ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு கூட்டாளிகளில் ஒருவர் தன்னுடைய தோழருக்கு மோசடி செய்யாதவரை அவர்கள் மீது அல்லாஹ்வின் கரம் இருக்கிறது. ஆனால் அவ்விருவரில் ஒருவர் மோசடி செய்தால், அவர்களை விட்டு தன் கரத்தை அல்லாஹ் அகற்றிவிடுகிறான்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஹய்யான் (ரஹ்)
(daraqutni-2934: 2934)ثنا هُبَيْرَةُ بْنُ مُحَمَّدِ بْنِ أَحْمَدَ الشَّيْبَانِيُّ , نا أَبُو مَيْسَرَةَ النَّهَاوَنْدِيُّ , نا جَرِيرٌ , عَنْ أَبِي حَيَّانَ التَّيْمِيِّ , عَنْ أَبِيهِ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يَدُ اللَّهِ عَلَى الشَّرِيكَيْنِ مَا لَمْ يَخُنْ أَحَدُهُمَا صَاحِبَهُ , فَإِذَا خَانَ أَحَدُهُمَا صَاحِبَهُ رَفَعَهَا عَنْهُمَا»
Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-2934.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-2576.
- இது முர்ஸலான, பலவீனமான செய்தி.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47153-ஹுபைரா பின் முஹம்மது யாரென அறியப்படாதவர்; மேலும் இதில் வரும் அபூமைஸரா பற்றி, இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவர் பலமானவர்கள் வழியாக அவர்கள் கூறாத செய்திகளை அறிவிப்பவர் என்று விமர்சித்துள்ளார். (நூல்: அல்மஜ்ரூஹீன் 1/444) எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க: அபூதாவூத்-3383 .
சமீப விமர்சனங்கள்