அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சில ஆண்கள் தமது மனைவியை அடிப்பதற்கு அனுமதி கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களுக்கு அடிக்க அனுமதி கொடுத்தார்கள். அவர்களும் தனது மனைவியை அடிக்க, இரவில் உரத்த சத்தங்களை நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
இது என்ன என்று நபித்தோழர்களிடம் கேட்கும் போது, அவர்கள் நீங்கள் ஆண்களுக்கு தமது மனைவிகளை அடிக்க அனுமதி கொடுத்தீர்கள், அவர்கள் அடித்துவிட்டனர்.(அதன் விளைவே இது) என்று கூறினர்.
உடனே நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு அடிப்பதை தடைசெய்தார்கள். மேலும் கூறினார்கள்: உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே! நான் எனது மனைவியரிடத்தில் நற்பண்புடன் நடந்துக் கொள்கிறேன்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
(இப்னு ஹிப்பான்: 4186)أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ يَحْيَى بْنِ ثَوْبَانَ، عَنْ عَمِّهِ عُمَارَةِ بْنِ ثَوْبَانَ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ
أَنَّ الرِّجَالَ اسْتَأْذَنُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ضَرْبِ النِّسَاءِ فَأَذِنَ لَهُمْ فَضَرَبُوهُنَّ فَبَاتَ فَسَمِعَ صَوْتًا عَالِيًا فَقَالَ: «مَا هَذَا» قَالُوا: أَذِنْتَ لِلرِّجَالِ فِي ضَرْبِ النِّسَاءِ فَضَرَبُوهُنَّ فَنَهَاهُمْ وَقَالَ: «خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ، وَأَنَا مِنْ خَيْرِكُمْ لِأَهْلِي»
Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-4186.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-4275.
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் عمارة بن ثوبان உமாரா பின் ஸவ்பான், جعفر بن يحيى الحجازي ஜஃபர் பின் யஹ்யா அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
இந்த ஹதீஸ் வேறு சரியான அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது. அதில் ஆண்கள் தமது மனைவிகளை அடித்த சம்பவம் கூறப்படவில்லை.
மேலும் பார்க்க : இப்னு மாஜா-1977 .
சரியான ஹதீஸ் பார்க்க : திர்மிதீ-3895 .
சமீப விமர்சனங்கள்