மனிதர்களே! உங்களுக்கு மகத்தான மாதம் நிழலிட்டுள்ளது. (அது) அருள்நிறைந்த மாதமாகும். அந்த மாதத்தில் ஆயிரம் மாதத்தைவிட சிறந்த இரவு உள்ளது. அந்த மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். இரவில் வணங்குவதை உபரியான வணக்கமாக ஆக்கியுள்ளான். யார் நன்மையான ஒரு காரியத்தைக் கொண்டு (அல்லாஹ்வை) நெருங்குவாரோ அவர் அதுவல்லாத கடமையான செயலைச் செய்தவர் போன்றவராவார்.
யார் அந்த மாதத்தில் கடமையான செயலை நிறைவேற்றுவாரோ அவர் அதுவல்லாத எழுபது கடமையை நிறைவேற்றியவரைப் போன்றவராவார். இது பொறுமையின் மாதமாகும். பொறுமை, அதன் நன்மை சொர்க்கமாகும். (இது) பெருந்தன்மையுடன் நடக்கும் மாதமாகும். (இந்த) மாதத்தில் இறைநம்பிக்கையாளனின் செல்வம் அதிகரிக்கப்படும். யார் ஒரு நோன்பாளியை நோன்பு துறக்கச் செய்வாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படவும், நரகத்திலிருந்து விடுதலை பெறவும் அது காரணமாக அமையும். நோன்பாளிக்குக் கிடைக்கும் நன்மை போன்று நோன்பு துறக்கச் செய்தவருக்கும் கிடைக்கும். நோன்பாளின் நன்மையின் எந்த ஒன்றும் குறைக்கப்படாது.
‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களில் யாருக்கு நோன்பாளியை நோன்பு துறக்கச் செய்யும் பொருட்கள் உள்ளது?’’ என்று கேட்டபோது, ‘‘ஒரு பேரீச்சம் பழத்தைக் கொண்டு அல்லது தாகம் தீர்க்கும் அளவு தண்ணீரைக் கொடுத்து அல்லது தண்ணீர் கலந்த பாலைக் கொண்டு ஒரு நோன்பாளியை நோன்பு துறக்கச் செய்யக் கூடியவருக்கு அல்லாஹ் இந்த நன்மை வழங்குகிறான்’’ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
இந்த மாதம், அதன் முதல் பகுதி ரஹ்மத் (அருள் வளம்) கொண்டதாகும். நடுப்பகுதி மன்னிப்பு உள்ளதாகும். கடைசி பகுதி நரகத்திலிருந்து விடுதலைப் பெறுவதற்குரியதாகும். யார் தன்னுடைய அடிமையிடம் மென்மையாக நடந்து கொள்கிறாரோ அவருடைய பாவத்தை அல்லாஹ் மன்னிக்கின்றான், மேலும் அவரை நரத்திலிருந்து விடுதலை செய்கின்றான்.
இந்த மாதத்தில் நான்கு விஷயங்களை அதிகப்படுத்துங்கள். அதில் இரண்டு விஷயங்களை உங்கள் இறைவன் திருப்தி கொள்கின்றான். இரண்டு விஷயங்கள் அதை நீங்கள் (ஒரு போதும்) தவிர்க்க முடியாததாகும்.
உங்கள் இறைவன் பொருந்திக் கொள்கின்ற இரண்டு விஷயங்களாவது, வணங்குவதற்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே என்று நம்புவதாகும். (இரண்டாவது) நீங்கள் (உங்கள் பாவங்களுக்காக) அவனிடம் பாவமன்னிப்புத் தேடுவதாகும்.
நீங்கள் தவிர்த்துக் கொள்ள முடியாத இரண்டு விஷயங்களாவது, (ஒன்று) நீங்கள் அல்லாஹ்விடம் சொர்க்கத்தைக் கேட்பது, (இரண்டாவது) நரகத்திலிருந்து அவனிடம் பாதுகாவல் தேடுவது.
