தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-1884

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

(ஹாகிம்: 1884)

أَنْبَأَنَا بَكْرُ بْنُ مُحَمَّدٍ الصَّيْرَفِيُّ، ثنا أَحْمَدُ بْنُ عُبَيْدِ اللَّهِ النَّرْسِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ سَابِقٍ، ثنا إِسْرَائِيلُ، عَنْ أَبِي سِنَانٍ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

مَنْ قَالَ: أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ، وَأَتُوبُ إِلَيْهِ ثَلَاثًا، غُفِرَتْ لَهُ ذُنُوبُهُ، وَإِنْ كَانَ فَارًّا مِنَ الزَّحْفِ

«هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ، وَلَمْ يُخَرِّجَاهُ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-1884.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-.




மேலும் பார்க்க: ஹாகிம்-2550 .

4 comments on Hakim-1884

  1. அஸ்ஸலாமு அலைக்கும். இந்த ஹதீஸின் தரம் பற்றிய விபரம், ஹாகிம் 2550-வது ஹதீஸின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதில்
    “இது நபித்தோழரின் சொல் என்பதே உண்மையாகும்” என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் இந்தப் பக்கத்தின் ஹதீஸ் ஹாகிம் 1884 உடைய அரபு மூலத்தின் அடிக்குறிப்பில்,

    «هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ، وَلَمْ يُخَرِّجَاهُ»

    என்று கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியானால் இந்த ஹதீஸ் சரியானதா? அல்லது தரம் அடிப்படையில் சஹீஹாக இருந்தாலும் இதுவும் நபித்தோழரின் சொல்தானா? இதில்,

    قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

    என்று கூறப்பட்டுள்ளதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?

  2. أَسْتَغْفِرُ اللهَ الْعَظِيمَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَ أَتُوْبُ إلَيهِ

    இந்த இஸ்திக்ஃபார் சம்பந்தமாக உள்ள ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்களின் சொல்லாக வரக்கூடிய சஹீஹான ஹதீஸ்கள் எதெல்லாம்?

    திர்மிதீ (3577, 3397), அபூ தாவூத் (1517), ஹாகிம் (1884, 2550), முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா (29450), தப்ரானி – அல்முஃஜமுல் கபீர் (4670, 8541)

    இவற்றில் எதுவுமே நபி (ஸல்) அவர்களின் சொல்லாக வரவில்லையா?

    1. வ அலைக்கும் ஸலாம்.

      1 . முதலில் ஹாகிம் இமாம் அவர்கள் «هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ، وَلَمْ يُخَرِّجَاهُ» என்று கூறும் அனைத்து செய்திகளும் இவ்வாறு இருப்பதில்லை. தஹபீ போன்ற அறிஞர்கள் பல செய்திகளில் இந்த தகவலை மறுத்துள்ளனர். ஹாகிம் நூலை ஆய்வு செய்த தஹபீ அவர்கள் கூட சில செய்திகளில் ஹாகிம் இமாமின் கருத்தை ஏற்று சரியானது என்று கூறியிருந்தாலும் அதிலும் கூட சில விமர்சனங்கள் உள்ளன.

      2 . قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ என்று கூறப்பட்டுள்ளதால் மட்டும் அது நபியின் சொல் என்று எடுக்கமுடியாது. ஒரு செய்தியை சரியானதா என்று முடிவு செய்வதற்கு جمع الطرق – அனைத்து ரூட்களையும் திரட்டிபார்த்தே முடிவு செய்யவேண்டும். இது குறித்து ஹதீஸ்கலை பகுதியில் தனியாக விளக்கியுள்ளோம்.

      3 . நீங்கள் குறிப்பிடும் திர்மிதீ (3577, 3397 … போன்ற அறிவிப்பாளர்தொடர்களிலும் விமர்சனம் உள்ளது. (இன்ஷா அல்லாஹ் நாம் விரிவாக பதிவிடுவோம். தற்போது ஆய்வின் சுருக்கத்தையே நாம் குறிப்பிட்டுள்ளோம்.)

      4 . நாம் பார்த்தவரை இப்னு மஸ்ஊத் (ரலி), அபூஸயீத் (ரலி) ஆகியோர் வழியாக நபித்தோழரின் சொல்லாகவே வந்துள்ள அறிவிப்பாளர்தொடர்களே ஓரளவு சரியாக இருப்பதால் சில அறிஞர்கள் இதை நபித்தோழரின் சொல் என்று கூறியுள்ளனர். வேறு சிலர் இதிலும் விமர்சனம் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது நீண்ட ஆய்வு என்பதால் தான் நாம் சுருக்கமாக குறிப்பிட்டுள்ளோம்.

      1. பொறுமையாக பதில் தந்ததற்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரன் கஸீரன். இன்ஷா அல்லாஹ் உங்களின் நீண்ட ஆய்வுக்குப் பிறகு பதிவு செய்யும் கூடுதல் விளக்கங்களை எதிர்ப்பார்க்கிறோம். உங்களின் இந்தப் பணிக்கு அல்லாஹ் உங்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்வானாக!

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.