தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-26958

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

அஸ்மா (ரலி) அவர்களிடம், ஸரீத் (எனும் தக்கடி) உணவு கொண்டு வரப்பட்டால் அதன் ஆவி அடங்கும் வரை மூடி வைக்குமாறு உத்தரவிடுவார்கள். மேலும் அவர்கள், “இவ்வாறு உண்ணுவது அதிக பரகத்தைப் பெற்றுத் தரும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)

(முஸ்னது அஹ்மத்: 26958)

حَدَّثَنَا حَسَنٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، قَالَ: حَدَّثَنَا عُقَيْلُ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ،

أَنَّهَا كَانَتْ إِذَا ثَرَدَتْ، غَطَّتْهُ شَيْئًا حَتَّى يَذْهَبَ فَوْرُهُ، ثُمَّ تَقُولُ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّهُ أَعْظَمُ لِلْبَرَكَةِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-25720.
Musnad-Ahmad-Shamila-26958.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-26335.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25382-இப்னு லஹீஆ எகிப்தைச் சேர்ந்தவர். இவர் எகிப்தின் நீதிபதியாக இருந்துள்ளார். மேலும் ஹதீஸ்களை அறிவிப்பவராகவும் இருந்துள்ளார்.

1 . இவரைப்பற்றி சிலர் எல்லா நிலையிலும் இவர் பலமானவர் என்றும்,

2 . சிலர் எல்லா நிலையிலும் இவர் பலவீனமானவர் என்றும்,

3 . சிலர், சில குறிப்பிட்ட அறிவிப்பாளர்கள் இவரிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்றும் கூறியுள்ளனர்.

  • 1 . இவரைப் பற்றி இப்னு வஹ்ப் அவர்கள், இவர் உண்மையாளர்; நல்லமனிதர் என்று கூறியுள்ளார். யஹ்யா பின் ஹஸ்ஸான் அவர்கள் ஹுஷைம் அவர்களுக்கு பிறகு இவரைவிட மனனசக்தி உடையவரை நான் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். அவரிடம், மக்கள் இப்னு லஹீஆவின் நூல்கள் எரிந்துவிட்டன என்று கூறுகிறார்களே என்று கூறப்பட்டபோது அவரின் நூல் காணாமல் போகவில்லை (அதாவது முழுமையாக எரியவில்லை என்று கூறினார்)
  • ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    அவர்கள், நான் அவரை சந்திப்பதற்காக பலமுறை ஹஜ் செய்துள்ளேன். அவரிடம் அஸல் (ஹதீஸ் நூல்) இருந்தது. எங்களிடம் அதன் பிரிவு உள்ளது என்று கூறியுள்ளார்.
  • இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள், ஹதீஸ்களை அதிகமாக அறிவிப்பதிலும், உறுதியான நினைவாற்றலிலும் இப்னு லஹீஆவைப் போன்று யார் எகிப்தில் இருக்கிறார்? என்று கூறியுள்ளார்.
  • மேலும் இப்னு லஹீஆவின் ஊரைச் சேர்ந்த அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஸாலிஹ் அவர்கள் இப்னு லஹீஆவை பாராட்டியதாக யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    அவர்கள் கூறியுள்ளார். (இதுபோன்று இன்னும் சிலரும் இவரைப் பாராட்டி கூறியுள்ளனர்)…

(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-15/487, தஹ்தீபுத் தஹ்தீப்-2/411, அல்காஷிஃப்-3/182…)

இப்னு லஹீஆ அதிகமாக ஹதீஸை தேடக்கூடியவராக இருந்துள்ளார். அவர் பயணம் செய்வதற்காக ஒரு வரைபடத்தையே கழுத்தில் மாட்டி இருந்துள்ளார். தான் சந்திக்கும் மனிதர்களிடம் உங்களிடம் ஹதீஸ் உள்ளதா, நீங்கள் யாரிடம் ஹதீஸை கேட்டு எழுதிவைத்துள்ளீர்கள் என்று விசாரித்து ஹதீஸை எழுதிக்கொள்வார்.

எனவேதான் அறிஞர்களில் சிலர் இவர் எழுதிவைத்திருந்தவை சரியானது. ஆனால் இவரின் நூல் எரிந்தபோன பின்பு இவர் தனது மனப்பாடத்திலிருந்து அறிவித்ததால் அதிகம் தவறுகள் ஏற்பட்டுவிட்டன என்று கூறியுள்ளனர்.


  • 2 . இவரைப் பற்றி விமர்சனம் செய்துள்ள அறிஞர்கள்:

1 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ

2 . பிஷ்ர் பின் ஸரிய்

3 . யஹ்யா பின் ஸயீத்.

“இப்னு லஹீஆ வழியாக குறைவாகவோ, அதிகமாகவோ  (எதையும்) எடுத்துக் கொள்ள மாட்டேன்’’ என்று அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
கூறியுள்ளார். “நீ இப்னு லஹீஆவைப் பார்த்தால் அவரிடமிருந்து ஒரு எழுத்தைக் கூட எடுத்துக் கொள்ளாதே என்று  பிஷ்ர் என்னிடம்  கூறினார்’’ என்று யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
கூறியுள்ளார்.

(நூல்: அல்மஜ்ரூஹீன், பாகம்: 2, பக்கம்: 14)

4 . இப்னு மயீன்

இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள், இப்னு லஹீஆ ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று கூறினார்கள்.

(நூல்: தாரீகு இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
பாகம்: 1, பக்: 153)

இப்னு லஹீஆ என்பவரின் ஹதீஸ் ஆதாரமாக  எடுத்துக்  கொள்ளக்கூடாது என்று யஹ்யா (பின் மயீன்) கூறியதை நான்  செவியேற்றுள்ளேன்.

