தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Khuzaymah-1595

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தொழுகையில் இமாம் முதுகை உயர்த்துவதற்கு முன்னதாக ருகூவை அடைந்து கொள்வாரோ அவர் அந்த ரக்அத்தை அடைந்து கொண்டார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

(ibn-khuzaymah-1595: 1595)

أنا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ الْغَافِقِيُّ، ثنا ابْنُ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ حُمَيْدٍ، عَنْ قُرَّةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ ابْنِ شِهَابٍ قَالَ: أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصَّلَاةِ فَقَدْ أَدْرَكَهَا قَبْلَ أَنْ يُقِيمَ الْإِمَامُ صُلْبَهُ»


Ibn-Khuzaymah-Tamil-.
Ibn-Khuzaymah-TamilMisc-1595.
Ibn-Khuzaymah-Shamila-1595.
Ibn-Khuzaymah-Alamiah-.
Ibn-Khuzaymah-JawamiulKalim-1512.




إسناد ضعيف فيه يحيى بن حميد الطويل وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யஹ்யா பின் ஹுமைத் பற்றி இவர் பலவீனமானவர் என்றும், ஹதீஸை அறிவிப்பதில் அலட்சியப் போக்குடையவராக இருந்தார் என்றும் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார். இவருடைய செய்திகள் பெரும்பாலும் நம்பகமானவர்களின் அறிவிப்புக்கு மாற்றமாகவே இருக்கும் என அஹ்மது பின் ஹம்பள், அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அபூ ஸுர்ஆ ஆகியோர் கூறியுள்ளனர். இவர் பலமானவர் இல்லை என நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    ஆகியோர் கூறியுள்ளனர்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.3 / 438 )

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

  • என்றாலும் இமாம் ருகூவிலிருந்து எழுவதற்கு முன்பாக ஒருவர் ஜமாஅத்துடன் சேர்ந்து விட்டால் அந்த ரக்அத் அவருக்குக் கிடைத்து விடும் என்ற இந்த கருத்தில் வேறு சரியான ஹதீஸ்களும் உள்ளன.

பார்க்க: புகாரி-783 .

  • அபூபக்ரா (ரலி) அவர்கள் ஸஃப்பிற்கு வெளியே ருகூவு செய்து அதே நிலையில் நடந்து வந்து ஸஃப்பில் சேருகிறார்கள். ஒரு ரக்அத் தனக்கு தவறிவிடக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு அவர்கள் செய்துள்ளார்கள். ருகூவில் வந்து சேர்ந்தாலும் அந்த ரக்அத் கிடைக்காதென்றால் ஸஃப்புக்கு வெளியே அவர்கள் ருகூவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ருகூவைத் தவற விட்டால் அந்த ரக்அத் கிடைக்காது என்பதால் தான் அவர்கள் ஸஃப்புக்கு வெளியே ருகூவு செய்து நடந்து வந்து ஸஃப்பில் இணைகிறார்கள்.இமாம் ருகூவில் இருக்கும் போது ஜமாஅத்தில் சேர்ந்தால் அந்த ரக்அத் கிடைத்துவிடும் என்று அபூபக்ரா (ரலி) அவர்கள் கருதியதை நபி (ஸல்) அவர்கள் தவறு என்று கூறவில்லை. இவ்வாறு செய்வது தவறு என்றிருக்குமேயானால் அபூபக்ரா (ரலி) அவர்களிடம் அந்த ரக்அத்தை மீண்டும் நிறைவேற்றுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு கூறவில்லை. மாறாக தொழுகைக்கு விரைந்து ஓடி வருவதும், ஸஃப்பில் இணையாமல் வெளியே ருகூவு செய்வதும் மட்டுமே கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.எனவே இமாம் ருகூவிலிருந்து எழுவதற்கு முன்பாக ஜமாஅத்துடன் சேர்ந்து விட்டால் அந்த ரக்அத் கிடைத்துவிடும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

மேலும் பார்க்க: அஹ்மத்-20405 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.