தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-1966

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1996. ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் இரு விரல்களால் (இஷாரா-சைக்கினை செய்து) துஆ செய்துகொண்டிருக்கும் போது என்னை கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் ஒருவன், ஒருவன் (அல்லது ஒரு விரல், ஒரு விரல்) என்று கூறி தனது ஆள்காட்டி விரலால் (இஷாரா) சைக்கினை செய்தார்கள்.

ஹாகிம் (நூலாசிரியர்) கூறுகிறார்:

மேற்கண்ட (1965, 1966) இரு ஹதீஸ்களின் அறிவிப்பாளர்தொடர் சரியானதாகும்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் அபூ ஸாலிஹ், ஸஃத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களை சந்தித்து ஹதீஸை கேட்டிருந்தால் இது புகாரி, முஸ்லிம் நிபந்தனைப்படி உள்ள செய்தியாகும்.

(அபூ ஸாலிஹ், ஸஃத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களை சந்தித்து ஹதீஸை கேட்டுள்ளார் என்றே ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.)

(ஹாகிம்: 1966)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عِصْمَةَ بْنِ إِبْرَاهِيمَ، ثنا أَبِي، ثنا يَحْيَى بْنُ يَحْيَى، أَنْبَأَ أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِي وَأَنَا أَدْعُو بِأُصْبُعَيَّ فَقَالَ: «أَحَدٌ، أَحَدٌ» وَأَشَارَ بِالسَّبَّابَةِ

«هَذَا حَدِيثٌ صَحِيحٌ الْإِسْنَادَيْنِ جَمِيعًا، فَأَمَّا حَدِيثُ أَبِي مُعَاوِيَةَ فَهُوَ صَحِيحٌ عَلَى شَرْطِهِمَا إِنْ كَانَ أَبُو صَالِحٍ السَّمَّانُ سَمِعَ مِنْ سَعْدٍ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-1996.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-1900.




இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் (ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்களின் ஆசிரியர்) இப்ராஹிம் பின் இஸ்மஹ் பற்றி ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
கூறும் போது நான் அவரை மிகவும் வயோதிகராக கண்டேன். அவர் தனது தந்தை இஸ்மது பின் இப்ராஹீமிடம், மேலும் சிலரிடமும் ஹதீஸ்களை கேட்டு எழுதிவைத்திருந்தார். அவை சரியானவைகள் தான். சிலர் அதில் சில ஹதீஸ்களை சேர்த்துவிட்டனர்….(லிஸானுல் மீஸான்)

لسان الميزان ت أبي غدة (1/ 317)
207 – إبراهيم بن عصمة النيسابوري العدل.
سمع السري بن خزيمة أدخلوا في كتبه أحاديث وهو في نفسه صادق انتهى.
وهذا الرجل من مشايخ الحاكم قال في تاريخه: أدركته وقد شاخ وكان قد سمع أباه، وَغيره قبل الثمانين ومئتين وكانت أصوله صحاحا وسماعاته صحيحة فوقع إليه بعض الوراقين فزاد فيها أشياء قد برأ الله أبا إسحاق منها.
ومات سنة اثنتين وأربعين وثلاث مِئَة وهو ابن أربع وتسعين سنة.

தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் சிலர் அவரின் ஹதீஸ் ஏட்டில் சில ஹதீஸ்களை சேர்த்து விட்டனர். ஆனால் இவர் நம்பகமானவர் தான் என்று கூறியுள்ளார்.

மேலும் பார்க்க: அபூதாவூத்-1499 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.