இறை நம்பிக்கையாளர்களே! மூஸாவுக்குத் துன்பம் தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக் கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூஸா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிரூபித்துவிட்டான். மேலும், அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்’ எனும் (அல்குர்ஆன்: 33:69) ஆவது இறைவசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக, நிர்வாணமாகவே குளிப்பார்கள். மூஸா (அலை) அவர்கள் தனித்தே குளிப்பார்கள். இதனால்) பனூஇஸ்ரவேலர்கள், மூஸா விரை வீக்கமுடையவர் என்று கூறினர். ஒரு முறை மூஸா (அலை) அவர்கள் குளிப்பதற்காகச் சென்றபோது, தங்களின் ஆடைகளை ஒரு கல்லின் மீது வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார்கள்.
அவர்களின் ஆடையோடு அந்தக்கல் ஓடிவிட்டது. உடனே மூஸா (அலை) அவர்கள் அதைத் தொடர்ந்து ஓடினார்கள். இறுதியில் பனூஇஸ்ரவேலர்கள் இருக்கும் இடைத்தை அடைந்துவிட்டார்கள். அப்போது, பனூஇஸ்ரவேலர்கள் மூஸா (அலை) அவர்களை விரைவீக்கம் என்ற குறையில்லாதவராக கண்டனர். இதையே மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)
ஹாகிம் இமாம் கூறுகிறார்:
இது புகாரீ, முஸ்லிம் ஆகியோரின் நிபந்தனைக்குட்பட்ட செய்தியாகும். இந்த வாக்கிய அமைப்பில் அவர்கள் பதிவு செய்யவில்லை.
(ஹாகிம்: 3579)أَخْبَرَنَا أَبُو زَكَرِيَّا الْعَنْبَرِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ السَّلَامِ، ثنا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَنْبَأَ أَبُو مُعَاوِيَةَ، ثنا الْأَعْمَشُ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا،
فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ: {لَا تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى} [الأحزاب: 69] الْآيَةُ. قَالَ: ” لَهُ قَوْمُهُ بِهِ أُدْرَةُ فَخَرَجَ ذَاتَ يَوْمٍ يَغْتَسِلُ، فَوَضَعَ ثِيَابَهُ عَلَى صَخْرَةٍ، فَخَرَجَتِ الصَّخْرَةُ تَشْتَدُّ بِثِيَابِهِ فَخَرَجَ مُوسَى يَتْبَعُهَا عُرْيَانًا حَتَّى انْتَهَتْ إِلَى مَجَالِسِ بَنِي إِسْرَائِيلَ فَرَأَوْهُ وَلَيْسَ بَآدَرَ فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ: {فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِنْدَ اللَّهِ وَجِيهًا} [الأحزاب: 69]
«هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ وَلَمْ يُخْرِجَاهُ بِهَذِهِ السِّيَاقَةِ»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-3579.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-3509.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்
2 . அபூஸகரிய்யா-யஹ்யா பின் முஹம்மத்
3 . முஹம்மத் பின் அப்துஸ்ஸலாம் பின் பஷ்ஷார்
4 . இஸ்ஹாக் பின் இப்ராஹீம்
5 . அபூமுஆவியா
6 . அஃமஷ்
7 . மின்ஹால் பின் அம்ர்
8 . ஸயீத் பின் ஜுபைர்
9 . இப்னு அப்பாஸ் (ரலி)
மேலும் பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-31848.
சமீப விமர்சனங்கள்