தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Khuzaymah-1581

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுபுஹ் தொழுகையை நடத்தினார்கள். கிராஅத் ஓதுவது அவர்களுக்கு சிரமமாகி விட்டது. அவர்கள் தொழுகையை முடித்ததும் “நீங்கள் உங்களுடைய இமாமிற்கு பின்னால் ஓதுகிறவர்களாக நான் காண்கிறேனே!” என்று கேட்டார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஆம் (நாங்கள் ஓதுகிறோம்)“ என்று நாங்கள் கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவ்வாறு செய்யாதீர்கள். என்றாலும் உம்முல் கிதாப் (அல்ஹம்து சூராவை மட்டும் ஓதிக் கொள்ளுங்கள்). ஏனென்றால் யார் அதை ஓதவில்லையோ அவருக்குத் தொழுகை இல்லை“ என்று கூறினார்கள்.

(ibn-khuzaymah-1581: 1581)

نا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ الْيَشْكُرِيُّ، نا إِسْمَاعِيلُ يَعْنِي ابْنَ عُلَيَّةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، ح وَثنا الْفَضْلُ بْنُ يَعْقُوبَ الْجَزَرِيُّ، ثنا عَبْدُ الْأَعْلَى، نا مُحَمَّدٌ، ح وَثنا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأُمَوِيُّ، نا أَبِي، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، وَثنا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ قَالَا: ثنا يَزِيدُ وَهُوَ ابْنُ هَارُونَ، أَخْبَرَنَا مُحَمَّدٌ وَهُوَ ابْنُ إِسْحَاقَ، حَدَّثَنِي مَكْحُولٌ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ الْأَنْصَارِيِّ، وَكَانَ يَسْكُنُ إِيلِيَاءَ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ:

صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ، فَثَقُلَتْ عَلَيْهِ الْقِرَاءَةُ، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «إِنِّي لَأَرَاكُمْ تَقْرَؤونَ وَرَاءَ إِمَامِكُمْ؟» قَالَ: قُلْنَا: أَجَلْ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ، هَذًّا قَالَ: «فَلَا تَفْعَلُوا إِلَّا بِأُمِّ الْكِتَابِ؛ فَإِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِهَا»

هَذَا حَدِيثُ ابْنِ عُلَيَّةَ، وَعَبْدِ الْأَعْلَى


Ibn-Khuzaymah-Tamil-.
Ibn-Khuzaymah-TamilMisc-.
Ibn-Khuzaymah-Shamila-1581.
Ibn-Khuzaymah-Alamiah-.
Ibn-Khuzaymah-JawamiulKalim-1498.


3 comments on Ibn-Khuzaymah-1581

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      இந்த செய்தியை இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் விமர்சித்துள்ளார்கள். அல்பானீ அவர்களும் இதை பலவீனமானது என கூறியுள்ளார். இப்னுல் முலக்கின் அவர்கள் அதை மறுத்து சரியென கூறியுள்ளார். மேலும் சில அறிஞர்களும் இதை சரியென கூறியுள்ளனர். இன்ஷா அல்லாஹ் மீண்டும் இதைப்பற்றி ஆய்வு செய்து பதிவு செய்யப்படும்.

      1. ஜசாஹல்லாஹ் ஹைரன் …உங்கள் ஆய்வின் முடிவுக்கு காத்து இருக்கிறேன்.. சரியான விடை அறிய இன்ஷா அல்லாஹ்

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.