பாடம்:
பள்ளிவாசலுக்குள் நுழையும் போது சொல்லவேண்டியவை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது “நபி (ஸல்) அவர்கள் மீது ஸலாம் கூறட்டும். பின்பு, “அல்லாஹும்ம ஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக” (இறைவா! உன் கருணையின் வாசல்களை எனக்குத் திறந்திடுவாயாக!) என்று கூறட்டும்;
பள்ளிவாசலிலிருந்து வெளியேறும்போது “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக” (இறைவா! உன்னிடம் நான் உன் அருட்(செல்வங்)களிலிருந்து வேண்டுகிறேன்) என்று கூறட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுமைத் (ரலி), அல்லது அபூஉசைத் (ரலி)
(ஸுனன் தாரிமீ: 1434)بَابُ القوْلِ عِنْدَ دُخولِ الْمَسْجِدِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، أَنْبَأَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدِ بْنِ سُوَيْدٍ، قَالَ: سَمِعْتُ أَبَا حُمَيْدٍ، أَوْ أَبَا أُسَيْدٍ الْأَنْصَارِيَّ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ، فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ، ثُمَّ لِيَقُلْ: اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ، وَإِذَا خَرَجَ، فَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-1434.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1363.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல் அஸீஸ் பின் முஹம்மது நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றலில் சிறிது குறை இருப்பதால் சில நேரம் தவறுசெய்பவர் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பார்க்க : அபூதாவூத்-465 .
சமீப விமர்சனங்கள்