தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-3079

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஒருவர் மற்றவருக்கு) தீங்கிழைக்கவும் கூடாது. (பழிக்குப் பழி வாங்குவதில்) அதிகமாக தீங்கிழைக்கவும் கூடாது.

ஒருவர் மற்றவருக்கு தீங்கிழைத்தால் அல்லாஹ் அவருக்கு தீங்கிழைக்கிறான். ஒருவர் மற்றவருக்கு சிரமத்தை அளித்தால் அவருக்கு அல்லாஹ் சிரமத்தை அளிக்கிறான்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

(daraqutni-3079: 3079)

ثنا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ , نا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ , نا عُثْمَانُ بْنُ مُحَمَّدِ بْنِ عُثْمَانَ بْنِ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ , حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ , عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ , عَنْ أَبِيهِ , عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ , أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ:

«لَا ضَرَرَ وَلَا ضِرَارَ , مَنْ ضَارَّ ضَرَّهُ اللَّهُ , وَمَنْ شَاقَّ شَقَّ اللَّهُ عَلَيْهِ»


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-3079.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-2714.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம்

2 . இஸ்மாயீல் பின் முஹம்மத்

3 . அப்பாஸ் பின் முஹம்மத்

4 . உஸ்மான் பின் முஹம்மத்

5 . அப்துல்அஸீஸ் பின் முஹம்மத் அத்தராவர்தீ

6 . அம்ர் பின் யஹ்யா

7 . யஹ்யா பின் உமாரா (ரஹ்)

8 . அபூஸயீத் (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28202-உஸ்மான் பின் முஹம்மத் பின் ரபீஆ என்பவர் பற்றி, இவர் பலவீனமானவர் என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் கூறியுள்ளார்.
  • இவரின் செய்திகளில் பெரும்பாலும் தவறு உள்ளது என்று அப்துல்ஹக் அல்இஷ்பீலீ கூறியுள்ளார்.

(நூல்: லிஸானுல் மீஸான்-5/408…)


இந்தக் கருத்தில் வரும் அனைத்து அறிவிப்பாளர்தொடர்களிலும் விமர்சனம் உள்ளது என்று குறிப்பிட்ட அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், இந்தச் செய்தி சுமார் 10 வகையான அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இவைகளில் சிலவற்றில் மிகப் பலவீனமானவர்கள் இடம்பெறவில்லை என்பதால் அனைத்தையும் இணைத்து பார்க்கும் போது இது ஸஹீஹ் எனும் தரத்தை அடைகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நமக்கு முன்னுள்ள மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் போன்றவர்கள் இந்தச் செய்தியை ஆதாரமாக ஏற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: இர்வாஉல் ஃகலீல்-896)


1 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அம்ர் பின் யஹ்யா —> யஹ்யா பின் உமாரா (ரஹ்) —> அபூஸயீத் (ரலி) —> நபி (ஸல்)

அப்துல்அஸீஸ் பின் முஹம்மத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் உஸ்மான் பின் முஹம்மத் என்பவரின் அறிவிப்புகள்:

பார்க்க: அல்முஜாலஸது வ ஜவாஹிருல் இல்ம்-3160 , தாரகுத்னீ-3079 , ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,


  • அல்முஜாலஸது வ ஜவாஹிருல் இல்ம்-3160.

المجالسة وجواهر العلم (7/ 259)
3160 – حَدَّثَنَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ، عَنْ عُثْمَانَ بْنِ مُحَمَّدِ بْنِ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ؛ قَالَ: قَالَ رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لا ضرر وَلا ضِرَارَ، مَنْ ضَارَّ ضَرَّ اللهُ بِهِ، وَمَنْ شَاقَّ شَقَّ اللهُ عَلَيْهِ»


அப்துல்அஸீஸ் பின் முஹம்மத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்மலிக் பின் முஆத் அன்னஸீபீ… என்பவரின் அறிவிப்புகள்:

பார்க்க: அத்தம்ஹீத்-இப்னு அப்துல்பர்-20/159, அல்இஸ்தித்கார்-இப்னு அப்துல்பர்-7/190,


التمهيد لابن عبد البر (20/ 159):
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ يُوسُفَ قَالَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْمَاعِيلَ ابن الْفَرَجِ قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ حَدَّثَنَا أَبُو عَلِيٍّ الْحَسَنُ بْنُ سُلَيْمَانَ قُبَيْطَةُ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ مُعَاذٍ النَّصِيبِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى بْنُ عُمَارَةَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‌لَا ‌ضَرَرَ ‌وَلَا ‌ضِرَارَ ‌مَنْ ‌ضَارَّ ‌ضَرَّ ‌اللَّهُ ‌بِهِ وَمَنْ شَاقَّ شَقَّ اللَّهُ عَلَيْهِ


 

الاستذكار (7/ 190):
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ يُوسُفَ قَالَ حَدَّثَنِي أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْمَاعِيلَ بْنِ الْفَرَجِ قَالَ حَدَّثَنِي أَبُو عَلِيٍّ الْحَسَنُ بْنُ سُلَيْمَانَ – قُبَيْطَةُ – قَالَ حَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ مُعَاذٍ النَّصِيبِيُّ قَالَ حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى بْنِ عُمَارَةَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَا ضَرَرَ وَلَا ضِرَارَ مَنْ أَضَرَّ أَضَرَّ اللَّهُ بِهِ وَمَنْ شَاقَّ شَاقَّ اللَّهُ عَلَيْهِ

இதன் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வரும் ராவீ அப்துல்மலிக் பின் முஆத் அன்னஸீபீ என்பவர் பற்றி தகவல் இல்லை…


2 . யஹ்யா பின் உமாரா (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-2171 .


3 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


4 . இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


5 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


6 . உபதா பின் ஸாமித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


7 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


8 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


அல்அர்பஈன்-நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
எண்-32.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.