பாடம்:
சூடான உணவை சாப்பிடத் தடை.
அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், தக்கடி கொண்டு வரப்பட்டால் அதன் ஆவி அடங்கும் வரை மூடி வைக்குமாறு உத்தரவிடுவார்கள். மேலும் அவர்கள், “இவ்வாறு உண்ணுவது அதிக பரகத்தைப் பெற்றுத் தரும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்” என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: உர்வா (ரஹ்)
(ஸுனன் தாரிமீ: 2091)بَابُ النَّهْيِ عَنْ أَكْلِ الطَّعَامِ الْحَارِّ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ قُرَّةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ،
أَنَّهَا كَانَتْ إِذَا أُتِيَتْ بِثَرِيدٍ، أَمَرَتْ بِهِ فَغُطِّيَ حَتَّى يَذْهَبَ فَوْرَةُ وَدُخَانُهُ، وَتَقُولُ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «هُوَ أَعْظَمُ لِلْبَرَكَةِ»
Darimi-Tamil-.
Darimi-TamilMisc-1958.
Darimi-Shamila-2091.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1984.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34257-குர்ரத் பின் அப்துர்ரஹ்மான் என்பவர் பற்றி, இவர் பலவீனமானவர் என்று யஹ்யா பின் மயீன், அபூஸுர்ஆ, நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஆகியோர் கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/438)
இந்த செய்தியை (அஹ்மத்-26959) எண்ணில் ராவீ-25382-இப்னு லஹீஆ அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அறிவித்திருப்பதால் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இதை சரியானது எனக் கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸஹீஹா-393, 659)
மேலும் பார்க்க: அஹ்மத்-26958 .
சமீப விமர்சனங்கள்