ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது
7125. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
சூடான உணவைக் குளிர வையுங்கள். ஏனென்றால் சூடான உணவு பரகத் இல்லாத உணவாகும்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
أَخْبَرَنَاهُ أَبُو إِسْحَاقَ إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ حَاتِمٍ، الْفَقِيهُ الْبُخَارِيُّ بِنَيْسَابُورَ، ثَنَا صَالِحُ بْنُ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ الْعَزْرَمِيِّ، حَدَّثَنِي أَبِي، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَبْرِدُوا الطَّعَامَ الْحَارَّ فَإِنَّ الطَّعَامَ الْحَارَّ غَيْرُ ذِي بَرَكَةٍ»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-7125.
Hakim-Shamila-7125.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-7177.
إسناد شديد الضعف لأن به موضع انقطاع بين إبراهيم بن محمد الحيري وعبد الرحمن بن محمد العرزمي ، وفيه محمد بن عبيد الله العرزمي وهو متروك الحديث (جوامع الكلم)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இப்ராஹீம் என்பவருக்கும், அப்துர்ரஹ்மான் என்பவருக்கும் இடையில் ஒருவர் விடப்பட்டுள்ளார். எனவே இது அறிவிப்பாளர்தொடர் அறுந்த செய்தியாகும்.
- இந்தச் செய்தியில் முஹம்மது பின் உபைதுல்லாஹ் அல்அஸ்ரமீ என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று வகீஉ, அஹ்மது பின் ஹம்பள், யஹ்யா பின் மயீன், அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
ஆகியோர் கூறியுள்ளனர்.
மேலும் பார்க்க: அஹ்மத்-26958 .
சமீப விமர்சனங்கள்