(நூல்: தாரீகு இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
பாகம்: 1, பக். 481)

5 . இதனடிப்படையில் இவர்களுக்கு பின்னால் வந்த அறிஞர்கள் இவரை விமர்சித்துள்ளனர்.


  • 3 . என்றாலும் சில குறிப்பிட்ட அறிவிப்பாளர்கள், இப்னு லஹீஆவிடமிருந்து அறிவித்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம் என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.

1 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்கள், நான் இப்னு லஹீஆவின் ஹதீஸ்களில் இப்னு முபாரக் போன்றோர் அறிவிக்கும் செய்திகளைத் தவிர மற்றவைகளை ஒரு பொருட்டாக கருதுவதில்லை என்று கூறினார் என நுஐம் பின் ஹம்மாத் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.பாகம்: 2, பக்கம்: 411)

2 . இப்னு லஹீஆ ஹதீஸ் கலையில் பலவீனமானவராவார். இவருடைய புத்தகங்கள் எரிவதற்கு முன்பு இவரிடமிருந்து (ஹதீஸை) எழுதியவர்களின் அறிவிப்புகள் மிகச் சரியானவை. உதாரணமாக இப்னுல் முபாரக்,பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
அல்முக்ரிஉ, அப்துல்லாஹ் பின் மஸ்லமா ஆகியோரைப் போன்று.

(நூல்: ஸியரு அஃலாமின் நுபலாஃ, பாகம்: 8, பக்கம்: 11)

3 . இப்னு லஹீஆவின் புத்தகங்கள் எரிவதற்கு முன்பு அவரிடமிருந்து கேட்டவர்களின் அறிவிப்புகள் சரியானவை. உதாரணமாக அப்துல்லாஹ் பின் வஹப், அப்துல்லாஹ் பின் முபாரக் மற்றும் அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஉ ஆகியோரின் அறிவிப்புகள். இவை சரியானவை.

(நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 4, பக்கம்: 166)

4 . இப்னு வஹ்ப், இப்னுல் முபாராக், முக்ரீ ஆகியோர் இப்னு லஹீஆவின் மாணவர்கள். இம்மூவரும் இப்னு லஹீஆவிடம் ஆரம்ப நேரத்தில் செவியுற்றவர்கள் என்றும் இவர்கள் இப்னு லஹீஆவின் வழியாக அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்றும் இமாம்கள் கூறியுள்ளார்கள்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். பாகம்: 5, பக்கம்: 330)

5 . அவ்வாறே குதைபா பின் ஸயீத் அவர்கள் இவரிடமிருந்து அறிவிப்பது சரியானது. காரணம், நான் இப்னு லஹீஆவின் ஹதீஸ்களை இப்னு வஹ்பின் நூல்களிலிருந்தும், இப்னு லஹீஆவின் சகோதரரின் மகனின் நூல்களிலிருந்தும் தான் எடுத்தெழுதி பின்பு அவரிடம் கேட்டு உறுதி செய்துக் கொள்வேன். அஃரஜின் ஹதீஸ்களைத் தவிர, என்று குதைபா பின் ஸயீத் கூறியுள்ளார்.

(நூல்: ஸுஆலாதுல் ஆஜுரீ -1512, தஹ்தீபுல் கமால்-15/494)


இந்த செய்தியை அஹ்மத்-26959 எண்ணில் இப்னு லஹீஆ அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அறிவித்திருப்பதால் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இதை சரியானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-‌‌392, 659)

மேலும் அதில், இப்னு லஹீஆவிடமிருந்து குதைபா பின் ஸயீத் அவர்களும் அறிவித்துள்ள அறிவிப்பாளர்தொடர் உள்ளது.


1 . இந்தக் கருத்தில் அஸ்மா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அப்துல்லாஹ் பின் முபாரக், குதைபா பின் ஸயீத், ஹஸன் பின் மூஸா —> இப்னு லஹீஆ —> உகைல் பின் காலித் —> ஸுஹ்ரீ —> உர்வா  —> அஸ்மா (ரலி) 

பார்க்க: அஹ்மத்-26958 , 26959 ,

  • இப்னு வஹ்ப் —> குர்ரது பின் அப்துர்ரஹ்மான், யூனுஸ் பின் யஸீத் —> ஸுஹ்ரீ —> உர்வா —> அஸ்மா (ரலி) 

பார்க்க: தாரிமீ-2091 , இப்னு ஹிப்பான்-5207 , அல்முஃஜமுல் கபீர்-226 , 227 , ஸுனன் குப்ரா பைஹகீ-14629 ,


2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுஸ் ஸகீர்-934 .

3 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஹாகிம்-7125 .

4 . ஸுஹைப் பின் ஸினான் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஷுஅபுல் ஈமான்-5516 .


இந்தச் செய்தி வேறு சரியான அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பதால் கருத்து சரியானதாகும். ஆவி பறக்கும் நிலையில் உள்ள சூடான உணவை சாப்பிடக்கூடாது என்று கூறப்படுவதால் அதிக சூடான உணவு என்று பொருள் கொள்ளலாம். ஆறிப்போன உணவு என்று பொருள் கொள்ளத் தேவையில்லை.

இது ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். ஒருவருக்கு குறைந்த சூடாக தெரிவது மற்றவருக்கு அதிக சூடாக இருக்கலாம்.

எனவே யாராக இருந்தாலும் தன்னால் தாங்கமுடியாத சூடான உணவை உண்ணக்கூடாது என்று இந்த செய்தியிலிருந்து புரிந்துக் கொள்ளலாம்.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.