அல்லாஹ்வே! ஊர்களில் எனக்கு மிகவும் விருப்பமான ஊரைவிட்டு என்னை நீ வெளியேற்றிவிட்டாய். எனவே உனக்கு மிகவும் விருப்பமான ஊரில் என்னை குடியமர்த்துவாயாக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்துக் கூறினார்கள். எனவே அல்லாஹ், அவர்களை மதீனாவில் குடியமர்த்தி வாழ வைத்தான்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
(ஹாகிம்: 4261)أَخْبَرَنَا الْأُسْتَاذُ أَبُو الْوَلِيدِ، وَأَبُو بَكْرِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَا: أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، ثنا مُوسَى الْأَنْصَارِيُّ، ثنا سَعْدُ بْنُ سَعِيدٍ الْمَقْبُرِيُّ، حَدَّثَنِي أَخِي، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«اللَّهُمَّ إِنَّكَ أَخْرَجْتَنِي مِنْ أَحَبِّ الْبِلَادِ إِلَيَّ، فَأَسْكِنِّي أَحَبَّ الْبِلَادِ إِلَيْكَ» ، فَأَسْكَنَهُ اللَّهُ الْمَدِينَةَ
«هَذَا حَدِيثٌ رُوَاتُهُ مَدَنِيُّونَ مِنْ بَيْتِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-4261.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-4195.
إسناد شديد الضعف لأن به موضع انقطاع بين عبد الله بن سعيد المقبري وأبو هريرة الدوسي ، وفيه عبد الله بن سعيد المقبري وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்லாஹ் பின் ஸயீத் மிக பலவீனமானவர் என்பதாலும், அப்துல்லாஹ் பின் ஸயீதுக்கும், அபூ ஹுரைரா (ரலி) அவர்களுக்கும் இடையில் ஒருவர் விடப்பட்டுள்ளதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க : திர்மிதீ-3925 .
சமீப விமர்சனங்கள்