தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Khuzaymah-1739

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அபூபுர்தா பின் அபீமூசா அல் அஷ்அரீ அவர்கள் கூறுகிறார்கள் :

என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “வெள்ளிக்கிழமையில் உள்ள அந்த (அரிய) நேரம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உம் தந்தையார் அறிவித்த ஹதீஸை நீர் செவியுற்றீரா?” என்று கேட்டார்கள். நான் கூறினேன்: ஆம் ; என் தந்தை பின்வருமாறு அறிவித்ததை நான் செவியுற்றேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அது, இமாம் மிம்பர் மீது அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரமாகும்.

(ibn-khuzaymah-1739: 1739)

نا أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَهْبٍ، نا عَمِّي، أَخْبَرَنِي مَخْرَمَةُ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ:

قَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: أَسَمِعْتَ أَبَاكَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَأْنِ سَاعَةِ الْجُمُعَةِ؟ قَالَ: قُلْتُ: نَعَمْ , سَمِعْتُهُ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ عَلَى الْمِنْبَرِ إِلَى أَنْ تُقْضَى الصَّلَاةُ»

نا أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , نا عَمِّي , حَدَّثَنِي مَيْمُونُ بْنُ يَحْيَى وَهُوَ ابْنُ أَخِي مَخْرَمَةَ , عَنْ مَخْرَمَةَ , عَنْ أَبِيهِ بِهَذَا الْإِسْنَادِ مِثْلِهِ سَوَاءً

 


Ibn-Khuzaymah-Tamil-.
Ibn-Khuzaymah-TamilMisc-.
Ibn-Khuzaymah-Shamila-1739.
Ibn-Khuzaymah-Alamiah-.
Ibn-Khuzaymah-JawamiulKalim-1646.




  • இதன் இரண்டு அறிவிப்பாளர்தொடரிலும் வரும் ராவீ-4220-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் அப்துர்ரஹ்மான் பின் வஹ்ப் அஸ்மிஸ்ரி
    அவர்கள் பற்றி அப்துல்மலிக் பின் ஷுஐப், முஹம்மத் பின் அப்துல்ஹகம் ஆகியோர் பலமானவர் என்று கூறியதாக அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் கூறியுள்ளார்.
  • அபூதாஹிர்-இப்னுஸ் ஸர்ஹ் அவர்கள் இவரைப் பற்றி நல்லதையே கூறியுள்ளார். நாங்கள் இவரிடம் ஹதீஸைக் கேட்ட நாட்களில் இவர் சரியாகத்தான் ஹதீஸ்களை அறிவித்தார்; இப்னு வஹ்பின் செய்திகளை நன்கு அறிந்த ஹர்மலாவை சந்திக்காதவர்கள் அபூஉபைத்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் அப்துர்ரஹ்மானிடமிருந்து
    ஹதீஸைக் கேட்டு எழுதிக் கொள்வர் என அப்தான் அவர்கள் கூறியதாக இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள் கூறியுள்ளார்.
  • ஆரம்பத்தில் இவர் ஹதீஸ்களை சரியாக அறிவித்தார். அப்போது அவரிடமிருந்து நாங்கள் ஹதீஸ்களை எழுதிக் கொண்டோம். பின்பு இவருக்கு குழப்பம் ஏற்பட்டு தவறாக அறிவித்தார். பிறகு இவர் தவறாக அறிவித்த செய்திகளை சுட்டிக்காட்டியபோது அதை ஏற்றுக்கொண்டு தவறை சரிசெய்துக்கொண்டார் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது. இவர் ஸதூக் எனும் தரத்தில் உள்ளவர் என அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் கூறியுள்ளார்.
  • இவரை பலவீனமானவர் என்று சிலர் கூறியதற்கு காரணம் இவர் தனது தந்தையுடன் பிறந்த அப்துல்லாஹ் பின் வஹ்பிடமிருந்து மற்றவர்கள் அறிவிக்காத செய்திகளை அறிவித்ததால் ஆகும். என்றாலும் அவைகள் ஏற்கத்தக்கவையாக இருக்கலாம். இப்னு வஹ்ப் அவர்கள், இவருக்கு மட்டும் அந்த செய்திகளை கூறியிருக்கலாம் என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள் கூறியுள்ளார்
  • ஆரம்பத்தில் இவர் ஹதீஸ்களை சரியாக அறிவித்தார். அப்போது அவரிடமிருந்து இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
    இறப்பு ஹிஜ்ரி 311
    வயது: 88
    போன்றோர் ஹதீஸ்களை கேட்டு அறிவித்துள்ளனர். பிறகு இவர் இப்னு வஹ்பிடமிருந்து எந்த அடிப்படையும் இல்லாத செய்திகளை அறிவித்தார் என்று இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    கூறியுள்ளார்.
  • இவர் ஹிஜ்ரீ 250 இல் தான் மூளைக் குழம்பினார். முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    இமாம் மிஸ்ர்-எகிப்துக்கு சென்றது இதற்கு முன்பு என்பதால் இவர் மூளைக் குழம்புவதற்கு முன் இவரிடமிருந்து முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    இமாம் ஹதீஸைக் கேட்டுள்ளார் என ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    அவர்கள் கூறியுள்ளார்.

