தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-7012

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர்.

  1. நீதியை அறிந்து அதன்படி செயல்படுபவர். இவர் சுவர்க்கத்தில் புகுவார்.
  2. நீதியை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல், தீர்ப்பில் அநீதி செய்தவர். இவர் நரகத்தில் புகுவார்.
  3. உண்மையை அறியாமல் தன்னுடைய அறியாமையுடனேயே மக்களுக்குத் தீர்ப்பு வழங்கியவர். இவர் நரகத்தில் புகுவார்…

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

(ஹாகிம்: 7012)

حَدَّثَنَا الشَّيْخُ أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، أنبأ مُحَمَّدُ بْنُ غَالِبٍ، ثَنَا شِهَابُ بْنُ عَبَّادٍ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُكَيْرٍ، عَنْ حَكِيمِ بْنِ جُبَيْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

الْقُضَاةُ ثَلَاثَةٌ: قَاضِيَانِ فِي النَّارِ وَقَاضٍ فِي الْجَنَّةِ. قَاضٍ عَرَفَ الْحَقَّ فَقَضَى بِهِ فَهُوَ فِي الْجَنَّةِ، وَقَاضٍ عَرَفَ الْحَقَّ فَجَارَ مُتَعَمِّدًا فَهُوَ فِي النَّارِ، وَقَاضٍ قَضَى بِغَيْرِ عِلْمٍ فَهُوَ فِي النَّارِ

«هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ، وَلَهُ شَاهِدٌ بِإِسْنَادٍ صَحِيحٍ عَلَى شَرْطِ مُسْلِمٍ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-7012.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-7062.




إسناد ضعيف فيه حكيم بن جبير الأسدي وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹகீம் பின் ஜுபைர் பலவீனமானவர்.
  • மேலும் இதில் வரும் ஹகீம் பின் ஜுபைரின் மாணவர், அப்துல்லாஹ் பின் புகைர் பற்றி நிராகரிக்கப்பட்டவர் என்று சிலர் கூறினாலும் இவர் பலவீனமானவர், விடப்படவேண்டியவர் அல்ல என்பதே சரி.

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: அபூதாவூத்-3573 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.