தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-194

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“உங்களிடம் ஒரு காலம் வந்தால், அது அதற்கு முன்னுள்ள காலத்தைவிட மோசமானதாகவே இருக்கும். இதன் மூலம் இந்த வருடம் அந்த (பின்வரும்) வருடத்தை விட செழிப்பாக இருக்கும் என்று நான் கூறவில்லை. இந்த ஆட்சியாளர் அந்த ஆட்சியாளரை விட சிறந்தவராக இருப்பார் என்று நான் கூறவில்லை.

மாறாக, உங்களில் உள்ள அறிஞர்களும், சிறந்தோரும், மார்க்க மேதைகளும் (இறந்து) போய்விடுவர். பின்பு (அவர்களின் இடத்தில்) அவர்களைப் போன்றவர்களை நீங்கள் காணமாட்டீர்கள். ஆனால் (பின்வரும்) கூட்டம் அவர்களின் ஆய்வுகளை அளவுகோலாக கொண்டே சட்டமெடுப்பார்கள் (என்பதே இதன் பொருளாகும்)

அறிவிப்பவர்: மஸ்ரூக் (ரஹ்)

(ஸுனன் தாரிமீ: 194)

حَدَّثَنَا صَالِحُ بْنُ سُهَيْلٍ، مَوْلَى يَحْيَى بْنِ أَبِي زَائِدَةَ، ثَنَا يَحْيَى، عَنْ مُجَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:

«لَا يَأْتِي عَلَيْكُمْ عَامٌ إِلَّا وَهُوَ شَرٌّ مِنَ الَّذِي كَانَ قَبْلَهُ. أَمَا إِنِّي لَسْتُ أَعْنِي عَامًا أَخْصَبَ مِنْ عَامٍ، وَلَا أَمِيرًا خَيْرًا مِنْ أَمِيرٍ، وَلَكِنْ عُلَمَاؤُكُمْ وَخِيَارُكُمْ وَفُقَهَاؤُكُمْ يَذْهَبُونَ، ثُمَّ لَا تَجِدُونَ مِنْهُمْ خَلَفًا، وَيَجِيءُ قَوْمٌ يَقِيسُونَ الْأُمُورَ بِرَأْيِهِمْ»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-194.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-190.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-35116-முஜாலித் பின் ஸயீத் பற்றி சிலர் நம்பகமானவர் என்றும் சிலர் நினைவாற்றலில் பலவீனமானவர் என்றும், சிலர் ஆதாரம் கொள்ளத்தக்கவர் அல்ல என்றும் கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/24)

  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இந்த செய்தியை  ஜய்யித் என்றும் ஹஸன் தரம் என்றும் கூறியுள்ளார்.

(நூல்: ஃபத்ஹுல் பாரீ-13/22)

மேலும் பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-8551 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.