தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-122

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

இந்தக் குர்ஆனின் ஒரு பகுதி அல்லாஹ்வின் கையிலுள்ளது. மறுபகுதி உங்கள் கைகளில் உள்ளது. எனவே அதனையே நீங்கள் பற்றிக் கொள்ளுங்கள். நீச்சயமாக நீங்கள் வழி தவற மாட்டீர்கள்! அதன் பிறகு நீங்கள் (மறுமையில்) நாசமாகவும் மாட்டீர்கள்’

அறிவிப்பவர்: அபூஷுரைஹ் (ரலி)

(இப்னு ஹிப்பான்: 122)

أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي شُرَيْحٍ الْخُزَاعِيِّ، قَالَ:

خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَبْشِرُوا وَأَبْشِرُوا، أَلَيْسَ تَشْهَدُونَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنِّي رَسُولُ اللَّهِ؟ » قَالُوا: نَعَمْ، قَالَ: «فَإِنَّ هَذَا الْقُرْآنَ سَبَبٌ طَرَفُهُ بِيَدِ اللَّهِ، وَطَرَفُهُ بِأَيْدِيكُمْ، فَتَمَسَّكُوا بِهِ، فَإِنَّكُمْ لَنْ تَضِلُّوا، وَلَنْ تَهْلِكُوا بَعْدَهُ أَبَدًا»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-122.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-122.




  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள், இந்த செய்தியை பற்றி தனது ஸஹீஹாவில் இது முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    இமாம் அவர்களின் நிபந்தனைப்படி உள்ள சரியான செய்தி என்று கூறிய பின் முர்ஸலாக வரும் செய்தியை குறிப்பிட்டு இது நபியின் கூற்றாக வரும் செய்தியை விட மிகச் சரியானது எனக் கூறியுள்ளார். (நூல்: அஸ்ஸஹீஹா-713 )
  • (அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்களின் கருத்துப்படி மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர்தொடர் சரியாக இருந்தாலும்) இந்த செய்தி முர்ஸல் என்பதே உண்மை என அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: இலலுல் ஹதீஸ்-1653)

மேலும் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களும் இவ்வாறே கூறியுள்ளார்…

  • மேலும் இதில் வரும் ராவீ-18274-அபூகாலித்-ஸுலைமான் பின் ஹய்யான் (இவர் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிமின் அறிவிப்பாளர் என்றாலும்) நினைவாற்றலில் குறையுள்ளவர் என பஸ்ஸார், இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    போன்றோர் கூறியுள்ளனர்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-30006 , இப்னு ஹிப்பான்-122 , அல்முஃஜமுல் கபீர்-491 , ஷுஅபுல் ஈமான்-1792 , 1858 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.