தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-1457

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

மூசா பின் தல்ஹா கூறுகிறார் :

தோல் நீக்கப்பட்ட கோதுமை, தோல் நீக்கப்படாத கோதுமை, காய்ந்த திராட்சை, பேரீச்சம் பழம் ஆகியவற்றில் மட்டுமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸகாத் வாங்கினார்கள் என எங்களிடம் உள்ள முஆத் (ரலி) அவர்களின் புத்தகத்தில் உள்ளது…

(ஹாகிம்: 1457)

أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الْحُسَيْنُ بْنُ عَلِيٍّ الْحَافِظُ، ثنا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ سِنَانٍ، ثنا أَحْمَدُ بْنُ سِنَانٍ، ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، ثنا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، قَالَ:

عِنْدَنَا كِتَابُ مُعَاذِ بْنِ جَبَلٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ إِنَّمَا «أَخَذَ الصَّدَقَةَ مِنَ الْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالزَّبِيبِ وَالتَّمْرِ»

هَذَا حَدِيثٌ قَدِ احْتَجَّ بِجَمِيعِ رُوَاتِهِ، وَلَمْ يُخَرِّجَاهُ «وَمُوسَى بْنُ طَلْحَةَ تَابِعِيٌّ كَبِيرٌ لَمْ يُنْكَرْ لَهُ أَنَّهُ يُدْرِكُ أَيَّامَ مُعَاذٍ رَضِيَ اللَّهُ عَنْهُ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-1457.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-1390.




இந்தச் செய்தியில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்றாலும் இதன் அறிவிப்பாளர்களிடையே தொடர்பு அறுந்துள்ளது.

  • முஆத் (ரலி) அவர்களிடமிருந்து இந்தச் செய்தியை அறிவிக்கும் மூசா பின் தல்ஹா என்பவர் முஆத் (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை என இப்னு அப்துல் பர் கூறியுள்ளார்.
  • அபூ ஸுர்ஆ அவர்களும் இவ்வாறு கூறியுள்ளார்.
  • இதனால் இச்செய்தி தொடர்பு அறுந்தது என இமாம் தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இமாம் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் கூறியுள்ளனர்.
  • இது தொடர்பாக வரும் எந்த அறிவிப்பும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை என இமாம் திர்மிதீ கூறியுள்ளார்கள். எனவே இது பலவீனமான அறிவிப்பாகும்…

மேலும் பார்க்க: அஹ்மத்-21989 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.