَينَ أَخشَبَي مَكَّةَ، فَجَعَلَ بِلاَلٌ يَقول: أَحَدٌ أَحَدٌ.


Tabaqatul-Kubra-Ibn-Sahd-Tamil-.
Tabaqatul-Kubra-Ibn-Sahd-TamilMisc-.
Tabaqatul-Kubra-Ibn-Sahd-Shamila-3655.
Tabaqatul-Kubra-Ibn-Sahd-Alamiah-.
Tabaqatul-Kubra-Ibn-Sahd-JawamiulKalim-3514.




  • இந்த சம்பவத்தை அறிவிப்பவர் முஜாஹித் (ரஹ்) ஆவார். இவர் நபி (ஸல்)  அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர் இல்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த சம்பவத்தை இவரால் அறிந்து கொள்ள முடியாது. எனவே இந்த செய்தி முர்ஸல் என்பதால் பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
  • முஜாஹித் போன்ற சிலரின் முர்ஸலான செய்திகளை, பொதுவாக முர்ஸலான செய்திகளை சில நிபந்தனைகளின்படி ஏற்கலாம் என்று ஷாஃபிஈ இமாம் போன்றோர் கூறியுள்ளனர்.
  • யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அல்கத்தான் அவர்கள், முர்ஸலான செய்திகள் தாபிஈன்களை கவனித்து தரத்தில் வித்தியாசம் இருந்தாலும் அனைத்தும் பலவீனமானதே என்று கூறியதாக இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அவர்கள் கூறியுள்ளார்…

3 . இந்தக் கருத்தில் முஜாஹித் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-32334 , 33869 , 35763 , 36586 , 36587 , இப்னு ஸஃத்-3655 , தலாஇலுன் நுபுவ்வா-614 , அல்பிதாயா வன்னிஹாயா-3/76 …

மேலும் பார்க்க: இப்னு மாஜா-150 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.