அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சபையிலிருந்து எழுந்திருக்க விரும்பினால் கடைசியாக, “சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக்க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்த்த அஸ்தக்ஃபிருக்க வஅதூபு இலைக்க
(யா அல்லாஹ்! நீ தூய்மையானவன். உன் புகழைக்க கொண்டு உன்னைப் புகழ்கின்றேன். உன்னைத் தவிர வேறெந்த கடவுளும் இல்லை என்று தெரிவிக்கின்றேன். உன்னிடத்தில் மன்னிப்பு தேடி உன்னிடமே திரும்புகின்றேன்)”
என்று சொல்பவர்களாக இருந்தனர். அப்போது ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கடந்த காலத்தில் சொல்லாத வார்த்தையை சொல்கின்றீர்களே?” என்று கேட்ட போது, “அது சபையில் ஏற்பட்டவைகளுக்குப் பரிகாரமாகும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூபர்ஸா அல் அஸ்லமி (ரலி)
(ஸுனன் தாரிமீ: 2700)حَدَّثَنَا يَعْلَى بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا حَجَّاجٌ يَعْنِي ابْنَ دِينَارٍ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنْ رُفَيْعٍ أَبِي الْعَالِيَةِ، عَنْ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ، قَالَ:
لَمَّا كَانَ بِأَخَرَةٍ، كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسَ فِي الْمَجْلِسِ فَأَرَادَ أَنْ يَقُومَ، قَالَ: «سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ». فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ لَتَقُولُ الْآنَ كَلَامًا، مَا كُنْتَ تَقُولُهُ فِيمَا خَلَا، فَقَالَ: «هَذَا كَفَّارَةٌ لِمَا يَكُونُ فِي الْمَجَالِسِ»
Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-2700.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-2576.
சமீப விமர்சனங்கள்