…“ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “ஆயிஷாவே! என் இரட்சகனுக்காக நான் இவ்விரவில் வணங்க என்னை விடுவீராக!” என ஓர் இரவு ரஸூல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள். “அல்லாஹ் மீது ஆணையாக! உங்களின் நெருக்கத்தை நிச்சயம் நான் விரும்புகிறேன். மேலும் உங்களை மகிழ்வூட்டியதையும் நான் விரும்புகிறேன்” என்றேன். அவர்கள் எழுந்து துப்புரவாகி பின்னர் தொழ நின்று விட்டார்கள். அவர்களின் கண்ணைச் சுற்றியுள்ள பகுதி நனையும் வரை அழுது கொண்டே இருந்தார்கள். பின்னர் அழுதார்கள். அவர்களின் தாடி நனையும் வரை அழுது கொண்டே இருந்தார்கள். பின்னர் அழுதார்கள். பூமி நனையும் வரை அழுது கொண்டே இருந்தார்கள். தொழுகைக்கு அறிவித்து பிலால் வந்தார்கள். அவர்கள் அவர்களை அழுது கொண்டிருக்கக் கண்ட போது “அல்லாஹ்வின் தூதரே! முந்தியதையும் பிந்தியதையும் திண்ணமாக அல்லாஹ் உங்களுக்கு மன்னித்திருக்கும் போது நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?” எனக் கேட்டார்கள். “அதிகம் நன்றி செலுத்தும் ஓர் அடியானாக நான் இருக்க மாட்டேனா? நிச்சயமாக இவ்விரவு என் மீது ஒரு வசனம் இறங்கியது. அதில் சிந்தனை செய்யாது அதனை ஓதியவருக்கு கேடுதான்” என்றார்கள். அது “வானங்கள், பூமியைப் படைத்திருப்பதிலும் மேலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் திண்ணமாக அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் உள்ளன” எனும் வசனமாகும் என்றார்கள்…
(இப்னு ஹிப்பான்: 620)ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ الْمَرْءَ عَلَيْهِ إِذَا تَخَلَّى لُزُومُ الْبُكَاءِ عَلَى مَا ارْتَكَبَ مِنَ الْحَوْبَاتِ، وَإِنْ كَانَ بَائِنًا عَنْهَا مُجِدًّا فِي إِتْيَانِ ضِدِّهَا
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا، عَنْ إِبْرَاهِيمَ بْنِ سُوَيْدٍ النَّخَعِيِّ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، قَالَ:
دَخَلْتُ أَنَا وَعُبَيْدُ بْنُ عُمَيْرٍ، عَلَى عَائِشَةَ فَقَالَتْ لِعُبَيْدِ بْنِ عُمَيْرٍ: قَدْ آنَ لَكَ أَنْ تَزُورَنَا، فقَالَ: أَقُولُ يَا أُمَّهْ كَمَا قَالَ الْأَوَّلُ: زُرْ غِبًّا تَزْدَدْ حُبًّا، قَالَ: فَقَالَتْ: دَعُونَا مِنْ رَطَانَتِكُمْ هَذِهِ، قَالَ ابْنُ عُمَيْرٍ: أَخْبِرِينَا بِأَعْجَبِ شَيْءٍ رَأَيْتِهِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَسَكَتَتْ ثُمَّ قَالَتْ: لَمَّا كَانَ لَيْلَةٌ مِنَ اللَّيَالِي، قَالَ: «يَا عَائِشَةُ ذَرِينِي أَتَعَبَّدُ اللَّيْلَةَ لِرَبِّي» قُلْتُ: وَاللَّهِ إِنِّي لَأُحِبُّ قُرْبَكَ، وَأُحِبُّ مَا سَرَّكَ، قَالَتْ: فَقَامَ فَتَطَهَّرَ، ثُمَّ قَامَ يُصَلِّي، قَالَتْ: فَلَمْ يَزَلْ يَبْكِي حَتَّى بَلَّ حِجْرَهُ، قَالَتْ: ثُمَّ بَكَى فَلَمْ يَزَلْ يَبْكِي حَتَّى بَلَّ لِحْيَتَهُ، قَالَتْ: ثُمَّ بَكَى فَلَمْ يَزَلْ يَبْكِي حَتَّى بَلَّ الْأَرْضَ، فَجَاءَ بِلَالٌ يُؤْذِنُهُ بِالصَّلَاةِ، فَلَمَّا رَآهُ يَبْكِي، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، لِمَ تَبْكِي وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ وَمَا تَأَخَّرَ؟، قَالَ: «أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا، لَقَدْ نَزَلَتْ عَلَيَّ اللَّيْلَةَ آيَةٌ، وَيْلٌ لِمَنْ قَرَأَهَا وَلَمْ يَتَفَكَّرْ فِيهَا {إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ … }» الْآيَةَ كُلَّهَا [آل عمران: 190]. [5: 47]
Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-620.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-.
…
சமீப விமர்சனங்கள்