இதுவரை உள்ளவற்றின் மூலம் இவரை சிலர் பாராட்டியுள்ளனர் என்பதை அறிந்துக் கொள்கிறோம்.


சிலர் இவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும் விமர்சித்துள்ளனர். இதற்கான காரணம்:

  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஸாலிஹ் அல்மிஸ்ரி அவர்கள், இப்னு வஹ்பிடமிருந்து யாரும் குழப்பங்கள் பற்றிய ஹதீஸ்களை செவியேற்கவில்லை என்று கூறியிருந்தார். இந்தச் செய்திகளை அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் அப்துர்ரஹ்மான் அறிவிக்கிறார் என்று அல்பூஷன்ஜீ-முஹம்மத் பின் இப்ராஹீம் பின் ஸயீதிடம் கூறப்பட்டபோது அப்படியென்றால் இவர் பொய் சொல்கிறார் என்று கூறினார். இதை குறிப்பிட்ட நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    அவர்கள் இவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று முடிவு செய்துள்ளார்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவர் ஊரைச் சேர்ந்த எகிப்துவாசிகள் அனைவரும் இவரை பலவீனமானவர் என்றே முடிவு செய்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
  • இப்னு யூனுஸ் அவர்கள், இவரின் செய்திகள் ஆதாரத்திற்குரியவை அல்ல என்று கூறியுள்ளார்.
  • ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    அவர்கள் இவர் ஹிஜ்ரீ 250 ல் மூளைக் குழம்பிவிட்டார். அப்போது அறிவித்த அவரின் செய்திகளை அறிவு ஏற்றுக்கொள்ளாது. ஹதீஸ்கலை அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். காரணம் இவை இட்டுக்கட்டப்பட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் செய்திகளாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
  • தஹபீ…
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை ஸதூக் என்ற தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/34…)

எனவே இவரின் செய்திகள் ஆய்வுக்குரியவையாகும். இவர் மற்றவர்களுக்கு மாற்றமாக அறிவிக்கும் செய்திகள் ஏற்கப்படாது. அவ்வாறு இல்லாத செய்திகளில் வேறு குறைகள் இல்லாவிட்டால் ஏற்கப்படும்.

இதில் வேறு விமர்சனம் இருப்பதால் இது பலவீனமான செய்தியாகும்.


அப்துல்மலிக் பின் ஷுஐப் – 248

முஹம்மத் பின் அப்துல்ஹகம்-268

அபூஸுர்ஆ-268

அபூஹாதிம்-275

நஸாயீ-303

அப்தான்-306

இப்னு குஸைமா-311

இப்னு யூனுஸ்-347

இப்னு அதீ-365

தாரகுத்னீ-385

ஹாகிம்-405

இப்னு அப்துல்பர்-463

தஹபீ-748

இப்னு ஹஜர்-852


மேலும் பார்க்க: முஸ்லிம்-1546 .

2 comments on Ibn-Khuzaymah-1739

  1. அஸ்ஸலாமு அலைக்கும் இதே செய்தி முஸ்லிம்-1546 எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிமில் உள்ள ஹதீஸும் பலவீனமானது தானா

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.