தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-3985

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஹதீஸ் எண்-3984 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

ஹுமைத் பின் அர்ரபீஃ கூறியதாவது:

ஹுமைத் பின் மாலிக் அல்லக்மீ அறியப்பட்டவர் என்பதற்கு என்ன செய்தி இருக்கிறது? என்று என்னிடம் யஸீத் பின் ஹாரூன் கேட்டார். நான் அவர் என்னுடைய பாட்டனார் என்று கூறினேன். உடனே யஸீத் அவர்கள், என்னை மகிழ்ச்சியடைச் செய்தாய்! என்னை மகிழ்ச்சியடைச் செய்தாய்! இப்போது தான் இந்த செய்தி ஹதீஸாக மாறிவிட்டது என்று கூறினார்.

(daraqutni-3985: 3985)

نا مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ عَلِيٍّ , نا حُمَيْدُ بْنُ الرَّبِيعِ , نا يَزِيدُ بْنُ هَارُونَ , أنا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ بِإِسْنَادِهِ نَحْوَهُ.

قَالَ حُمَيْدٌ: قَالَ لِي يَزِيدُ بْنُ هَارُونَ: وَأَيُّ حَدِيثٍ لَوْ كَانَ حُمَيْدُ بْنُ مَالِكٍ اللَّخْمِيُّ مَعْرُوفًا؟ , قُلْتُ: هُوَ جَدِّي , قَالَ يَزِيدُ: سَرَرْتَنِي سَرَرْتَنِي الْآنَ صَارَ حَدِيثًا


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-3985.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-3497.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14215-ஹுமைத் பின் அர்ரபீஃ பற்றி சிலர் பாராட்டி இருந்தாலும் சிலர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும் விமர்சித்துள்ளனர் என்பதால் இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர்…

(நூல்: லிஸானுல் மீஸான்-3/297)

மேலும் பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-11331 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.