தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-20405

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் தொழுகையின் வரிசையில் சேருவதற்கு முன்னே ருகூவு செய்து (பிறகு நடந்து சென்று வரிசையில்) சேர்ந்து கொண்டேன். (தொழுகை முடிந்த பின்பு) நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹஸன் பஸரீ (ரஹ்)

(முஸ்னது அஹ்மத்: 20405)

حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا أَشْعَثُ، عَنْ زِيَادٍ الْأَعْلَمِ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكَرَةَ،

أَنَّهُ رَكَعَ دُونَ الصَّفِّ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «زَادَكَ اللَّهُ حِرْصًا، وَلَا تَعُدْ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-19510.
Musnad-Ahmad-Shamila-20405.
Musnad-Ahmad-Alamiah-19510.
Musnad-Ahmad-JawamiulKalim-19923.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

2 . யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அல்கத்தான்

3 . அஷ்அஸ் பின் அப்துல்மாலிக்

4 . ஸியாத் பின் ஹஸ்ஸான் அல்அஃலம்

5 . ஹஸன் பஸரீ

6 . அபூபக்ரா (ரலி)


இந்தச் செய்தியை ஹஸன் பஸரீ அவர்களிடமிருந்து பல அறிவிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ஹஸன் பஸரீ அவர்கள் அபூபக்ரா (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்டுள்ளார் என்று பஹ்ஸ் பின் அஸத், இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
ஆகியோர் கூறியுள்ளனர்.

(பார்க்க: புகாரி-2704)…

திர்மிதீ, பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
போன்ற அறிஞர்களும் இதன்படியே முடிவு செய்துள்ளனர். , அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், ஹஸன் பஸரீ அவர்கள் அபூபக்ரா (ரலி) அவர்களிடமிருந்து சில ஹதீஸைக் கேட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.


இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
இப்னு அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்றோர் ஹஸன் பஸரீ அவர்கள் அபூபக்ரா (ரலி) அவர்களிடம் எந்த ஹதீஸையும் கேட்கவில்லை என்று கூறியுள்ளனர்.

தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்றவர்கள் இவ்வாறு கூறுவதற்கு காரணம் ஹஸன் பஸரீ அவர்கள் அஹ்னஃப் பின் கைஸ் என்பவரிடமிருந்தே அபூபக்ரா (ரலி) அவர்களின் சில செய்திகளை அறிவித்துள்ளார் என்பதால் ஆகும். ஆனால் இதை வைத்து மட்டும் இவ்வாறு முடிவு செய்யமுடியாது என்பதால் இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
போன்றோரின் கருத்தையே ஹதீஸ்துறை அறிஞர்கள் ஏற்கின்றனர்.

ஹஸன் பஸரீ அவர்கள் தத்லீஸ் செய்பவர் என்ற விமர்சனம் இருந்தாலும் இதன் பொருள் முர்ஸலுல் கஃபீ என்ற கருத்தில் கூறப்பட்டதாகும். இந்த விமர்சனம் இவர் ஸமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திக்கே பொருந்தும். எனவே தான் இவர் சில குறிப்பிட்ட நபித்தோழர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் அன் என்று இருந்தாலும் அதை முத்தஸில்-அறிவிப்பாளர்தொடர் இடைமுறியாதது என்று சில ஹதீஸ்ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்…

……………..


1 . இந்தக் கருத்தில் அபூபக்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஹஸன் பஸரீ —> அபூபக்ரா (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, அஹ்மத்-20405, 20457, 20458, 20470, 20471, புகாரி-783, அபூதாவூத்-683, 684, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-871, இப்னுல் ஜாரூத்-, ஷரஹ் மஆனில் ஆஸார்-, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-2194, 2195, அல்முஃஜமுல் அவ்ஸத்-, அல்முஃஜமுஸ் ஸகீர்-, குப்ரா பைஹகீ-,


  • அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ரா —> அபூபக்ரா (ரலி)

பார்க்க: அஹ்மத்-20509,


  • அப்துல்அஸீஸ் பின் அபூபக்ரா —> அபூபக்ரா (ரலி)

பார்க்க: அஹ்மத்-20435,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னு குஸைமா-1595, …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.