தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Khuzaymah-1195

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

மஃக்ரிப் தொழுகைக்குப் பின் ஒருவர் அல்லாஹ்வின் திக்ரை தவிர வேறு எதுவும் பேசாமல் ஆறு ரக்அத்கள் தொழுதால் அது பன்னிரண்டு ஆண்டுகள் வணக்கத்துக்கு நிகராக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

மேற்கூறப்பட்ட செய்தி வேறு அறிவிப்பாளர் தொடரில் “அல்லாஹ்வின் திக்ரை தவிர வேறு எதுவும் பேசாமல் என்பதற்கு பதிலாக “தீயவற்றைப் பேசாமல்என்று இடம்பெற்றுள்ளது.

(ibn-khuzaymah-1195: 1195)

قَالَ أَبُو بَكْرٍ: وَرَوَاهُ عُمَرُ بْنُ أَبِي خَثْعَمٍ الْيَمَامِيُّ، نا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ صَلَّى سِتَّ رَكَعَاتٍ بَعْدَ الْمَغْرِبِ لَا يَتَكَلَّمُ بَيْنَهُنَّ بِشَيْءٍ إِلَّا بِذِكْرِ اللَّهِ عُدِلْنَ لَهُ بِعِبَادَةِ اثْنَتَيْ عَشْرَةَ سَنَةً»

حَدَّثَنَاهُ أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، ثنا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ عُمَرَ بْنِ أَبِي خَثْعَمٍ الْيَمَامِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، ح وَثناه حَفْصُ بْنُ عَمْرٍو الرَّبَالِيُّ، نا زَيْدُ بْنُ الْحُبَابِ، أَخْبَرَنِي عُمَرُ بْنُ أَبِي خَثْعَمٍ الْيَمَامِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، غَيْرَ أَنَّ الرَّبَالِيَّ قَالَ: «لَا يَتَكَلَّمُ بَيْنَهُمَا بِسُوءٍ»


Ibn-Khuzaymah-Tamil-.
Ibn-Khuzaymah-TamilMisc-.
Ibn-Khuzaymah-Shamila-1195.
Ibn-Khuzaymah-Alamiah-.
Ibn-Khuzaymah-JawamiulKalim-1134.




إسناد شديد الضعف فيه عمر بن عبد الله اليمامي وهو منكر الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி உமர் பின் அப்துல்லாஹ் என்பவர் பற்றி, இவர் ذاهب الحديث (அதாவது பொய்யரென சந்தேகிக்கப்பட்டவர்-நிராகரிக்கப்பட்டவர்) என்று புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் கூறியதாக திர்மிதீ அவர்கள் கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுல் கமால் – 4265)

மேலும் பார்க்க: திர்மிதீ-435 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.