ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அப்துல்லாஹ் பின் ஈஸா அவர்கள் கூறியதாவது:
வெள்ளிக்கிழமை இரவில், துஃகான் (44 வது) அத்தியாயத்தை உண்மையான ஈமானுடன் ஓதுபவர், (பாவங்கள்) மன்னிக்கப்பட்டவராக காலையில் எழுவார் என்ற செய்தி எனக்கு அறிவிக்கப்பட்டது.
(ஸுனன் தாரிமீ: 3463)حَدَّثَنَا يَعْلَى، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى، قَالَ:
«أُخْبِرْتُ أَنَّهُ مَنْ قَرَأَ حم الدُّخَانَ لَيْلَةَ الْجُمُعَةِ إِيمَانًا وَتَصْدِيقًا بِهَا، أَصْبَحَ مَغْفُورًا لَهُ»
Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-3463.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-3325.
- இது மக்தூஃவான செய்தியாகும்.
- மேலும் இதை அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் ஈஸா பற்றி அபூஸுர்ஆ அவர்கள் நிராகரிக்கப்பட்டவர் என்று விமர்சித்துள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2 / 401 )
- எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-2889 .
சமீப விமர்சனங்கள்