யார் இம்மாதத்தில் ஒரு நோன்பாளிக்கு வயிறு நிறைய (உணவு) வழங்குவாரோ அவருக்கு என்னுடைய ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்தில் அல்லாஹ் நீர் புகட்டுவான், சொர்க்கம் நுழையும் வரை அவர் ஒரு போதும் தாகிக்க மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸல்மான் (ரலி)
(ibn-khuzaymah-1887: 1887)ثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، ثَنَا يُوسُفُ بْنُ زِيَادٍ، ثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، عَنْ عَلِيِّ بْنِ زَيْدِ بْنِ جُدْعَانَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ سَلْمَانَ قَالَ
خَطَبَنَا رَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – فِي آخِرِ يَوْمٍ مِنْ شَعْبَانَ، فَقَالَ: “أَيُّهَا النَّاسُ قَدْ أَظَلَّكُمْ شَهْرٌ عَظِيمٌ، شَهْرٌ مُبَارَكٌ، شَهْرٌ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ، جَعَلَ اللَّهُ صِيَامَهُ فَرِيضَةً، وَقِيَامَ لَيْلِهِ تَطَوُّعًا، مَنْ تَقَرَّبَ فِيهِ بِخَصْلَةٍ مِنَ الْخَيْرِ، كَانَ كَمَنْ أَدَّى فَرِيضَةً فِيمَا سِوَاهُ، وَمَنْ أَدَّى فِيهِ فَرِيضَةً، كَانَ كَمَنْ أَدَّى سَبْعِينَ فَرِيضَةً فِيمَا سِوَاهُ، وَهُوَ شَهْرُ الصَّبْرِ، وَالصَّبْرُ ثَوَابُهُ الْجَنَّةُ، وَشَهْرُ الْمُوَاسَاةِ، وَشَهْرٌ يَزْدَادُ فِيهِ رِزْقُ الْمُؤْمِنِ، مَنْ فَطَّرَ فِيهِ صَائِمًا كَانَ مَغْفِرَةً لِذُنُوبِهِ، وَعِتْقَ رَقَبَتِهِ مِنَ النَّارِ، وَكَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْتَقِصَ مِنْ أَجْرِهِ شَيْءٌ”. قَالُوا: لَيْسَ كُلُّنَا نَجِدُ مَا يُفَطِّرُ الصَّائِمَ. فَقَالَ: “يُعْطِي اللَّهُ هَذَا الثَّوَابَ مَنْ فَطَّرَ صَائِمًا عَلَى تَمْرَةٍ، أَوْ شَرْبَةِ مَاءٍ، أَوْ مَذْقَةِ لَبَنٍ، وَهُوَ شَهْرٌ أَوَّلُهُ رَحْمَةٌ، وَأَوْسَطُهُ مَغْفِرَةٌ، وَآخِرُهُ عِتْقٌ مِنَ النَّارِ، مَنْ خَفَّفَ عَنْ مَمْلُوكِهِ غَفَرَ اللَّهُ لَهُ، وَأَعْتَقَهُ مِنَ النَّارِ، وَاسْتَكْثِرُوا فِيهِ مِنْ أَرْبَعِ خِصَالٍ: خَصْلَتَيْنِ تُرْضُونَ بِهِمَا رَبَّكُمْ، وَخَصْلَتَيْنِ لَا غِنًى بِكُمْ عَنْهُمَا، فَأَمَّا الْخَصْلَتَانِ اللَّتَانِ تُرْضُونَ بِهِمَا رَبَّكُمْ، فَشَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَتَسْتَغْفِرُونَهُ، وَأَمَّا اللَّتَانِ لَا غِنًى بِكُمْ عَنْهُمَا، فَتَسْأَلُونَ اللَّهَ الْجَنَّةَ، وَتَعُوذُونَ بِهِ مِنَ النَّارِ، وَمَنْ أَشْبَعَ فِيهِ صَائِمًا، سَقَاهُ اللَّهُ مِنْ حَوْضِي شَرْبَةً لَا يَظْمَأُ حَتَّى يَدْخُلَ الْجَنَّةَ”
Ibn-Khuzaymah-Tamil-.
Ibn-Khuzaymah-TamilMisc-.
Ibn-Khuzaymah-Shamila-1887.
Ibn-Khuzaymah-Alamiah-.
Ibn-Khuzaymah-JawamiulKalim-1785.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
இதில் வரும் علي بن زيد القرشي அலி பின் ஸைத் என்பவர் பலவீனமானவர்.
- இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
அவர்கள், இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்பதால் ஆதாரமாக எடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். - அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்றோர் இவர் பலவீனமானவர் என கூறியுள்ளனர்.
நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். பாகம்: 7 பக்: 322.
وقال ابن خزيمة : لا أحتج به لسوء حفظه
تهذيب التهذيب: (3 / 162)
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு குஸைமா-1887, ஷுஅபுல் ஈமான்-3336, …
சமீப விமர்சனங்கள்